ரிதாபாரி சக்ரவர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிதாபாரி சக்ரவர்த்தி
ரிதாபாரி
2021 அக்டோபரில் ரிதாபாரி சக்ரவர்த்தி
தாய்மொழியில் பெயர்ঋতাভরী চক্রবর্তী
பிறப்பு1993/1994 (அகவை 29–30)
கொல்கத்தா, இந்தியா
மற்ற பெயர்கள்பவுலின்
பணி
  • நடிகை
  • தயாரிப்பாளர்
  • பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்போது வரை
அறியப்படுவதுஓகோ போது சுந்தரி
பெற்றோர்
வலைத்தளம்
www.ritabharic.net

ரிதாபாரதி சக்ரவர்த்தி ( Ritabhari Chakraborty ) ஒரு இந்திய வங்காளத் திரைப்பட நடிகை. இந்தியத் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் இவர் ஒரு முக்கியமானவராக உள்ளார். பெங்காலியில் வெளியான ஷேஷ் தேகே ஷுரு (2019), பிரம்மா ஜானென் கோபன் கொம்மோட்டி (2020) மூலம் வணிக ரீதியாக வெற்றிப் பெற்றத் திரைப்படங்களில் நடித்தார்.[1]

இவர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவால் "கிழக்கில் 2018 ஆம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க பெண்ணாக" வாக்களிக்கப்பட்டார். அத்துடன் "நாட்டின் சிறந்த 50 விரும்பத்தக்க பெண்களில்" ஒருவராகவும் [2] தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மேற்கு வங்காளத்தின் இளைய தயாரிப்பாளரும் ஆவார். பல சமூக தளங்களில் 3 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடன், [3] [4] முகநூல் நடத்தும் "சமூக ஊடகங்களை" நன்மைக்காகப் பயன்படுத்துவதற்கு மிகவும் நம்பிக்கைக்குரிய இளைஞர் குறியீடுகளில் ஒருவராக ரிதாபாரி பட்டியலிடப்பட்டார். [5] இந்த நிகழ்வை பிரியங்கா சோப்ரா நிர்வகித்தார். ரிதாபாரி தனது கருத்துக்களை தடைகள் இல்லாமல் குரல் கொடுப்பதாக அறியப்படுகிறார். தனது சொந்த பயணம் மற்றும் அனுபவங்களை டெட், [6] ஜோஷ் டாக்ஸ், [7] Ink Talk போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பகிர்ந்து கொள்கிறர். ஓகோ போது சுந்தரி என்ற பிரபல வங்காளத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பெண் கதாநாயகியாக இவர் தொலைக்காட்சியில் முதல்முறையாக தோன்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே விளம்பரங்களில் தோன்றத் தொடங்கினார். பிரபல இந்திய பெங்காலி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஓகோ போது சுந்தரியின் பெண் கதாநாயகியாக 15 வயதில் முதல்முறையாக தோன்றினார். [8] [9] உயர்நிலைப் பள்ளியை முடித்த பிறகு, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றைத் தொடர முடிவு செய்தார். 2021 ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அங்கு பலத் திட்டங்களில் பங்கு கொண்டார்.[10] [11] [12]

சான்றுகள்[தொகு]

  1. "Ritabhari Chakraborty website". Archived from the original on 7 ஆகஸ்ட் 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Shree, Nagini (7 June 2019). "Top 50 Most Desirable Women Ritabhari Chakraborty Hot In Bikini Pics". StarBiz.com. பார்க்கப்பட்ட நாள் 27 June 2020.
  3. "Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty) • Instagram photos and videos". instagram.com.[முதன்மையற்ற ஆதாரம் தேவை]
  4. "Ritabhari Chakraborty" – via Facebook.[முதன்மையற்ற ஆதாரம் தேவை]
  5. "Video". பார்க்கப்பட்ட நாள் 27 June 2020 – via YouTube.
  6. "Video". பார்க்கப்பட்ட நாள் 27 June 2020 – via YouTube.
  7. "Video". பார்க்கப்பட்ட நாள் 27 June 2020 – via YouTube.
  8. "Ritabhari Chakraborty website". Archived from the original on 7 ஆகஸ்ட் 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)"Ritabhari Chakraborty website" பரணிடப்பட்டது 2022-08-07 at the வந்தவழி இயந்திரம். Retrieved 25 February 2020.
  9. "Actress by accident". The Telegraph (India).
  10. Chakraborty, Shamayita. "Ritabhari attends online classes after surgery, likely to be discharged from hospital today - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 June 2021.
  11. Sarkar (18 June 2021). "Ritabhari Chakraborty completed her graduation from university of california". zeenews.india.com. zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 18 June 2021.
  12. Sarkar (23 June 2021). "UCLA School Of Theater, Film & Television's Professional Programs Names 2021 Writing Competition Winners". Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் 23 June 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிதாபாரி_சக்ரவர்த்தி&oldid=3702537" இலிருந்து மீள்விக்கப்பட்டது