ரிதுபர்ணா செங்குப்தா
ரிதுபர்ணா சென் | |
---|---|
ரிதுபர்ணா செங்குப்தா | |
பிறப்பு | ரிதுபர்ணா செங்குப்தா 7 நவம்பர் 1971[1] கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1989–தற்சமயம் வரை |
உயரம் | 1.71 மீட்டர் |
பெற்றோர் | பிராபிர் செங்குப்தா (தந்தை) நந்திதா செங்குப்தா (தாய்) |
வாழ்க்கைத் துணை | சஞ்சய் சக்கர்பூர்தி |
பிள்ளைகள் | அன்கன் (மகன்), ரிசோனா நியா (மகள்) |
வலைத்தளம் | |
www |
ரிதுபர்ணா சென்குப்தா (Rituparna Sengupta பிறப்பு 7 நவம்பர் 1971) இந்தியாவைச் சேர்ந்த நடிகையும் தயாரிப்பாளரும் ஆவார். வங்காள, இந்தி, திரைத்துறைகளில் பணிபுரிந்துள்ளார்.[2][3] ஒரு தேசிய விருது, இரு பிலிம்பேர் விருதுகள், நான்கு பி.எப்.ஜி.ஏ விருதுகள் மற்றும் நான்கு அனலாக் விருதுகளைப் பெற்றுள்ளார்.[4][5]
ரிதுபர்ணா முதலில் தொலைக்காட்சியில் நடிக்க ஆரம்பித்தார்.[6][7] 1989 இல் வங்காளத் தொலைக்காட்சித் தொடரான சதா பைராவில் நடித்தார்.[8] 1992 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற சுவட் பதரேர் தலா என்ற வங்காள திரைப்படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானார். இப்படத்தில் பிரபுத் ராயுடன் நடித்தார்.[9][10] 1994ஆம் ஆண்டு பார்ததோ கோஷ் இணைந்து தீஷ்ராகான் திரைப் படத்தின் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் ப்ரோசென்ஜிர் சட்டர்ஜி மற்றும் சிரன்ஜித் சக்ரபூத் ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பிஜோய் பாஸ்கரின் நாக் பஞ்சமி (1994) திரைப்படத்தில் முதன்முறையாக பிரன்சிக் சாட்டர்ஜியுடன் நடித்தார்.[11] இவர் நடித்த சாகரிக்கா (1998)[12], துமார் அமர் பிரேம் (1998)[13], ரங்கு பூ (1999) ஆகியன வெற்றி திரைப்படங்களாகும்.
1996 ஆம் ஆண்டு கர்நாடக சுபுத்ரா என்ற கன்னட திரைப்படத்தில் பணிபுரிந்தார்[14]. 2013 ஆம் ஆண்டு சொகன்லால் உடன் கதவீடு திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.[15]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]இளம் வயதிலிருந்தே கலைகளில் ஆர்வமாக இருந்தார். ஓவியம், நடனம், பாடல் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றில் ஈடுபாடு காட்டினார்.
மவுன்ட் கார்மெல் பள்ளியில் படித்தார். பின்னர் லேடி பிரபூர்ன் கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம். ஏ பட்டத்திற்கான நவீன வரலாற்றைப் படிக்க துவங்கினார்.[6][16]
சொந்த வாழ்க்கை
[தொகு]சென்குப்தா தனது பால்ய நண்பரும் மொபி ஆப்ஸ் இன் நிறுவனரும் தலைவருமான சஞ்சய் சக்கர்பார்தி என்பவரை 13 டிசம்பர், 1999 ஆம் ஆண்டு திருமணம் புரிந்தார்.[17] இத் தம்பதியினருக்கு அன்கன் என்ற மகனும் ரிசோனா என்ற மகளும் உள்ளனர்.[18]
விருதுகள்
[தொகு]ஆண்டு | விருது |
---|---|
1995 | பாரத் நிர்மன் விருது |
1996 | கல்கத்தா சட்ட சங்கத்தின் காசி நஸ்ருல் இஸ்லாம் பிறப்பு நூற்றாண்டு விருது |
1998 | டஹன் 42 வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது . |
1999 | அனந்தலாக் புரஸ்கார் தகனம் சிறந்த நடிகைக்கான |
2000 | அட்டி சஜானுக்கு சிறந்த துணை நடிகைக்கான ஆனந்தலொக் புர்கர் |
2005 | சிறந்த கிளாமர் ராணிக்கு ஆனந்தலொக் புர்கர் |
2007 | அனுரணன் சிறந்த நடிகைக்கான அனந்தலாக் புரஸ்கார் |
1999 | [[பெங்களூர் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் | பிஎப்ஜேஏ- சிறந்த நடிகை விருது |
2004 | பிஎப்ஜேஏ- சிறந்த நடிகை விருது, ஆலோ |
2006 | பிஎப்ஜேஏ - சிறந்த நடிகை விருது, ட்ரிருஷ்ணா |
2013 | பிஎப்ஜேஏ - சிறந்த நடிகை விருது, முக்ததரா |
1993 | சிறந்த துணை நடிகைக்கான காலக்கார் விருது , ஸ்வெட் பதானார் தலா [19] |
1997 | சிறந்த நடிகைக்கான கலகர் விருது , அபூஜ் மோ [19] |
1998 | காலக்கார் சிறப்பு விருது , மொனரு மானுஷ் [19] |
2001 | சிறந்த நடிகைக்கான கலகர் விருது , சசர்பரி ஜிந்தாபாத் [19] |
2004 | சிறந்த நடிகைக்கான காலக்கார் விருது , மோன்டோ மேயர் உபகியான் [19] |
2006 | சிறந்த நடிகைக்கான கலகர் விருது , துவிடியா பாஸந்தா [19] |
2007 | சிறந்த நடிகைக்கான காலக்கார் விருது , பாத்திரிகமி [19] |
2008 | சிறந்த நடிகைக்கான கலகர் விருது , அனூரன் [19] |
2009 | சிறந்த நடிகைக்கான கலக்கர் விருது , மோன் அமோர் [19] |
2010 | சிறந்த நடிகைக்கான கலக்கர் விருது , அய்யனேட் [19] |
2014 | சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் கிரிடிக்ஸ் விருது , அலிக்குஷ் |
2016 | மிகவும் பிடித்த திரைப்பட நடிகைக்கான ஸ்டார் ஜால்ஷா பரிவார் விருது , "ராஜ்கானி" |
2017 | சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் கிரிடிக்ஸ் விருது , "பிரக்தன்" |
குறிப்புகள்
[தொகு]- ↑ "Rituparna Sengupta Age". StarsFact.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-12.
- ↑ https://starsfact.com/rituparna-sengupta Starfact.com. பார்த்தநாள் 2016-10-12
- ↑ http://www.telegraphindia.com/1121103/jsp/entertainment/story_16152170.jsp#.UoJjenDPVV4 thetelegraph. calcutta, India
- ↑ https://books.google.com/books?id=D_bYWjJOe9cC&pg=PA59 lonelyplanat pp.59- பார்த்தநாள் 24-06-2012
- ↑ http://www.newindianexpress.com/entertainment/2013/feb/19/bold--beautiful-451983.html newsindianexpress.com 19-02-2013 பார்த்தநாள் 13-09-2018
- ↑ 6.0 6.1 https://www.deccanherald.com/content/91010/i-dont-want-lose-grip.html www.deccanherald.com. 24-08-2010 பார்த்தநாள் 13-9-2018
- ↑ https://www.rediff.com/movies/1999/aug/05ritu.htm rediff.com. பார்த்தநாள் 2018-12-27
- ↑ https://filmzack.wordpress.com/2017/06/06/the-point-where-debasree-roy-is-different-from-rituparna-sengupta/
- ↑ https://web.archive.org/web/20110606085751/http://www.gomolo.in/People/People.aspx?pplid=11837
- ↑ https://web.archive.org/web/20160602174839/http://iffi.nic.in/Dff2011/Frm40thNFAAward.aspx
- ↑ https://www.cinestaan.com/movies/naag-panchami-35122
- ↑ https://www.youtube.com/watch?v=wulDdgDIeNk
- ↑ https://www.youtube.com/watch?v=BQMEr1YMdnk&t=1314s
- ↑ https://www.youtube.com/watch?v=bG4VnumxZSg
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-22. பார்க்கப்பட்ட நாள் 2019-02-10.
- ↑ http://www.gomolo.in/People/PeopleBiographyUser.aspx?pplid=11837&bioID=696398
- ↑ http://www.telegraphindia.com/1100516/jsp/graphiti/story_12450812.jsp
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/regional/bengali/news-interviews/Rituparna-Sengupta-detained-at-Toronto-Airport/articleshow/20942536.cms?
- ↑ 19.00 19.01 19.02 19.03 19.04 19.05 19.06 19.07 19.08 19.09 "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 25 April 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-10-16.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)