ரிது தால்மியா(சமையல் கலைஞா்)
ரிது தால்மியா | |
|---|---|
| பிறப்பு | 1972 (அகவை 53–54) கொல்கத்தா , மேற்கு வங்காளம், இந்தியா |
| பணி | பிரபல சமையல் கலைஞர், உணவக உரிமையாளர், LGBT ஆர்வலர் |
| அறியப்படுவது | இத்தாலிய உணவு வகைகள் |
ரிது தால்மியா (Ritu Dalmia) (பிறப்பு 1972) இந்தியப் பிரபல சமையல் கலைஞர் மற்றும் உணவக உரிமையாளர் ஆவார். இவர் தில்லியில் உள்ள பிரபலமான இத்தாலிய உணவகமான 'திவா'வின் சமையல் கலைஞர் மற்றும் இணை உரிமையாளர் ஆவார். இவர் இந்த உணவகத்தை 2000ஆம் ஆண்டில், இணை நிறுவனர் கீதா பல்லாவுடன் இணைந்து "ரிகா ஃபுட்" என்ற கூட்டாண்மை நிறுவனத்தின் பெயாில் நிறுவினார்.[1] இந்நிறுவனத்தின் மற்ற உணவகங்களில் 'லேட்டிட்யூட் 28' மற்றும் 'கஃபே திவா' ஆகியவை அடங்கும்.[2][3] இவர் என்டிடிவி குட் டைம்ஸ் தொலைக்காட்சிக்காக 'இத்தாலியன் கானா' என்ற சமையல் நிகழ்ச்சியை மூன்று தொடா்களுக்குத் தொகுத்து வழங்கினார். மேலும் 2009ஆம் ஆண்டில் இதே பெயரில் தனது முதல் சமையல் புத்தகத்தையும் வெளியிட்டார்.[4][5]
இவர் 2 பிப்ரவரி 2012 முதல் என்டிடிவி குட் டைம்ஸ் தொலைக்காட்சியில் 'டிராவலிங் திவா' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.[6]
தால்மியா ஒரு லெஸ்பியன் மற்றும் ஒரு முக்கிய பாலின சிறுபான்மையினர் மற்றும் மாற்றுப் பாலினத்தவருக்கு உரிமை கோரும் ஆர்வலர் ஆவார். சூன் 2016இல், தால்மியா மற்றும் இச்சமூகத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து பேர், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377ஐ எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தனர்.[7] இதன் விளைவாக, 2018ஆம் ஆண்டு நவதேஜ் சிங் ஜோஹர் மற்றும் பலர் எதிர் இந்திய யூனியன் வழக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் உச்ச நீதிமன்றம் ஒருமனதாக, "ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயதுவந்தோரின் முழு சம்மதத்துடன் கூடிய பாலியல் நடத்தையை குற்றமாக்கும் வரையில்" இந்தச் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவித்தது.[8]
தொழில் வாழ்க்கை
[தொகு]கொல்கத்தாவில் ஒரு மார்வாரி வணிகக் குடும்பத்தில் பிறந்த இவர்,[9][10][11] தனது 16 வயதில் பளிங்குக் கல் வியாபாரத்தில் சேர்ந்தார். இவரது பணிக்காக மூலப்பொருட்களைத் தேடி இத்தாலிக்கு சென்றாா். அங்கு இவர் இத்தாலிய உணவு வகைகளின் மீது ஆர்வம் கொண்டு இதைப் பற்றி மேலும் அறியத் தொடங்கினார்.
1993ஆம் ஆண்டில், தனது 22 வயதில், தால்மியா தில்லியின் கவுசு காசு கிராமத்தில் 'மெசாலூனா' என்ற தனது முதல் உணவகத்தைத் தொடங்கினார். இது "இத்தாலிய சாயலுடன்" கூடிய மத்திய தரைக்கடல் உணவு வகைகளில் நிபுணத்துவம் பெற்றது. இந்த உணவகம் வெற்றி பெறவில்லை. இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இதை விற்றுவிட்டார்.
1996ஆம் ஆண்டில், தால்மியா இலண்டனுக்கு குடிபெயர்ந்தார்.[12] இங்கு இவர் ஆண்டி வர்மாவுடன் இணைந்து கிங்சு சாலையில் முதல் இந்திய உயர்தர உணவகத்தைத் திறந்தார். இந்த உணவகம் பெரும் வெற்றி பெற்று நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், இலண்டனில் குடியேற முடியாததால், தால்மியா தனது உணவகப் பங்குகளை வெர்மாவுக்கு விற்றுவிட்டு, 2000ஆம் ஆண்டில் தில்லிக்குத் திரும்பினார். இதே ஆண்டில், இவர் கீதா பல்லாவுடன் இணைந்து கிரேட்டர் கைலாஷ் II-இல் 'திவா' இத்தாலிய உணவகத்தைத் திறந்தார்.[1][13] இது இன்றும் டெல்லியில் ஒரு பிரபலமான உணவகமாகத் தொடர்கிறது.[14][15]
தில்லியின் சாணக்கியபுரியில் உள்ள இத்தாலிய தூதரகத்தின் இத்தாலிய கலாச்சார மையத்தில் உள்ள கஃபேவைத் தவிர,[13] இவர் கிரேட்டர் கைலாஷ் I-இல் 'திவா கஃபே', தில்லியின் அலையன்ஸ் பிரான்சைஸில் 'லேட்டிட்யூட் 28' மற்றும் ஹவுஸ் காஸ் கிராமத்தில் 'திவா பிக்கோலா' ஆகியவற்றையும் நடத்தி வருகிறார். தால்மியா ஒரு கேட்டரிங் தொழிலையும் நிறுவியுள்ளார்.[2][9]
2007ஆம் ஆண்டில், இவர் என்டிடிவி குட் டைம்ஸில் "இத்தாலியன் கானா" என்ற தொலைக்காட்சித் தொடரைத் தொகுத்து வழங்கத் தொடங்கினார். பின்னர் இவர் 2009இல் இதே பெயரில் ஒரு சமையல் புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி மூன்று தொடா்கள் நீடித்தது.இது பல தொலைக்காட்சி விருதுகளை வென்றது.[10][16] அவர் டெல்லியில் உள்ள அசோக் ஹோட்டலில் உள்ள ஸ்பா உணவகமான திவத்ராவில் ஆலோசனை சமையல் கலைஞராக இருந்து வருகிறார்.[17]
திசம்பர் 2011இல் இத்தாலி அரசாங்கத்தால் இவருக்கு இத்தாலிய ஒற்றுமையின் நட்சத்திர விருது வழங்கப்பட்டது.[18]
தால்மியா 2012இல் 'டிராவலிங் டிவா: ரெசிபீஸ் ஃப்ரம் அரவுண்ட் தி வேர்ல்ட்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதில் ஐரோப்பிய, ஆசிய மற்றும் மத்திய கிழக்கு உணவு வகைகளிலிருந்து இவருக்குப் பிடித்த சமையல் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன.[12][19]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "The food DIVA". .The Hindu. 11 December 2004 இம் மூலத்தில் இருந்து 10 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120210195401/http://www.hindu.com/mp/2004/12/11/stories/2004121101500301.htm.
- 1 2 "Ritu Dalmia talks travel". Conde Nast Traveller. 16 December 2011.
- ↑ "Chef's Delight – Taking on the stars". Mint (newspaper). 17 March 2008. http://www.livemint.com/2008/03/17004301/Chef8217s-Delight---Taking.html.
- ↑ "Italian Khana". NDTV Good Times. Archived from the original on 16 June 2017. Retrieved 9 March 2012.
- ↑ "Something's Cooking: For 17 years now, Ritu Dalmia has been serving Italian Khana. And she is a purist". Outlook Business. Retrieved 9 March 2012.
{{cite web}}: CS1 maint: deprecated archival service (link) - ↑ "Traveling Diva". NDTV Good Times. Archived from the original on 3 March 2016. Retrieved 28 March 2012.
- ↑ "Many ups and downs in battle against 377" (in en-US). The Indian Express. 2018-01-11. http://indianexpress.com/article/explained/many-ups-and-downs-in-battle-against-ipc-section-377-homosexuality-lgbtq-5019604/.
- ↑ Safi, Michael (2018-09-06). "Campaigners celebrate as India decriminalises homosexuality". the Guardian (in ஆங்கிலம்). Retrieved 2018-09-09.
- 1 2 Vir Sanghvi (21 August 2008). "Rude Food: Portrait of a Diva". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 7 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090707070257/http://blogs.hindustantimes.com/rude-food/2008/07/21/portrait-of-a-diva/#more-69.
- 1 2 "Ritu Dalmia, author of cookbook travelling diva, whips it up". The Telegraph (Kolkata). 30 January 2012 இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304091411/http://www.telegraphindia.com/1120130/jsp/entertainment/story_15067291.jsp.
- ↑ Dalmia, Ritu (12 August 2016). "My freedom to love: 'I was 23 when I realised I was gay. I told my parents. The next day they sent a box of mangoes for my partner at the time'" (in en). India Today. https://www.indiatoday.in/magazine/independence-day-special/story/20160822-ritu-dalmia-my-freedom-to-love-article-377-lgbt-gay-rights-829406-2016-08-12.
- 1 2 "There's a story behind every dish in this book". India Today. 25 December 2011.
- 1 2 "New-age entrepreneur: young, dynamic and successful". The Tribune (Chandigarh)The Tribune. 16 November 2003. http://www.tribuneindia.com/2003/20031116/spectrum/main1.htm.
- ↑ Pippa De Bruyn; Keith Bain; David Allardice; Shonar Joshi (2010). "Delhi". Frommer's India. John Wiley & Sons. p. 442. ISBN 978-0470602645.
- ↑ Sarina Singh; Lindsay Brown, Mark Elliott, Paul Harding.. (2009). Lonely Planet India. Lonely Planet. p. 151. ISBN 978-1741791518.
{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Italian Khana: Best Cookery Show At The Indian Telly Awards, 2009". NDTV Good Times இம் மூலத்தில் இருந்து 16 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170616134202/http://goodtimes.ndtv.com/Ndtv-Show-Special.aspx?ID=488.
- ↑ "VOTERS SPEAK: Ritu Dalmia". Indian Express. 27 November 2008. http://www.indianexpress.com/news/VOTERS-SPEAK--Ritu-Dalmia/391198.
- ↑ "About the Anchor". NDTV Good Times.
{{cite web}}: CS1 maint: deprecated archival service (link) - ↑ "All Things Food". Indian Express. 15 December 2011. http://www.indianexpress.com/news/all-things-food/887884/0.