உள்ளடக்கத்துக்குச் செல்

ரிச்சர்ட் டி. ரைடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிச்சர்ட் டி. ரைடர்
2012-ல் ரைடர்
பிறப்புரிச்சர்ட் ஹூட் ஜாக் டட்லி ரைடர்
3 சூலை 1940 (1940-07-03) (அகவை 83)
இலண்டன், மேரில்போன்
கல்வி
பணி
அறியப்படுவதுவிலங்குரிமை ஆர்வலர், விலங்கு ஆராய்ச்சியை எதிர்த்தல், "விலங்கினவாதம்," "வலிவாதம்" ஆகிய சொற்களை உருவாக்கியது
வாழ்க்கைத்
துணை
ஆட்ரே ஜேன் ஸ்மித்
(தி. 1974; ம.மு. 1999)
பிள்ளைகள்2
உறவினர்கள்க்ரான்வில் ரைடர் (1799–1879) (கொள்ளுத் தாத்தா)
வலைத்தளம்
www.richardryder.com

ரிச்சர்ட் ஹூட் ஜாக் டட்லி ரைடர் (Richard Hood Jack Dudley Ryder) (பிறப்பு: ஜூலை 3, 1940) ஒரு ஆங்கில எழுத்தாளரும், உளவியலாளரும், விலங்குரிமை அறிஞருமாவார்.

ரைடர் 1970களில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு விலங்குகளின் பயன்பாடு, குறிப்பாக விலங்குப்பண்ணை விவசாயம் மற்றும் விலங்கு ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்த மேதைகளின் குழுவான ஆக்ஸ்போர்டு குழுமத்தின் உறுப்பினராக அறியப்படுகிறார்.[1] அந்த சமயத்தில் ரைடர் ஆக்ஸ்போர்டில் உள்ள வார்ன்ஃபோர்ட் மருத்துவமனையில் மருத்துவ உளவியலாளராக பணிபுரிந்து வந்தார். மேலும் அவரே ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் விலங்கு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார்.[2]

1970-ம் ஆண்டில், மனிதர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்புகளிலிருந்து மனிதரல்லா விலங்குகள் விலக்கி வைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும் "விலங்கினவாதம்" என்ற சொல்லை முதன்முதலில் ரைடர் உருவாக்கினார். 1977-ல் அவர் ஆர்.எஸ்.பி.சி.ஏ. (RSPCA) கவுன்சிலின் தலைவராக ஆனார். 1979 வரை அதில் பணியாற்றிய அவர் ஆகஸ்ட் 1977-ல் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் முதன்முறையாகக் கல்வித்துறை சார்ந்த விலங்குரிமை மாநாடு ஒன்றை நடத்த பெரிதும் உதவியாக இருந்தார். இந்த மாநாட்டில் 150 பேர் கையொப்பமிட்ட "விலங்கினவாதத்திற்கு எதிரான பிரகடனம்" ஒன்று தயாரிக்கப்பட்டது.[3]

1970 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடையே இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்டபூர்வ விலங்குப் பாதுகாப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ரைடர் உதவினார்.[4] ரைடர் விலங்கு ஆராய்ச்சி, விலங்குரிமை, அரசியல்சார் நெறிமுறைகள் பற்றிய பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் விக்டிம்ஸ் ஆஃப் சயின்ஸ் (1975), அனிமல் ரெவல்யூஷன் (1989), பெய்னிசம்: எ மாடர்ன் மோராலிட்டி (2001) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 2020 முதல் ரைடர் ஆர்.எஸ்.பி.சி.ஏ. அமைப்பின் தலைவராக உள்ளார்.[5]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள் தரவுகள்[தொகு]

  1. Ryder, Richard D. (2009). "The Oxford Group," in Marc Bekoff (ed.). The Encyclopedia of Animal Rights and Animal Welfare. Greenwood, pp. 261–262.
  2. Notes on the Contributors, in Stanley and Roslind Godlovitch and John Harris (eds.) (1971). Animals, Men and Morals. Grove Press.
  3. "A Declaration against Speciesism", in David Paterson and Richard D. Ryder (1979). Animals' Rights – A Symposium. Centaur Press Ltd.
    • Ryder, Richard D. (1979). "The Struggle Against Speciesism," in Paterson and Ryder, op cit.
  4. "I've been fighting for better farm animal welfare for 50 years". rspca.org.uk. 2020. பார்க்கப்பட்ட நாள் 11 March 2022.
  5. "TRUSTEES' REPORT AND ACCOUNTS 2019". rspca.org.uk. 2019. பார்க்கப்பட்ட நாள் 11 March 2022.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_டி._ரைடர்&oldid=3698893" இலிருந்து மீள்விக்கப்பட்டது