ரிச்சர்ட் மாஸ்ஸி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முனைவர் ரிச்சர்ட் மாஸ்ஸி 1977 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 14 ஆம் நாள் பிறந்தார். இயற்பியல் அறிஞரான இவர் குயின் மேரியின் இலக்கணப் பள்ளியில் பயின்றார். டர்ஹாம் பல்கலைக் கழகத்தில் கணிதம் மற்றும் இயற்பியல் பட்டம் பெற்றார். மேலும் 2003 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை நிறைவுச் செய்தார். தற்போது டர்ஹாம் பலகலைக் கழகத்தில் அண்டவியல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னர் கலிபோர்னியாவில் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றினார். மேலும் எடின்பர்க் பல்கலைக் கழகத்தின் வானியல் நிறுவனத்தின் சிறந்த மேம்பட்ட அறிஞராகவும் திகழ்ந்தார்.

மாஸ்ஸி மிகப்பெரிய அளவிலான பரப்பளவு மற்றும் மோதல்களின் நடத்தை முதல் முப்பரிமான வரைப்படம் உள்ளிட்ட இருண்ட விஷயங்களை பற்றி நன்கு அறிந்தவராக திகழ்ந்தார்.  அவருக்கு 2011 ஆம் ஆண்டு பிளிப் லீவர்ஹூம் விருது வானியல் மற்றும் வானியிற்பியல் துறைக்கு வழங்கப்பட்டது.  2013 ஆம் ஆண்டு பிபிசி யின் ஹாரிசன் ஆவணம் ”ஹவ் பிக் யுனிவர்ஸ்” உட்பட பல தொலைக் காட்சி ஆவணங்களிலும் ஆன்லைனிலும் இடம் பெற்று இருக்கிறார்.

https://en.wikipedia.org/wiki/Richard_Massey

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_மாஸ்ஸி&oldid=2723916" இருந்து மீள்விக்கப்பட்டது