ரிச்சர்ட் லீக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிச்சர்ட் லீக்கி
Richard Leakey
1986 இல் லீக்கி
பிறப்புஇரிச்சர்டு எர்சுக்கின் பிரேரே லீக்கி
(1944-12-19)19 திசம்பர் 1944
நைரோபி, கென்யா
இறப்பு2 சனவரி 2022(2022-01-02) (அகவை 77)
தேசியம்கென்யர்
துறைதொல்மானிடவியல்; காட்டுயிர் பேணல்
பணியிடங்கள்இசுட்டோனி புரூக் பல்கலைக்கழகம், நியூயார்க்
விருதுகள்கபார்டு பதக்கம் (1994)
துணைவர்கள்
  • மார்கரெட் குரொப்பர் (1965-1969, மணமுறிவு)
  • மீவ் எப்ப்சு (1970)
பிள்ளைகள்3

ரிச்சர்ட் லீக்கி (Richard Leakey FRS; 19 திசம்பர் 1944 – 2 சனவரி 2022) கென்னியத் தொல்மானிடவியலாளரும், அரசியல்வாதியும் ஆவார். லீக்கே கென்னியாவில் தொல்லியலாளராகவும், காட்டுயிர் பேணல் முதலானவற்றிலும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கென்னியாவின் தேசிய அருங்காட்சியகத்தின் பணிப்பாளராகவும், வைல்ட்லைஃப் டிரெக்ட் எனும் அரசு சாரா அமைப்பின் நிறுவுனராகவும் கென்ய காட்டுயிர் சேவையின் தலைவராகவும் பணியாற்றினார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஆரம்ப வருடங்கள்[தொகு]

சிறுவனாக இருக்கும் போது லீக்கே பெற்றோருடன் நைரோபியில் வாழ்ந்தார். தந்தை லூயிஸ் லீக்கே கொறின்டன் அருங்காட்சியகத்தில் பொறுப்பாளராகவும் தாயார் மேரி லீக்கே அவர்கள் லீக்கே அகழ்வு நிறுவனத்தில் பணிப்பாளராகவும் இருந்தனர். இவரது சகோதரர்கள் ஜொனாதன் லீக்கே மற்றும் பிலிப் லீக்கே. லீக்கே சகோதரர்கள் மிக உறுசுறுப்பான குழந்தைப் பருவத்துடன் வளர்ந்தனர். மட்டக்குதிரை கழகத்தில் உறுப்பினாரவும் இருந்தனர்.

மண்டையோட்டில் உடைவு[தொகு]

1956இல், அவரது 11வது வயதில், லீக்கே தனது குதிரையிலிருந்து விழுந்தார். இதனால் அவரது மண்டையோட்டில் உடைவு ஏற்பட்டது. இந்த நிகழ்வு ஒரு வகையில் இவரது பெற்றொரது திருமண வாழ்க்கையைக் காப்பாற்றியது. தந்தை லூயிஸ் மனைவியை பிரிந்து தனது செயலாளர் ரோசலி ஒஸ்போனுடன் வாழ்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து நிகழ்ந்தது. லீக்கே தனது தந்தையிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டதன் பேரில் ரோசலியுடன் வாழச் செல்வதை கைவிட்டு குடும்பம் சில ஆண்டுகள் அமைதியாய் வாழ்ந்தது.[1]

பதின்ம வயது தொழில்முனைவாளர்[தொகு]

ரிச்சேர்ட் லீக்கே தனது பெற்றொர்களிடம் கடனாகப் பெற்ற 500 பவுண் பணத்துடன் லாண்ட் றோவர் ஒண்றில் என்புக்கூடு சேகரிக்கும் வியாபாரத்தில் கமோயா கிமேயு உடன் ஈடுபட்டார். இவர் ஏற்கனவே குதிரைக் காரனாகவும், லாண்ட் ரோவர் திருத்துனராகவும், தொழில்சாரா தொல்பொருளாய்வாளராகவும், பயணத் தலைவராகவும் இருந்ததால் இலகுவில் என்புகளை அடையாளங்காணக் கற்றுக் கொண்டார்.[2]

திருமணம்[தொகு]

1964இல் நற்றோன் ஏரிக்கான தனது இரண்டாவது பயணத்தில் லீக்க்கே மார்க்கிறட் குரொப்பர் எனும் தொல்லியலாளரைச் சந்தித்தார். மார்க்கிறட் இங்கிலாந்து திரும்பிய போது, லீக்கே பட்டப் பாடநெறி தொடர்வதற்கும் மார்க்கிறட்டுடன் நன்கு அறிவு கொண்டவராகவும் இருக்க விரும்பினார். ஆறுமாதத்தில் தனது உயர் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தார். அதே வேளை மார்க்கிறட் எடின்பறோ பல்கலைக்கழகத்தில் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். கல்லூரிப் படிப்புக்கான அனுமதிப்பரீட்சையில் சித்திபெற்றிருந்தார். ஆயினும், 1965இல் மார்க்கிறட் திருமணஞ் செய்து கென்யா திரும்புவதற்கு உத்தேசித்திருந்தார். லீக்கேயின் தந்தை தனது நிறுவனமான புதைதின்மவியல் மையத்தில் பணிக்கமர்த்தினார். பிரிகோ ஏரியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டார். தனது வேட்டைக்குழு தொழில்துறையில் நல்ல இலாபம் ஈட்டினார். நைரோபியில் வீடு ஒன்றை வாங்கினார். 1969 இல் மகள் அன்னா பிறந்தார். அதே ஆண்டு மார்க்கிறட்டுடன் மண முறிவு ஏற்பட்டது. 1970 இல் மீவ் எப்ஸ் உடன் மறுமணம் நடந்தது. இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்றனர். 1972இல் லூயீஸ், 1974இல் சமீரா பிறந்தனர்.[3]

தொல்லுயிரியல்[தொகு]

லீக்கேயின் தொல்லுயிரியலாளர் தொழில் ஒரு நாளில் ஆரம்பமானதல்ல். லீக்கே தனது பெற்றோருடன் ஒவ்வொரு அகழ்வாய்விலும் கலந்து கொண்டார். சிறுவனாக இருந்தபோதில் இருந்து படிப்படியாக கற்றுக் கொண்டதுடன் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார்.

ரிச்சேர்ட் லீக்கே அப்போதிருந்த ஆற்றல்மிக்க கென்யர்களைக் கொண்டு கென்னியா அருங்காட்சிய சங்கத்தை உருவாக்கினார். அவர்களின் இலக்காக கொன்யாவில் தேசிய அருங்காட்சியக விருத்தியாக இருந்தது. ரிச்சேர்ட் லீக்கேக்கு முக்கியமான இடம் இதில் தரப்பட்டது.

காட்டுயிர் காப்பு[தொகு]

1989இல் ரிச்சேர்ட் லீக்கே காட்டுயிர் காப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் தலைவராக அரச தலைவர் டானியல் அரப் மொயினால் நியமிக்கப்பட்டார். யானை வேட்டை குறித்து கென்யான் பன்னாட்டுக்கான குரலாக இவரது நியமனம் அமைந்தது.[4] இந்த திணைக்களம் கென்யா காட்டுயிர் சேவை என 1990இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது லீக்கே இதன் முதல் தலைவரானார்.[5] இதனால் வேட்டையாடும் கலாசாரம் பெருமளவு குறைந்தது. லீக்கேயின் கென்யா காட்டுயிர் சேவை என்ற பெயர்மாற்றம் உலக வங்கி 140 மில்லியன் அமெரிக்க டாலர் மானியம் வழங்க ஏதுவாகியது. பன்னாட்டு செய்திகளில் அரச தலைவர் மோயி , லீக்கே பற்றிய செய்திகள் பரவின. 1989இல் 12 தொன் யானைத்தந்தங்கள் நைரோபி தேசிய பூங்காவில் எரித்து அழிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Morell, Virginia (1995). Chapter 17, "Chimpanzees and Other Loves", in Ancestral Passions: The Leakey Family and the Quest for Humankind's Beginnings. ISBN 978-0684824703.
  2. Richard E. Leakey in The Making of Mankind (1981), Chapter 1, p. 1, says he wished to be "free" of his parents' world, a sentiment both Louis and Mary must have understood very well, even though they opposed his freedom.
  3. Talk Origins – Richard Leakey
  4. "'Kenya's wildlife – Predictions for the next decade' with Dr Richard Leakey". Royal African Society. Archived from the original on நவம்பர் 11, 2019. பார்க்கப்பட்ட நாள் November 5, 2016.
  5. Anthony Ham; Stuart Butler; Dean Starnes (2012). Lonely Planet Kenya. Lonely Planet. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781743213063. https://books.google.com/books?id=jvI-JTP35jMC&vq=leakey. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_லீக்கி&oldid=3860097" இலிருந்து மீள்விக்கப்பட்டது