உள்ளடக்கத்துக்குச் செல்

ரிசானா நபீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிசானா நபீக்
பிறப்புரிஸானா நஃபீக்
(1988-02-04)4 பெப்ரவரி 1988
மூதூர், இலங்கை
இறப்பு9 சனவரி 2013(2013-01-09) (அகவை 24)
தவாத்மி, ரியாத், சவூதி அரேபியா
இறப்பிற்கான
காரணம்
மரண தண்டனை விதிக்கப்பட்டு
தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்
இருப்பிடம்மூதூர்
தேசியம்இலங்கை சோனகர்
கல்விஇமாம் சாபி வித்தியாலயம், மூதூர்[1]
பணிவீட்டுப் பணிப்பெண்
சமயம்இலங்கைச் சோனகர்
பெற்றோர்நபீக்,
பரீனா

ரிசானா நபீக் (Rizana Nafeek, 4 பெப்ரவரி 1988 – 9 சனவரி 2013) என்பவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு பணிப்பெண். இவர் சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் காலத்தில் மனிதக்கொலை புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கழுத்து வெட்டப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.[2] இவரது மரண தண்டனையை நிறுத்துமாறு இலங்கை அரசு கோரியபோதும், அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

ரிசானா 1988 பெப்ரவரி 4 இல் கிழக்கிலங்கையில் மூதூர் கிராமத்தில் ஓர் ஏழை முசுலிம் குடும்பத்தில் பிறந்தார்.[3][4][5][6] குடும்பத்தின் ஏழ்மை காரணமாக இவர் தனது ஆரம்பப் படிப்பை இடையிலேயே நிறுத்திக் கொண்டார்.

சவூதி அரேபியாவில் பணி

[தொகு]

தனது 17 வது அகவையில் 2005 மே 4 இல் பணிப்பெண்ணாக தொழில் வாய்ப்புப் பெற்று சவூதி அரேபியா சென்றார். சிறுவர்கள் வெளிநாடுகளில் தொழில் புரிய இலங்கையில் தடை உள்ளதால், இவரது வயது தொழில்முகவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. தலைநகர் ரியாதில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள தவாதமீசா என்ற இடத்தில் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக தனது தொழிலைத் தொடங்கினார். வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளைக் கவனித்துக் கொண்டார்.

2005 மே 22 இல், குழந்தையின் தாய் தனது குழந்தையை ரிசானாவின் பராமரிப்பில் விட்டு விட்டு வெளியில் சென்றிருந்த போது, குழந்தைக்கு சிறிது நேரத்தில் புட்டிப்பால் ஊட்டும் போது குழந்தை மூச்சுத் திணறி இறந்து விட்டது. தான் அக்குழந்தையைக் கொலை செய்யவில்லை என்றும், பாலூட்டும் போது மூச்சுத் திணறி இறந்ததாகவும் ரிசானா தெரிவித்திருந்தார்.[7][8][9][10] ஆனாலும், குழந்தையின் பெற்றோரும், காவல்துறையினரும் நபீக் கொலை செய்ததாக வாதிட்டனர்.[11]

மரண தண்டனை

[தொகு]

காவல்துறையினர் ரிசானாவிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்று வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணையின் போது ரிசானாவிற்கு மொழி பெயர்ப்பாளராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ரிசானா தரப்பில் வாதாடுவதற்கு யாருமற்ற ஒரு சூழலில் சட்ட ஆலோசனையைக் கூட பெற்றுக் கொள்ள முடியாதவராக இவர் இருந்தார். 2007 சூன் 16 ஆம் நாள் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச ரிசானாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு இரண்டு தடவைகள் சவூதி மன்னரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவரது விடுதலைக்காக மனித உரிமை அமைப்புகள் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.[12] 2010 அக்டோபரில், வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ் ரிசானாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.[13] ஆங்காங்கைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் எலிசபெத் மகாராணியிடம் இவ்விடயத்தில் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.[14]

2013 சனவரி 9 ஆம் நாள் புதன்கிழமை உள்ளுர் நேரப்படி சவூதி அரேபியாவில் தவாத்மி சிறையில் முற்பகல் 11.40 (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.10) மணியளவில் ரிசானாவின் மரணதண்டனை அவரது கழுத்து வெட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டது.[15][16][17][18][19]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Haviland, Charles (18 நவம்பர் 2010). "Desperate wait of condemned Sri Lanka maid's family". பிபிசி. http://www.bbc.co.uk/news/world-south-asia-11773036. 
  2. "Sri Lankan maid Rizana Nafeek beheaded in Saudi Arabia". பிபிசி. 9 சனவரி 2013. http://www.bbc.co.uk/news/world-asia-20959228. பார்த்த நாள்: 10 சனவரி 2013. 
  3. Kannangara, Ananda (31 அக்டோபர் 2010). "Rizana's life still hangs in the balance". சண்டே ஒப்சர்வர் இம் மூலத்தில் இருந்து 2013-01-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130112185838/http://www.sundayobserver.lk/2010/10/31/fea04.asp. பார்த்த நாள்: 9 சனவரி 2013. 
  4. "Rizana Nafeek needs justice". த நேஷன். 31 அக்டோபர் 2010 இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305041610/http://www.nation.lk/2010/10/31/newsfe1.htm. பார்த்த நாள்: 9 சனவரி 2013. 
  5. Bandara, Kelum (8 ஆகத்து 2011). "Rizana Nafeek likely to be freed and repatriated". த டெய்லி மிரர். http://print2.dailymirror.lk/news/front-page-news/52457.html. பார்த்த நாள்: 9 சனவரி 2013. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Death sentence on Rizana Nafeek confirmed". ஆசிய மனித உரிமை ஆணையம். 26 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2013.
  7. "SAUDI ARABIA/SRI LANKA: WORLD/SRI LANKA: An appeal for continuous intervention with the Saudi Arabian authorities on Rizana Nafeek's case". Asian Human Rights Commission. 11 December 2007. http://www.humanrights.asia/news/ahrc-news/AS-284-2007. பார்த்த நாள்: 11 January 2013. 
  8. "SAUDI ARABIA/SRI LANKA: Prayers being offered by Muslims in Sri Lanka for Rizana Nafeek, a young innocent Sri Lankan girl facing the death sentence in Saudi Arabia -- a reissue of the appeal to the Muslim world for compassionate intervention". Asian Human Rights Commission. 29 October 2010. http://www.humanrights.asia/news/ahrc-news/AHRC-STM-214-2010. பார்த்த நாள்: 11 January 2013. 
  9. "Continuous intervention needed for Rizana Nafeek". Ethics in Action இம் மூலத்தில் இருந்து 26 செப்டம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100926164937/http://www.ethicsinaction.asia/archive/2007/vol.-1-no.-2/continuous-intervention-needed-for-rizana-nafeek. பார்த்த நாள்: 11 January 2013. 
  10. Farook, Latheef (11 January 2013). "Sheer Saudi barbarism". Ceylon Today இம் மூலத்தில் இருந்து 13 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130113052720/http://www.ceylontoday.lk/51-21625-news-detail-sheer-saudi-barbarism.html. பார்த்த நாள்: 11 January 2013. 
  11. "Take Action Now". Amnesty USA. Archived from the original on 25 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 6 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "Halt execution of Rizana Nafeek". Adaderana. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2013.
  13. "Prince Charles pleads for Rizana". Sunday Times. 31 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2013.
  14. "For Diamond Jubilee, save Rizana Nafeek's life". Arilanka Mirror. 9 சூன் 2012. Archived from the original on 2013-02-16. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2013.
  15. "Sri Lankan maid Rizana Nafeek beheaded in Saudi Arabia". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2013.
  16. "Rizana Nafeek executed". சிலோன் டுடே. 9 சனவரி 2013 இம் மூலத்தில் இருந்து 2013-01-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130111213729/http://www.ceylontoday.lk/16-21563-news-detail-rizana-nafeek-executed.html. 
  17. "Rizana Nafeek Executed". அததெரன. 9 சனவரி 2013. http://www.adaderana.lk/news.php?nid=21204. பார்த்த நாள்: 9 சனவரி 2013. 
  18. "Rizana Nafeek executed". டெய்லிமிரர். 9 சனவரி 2013. http://www.dailymirror.lk/news/24864-rizana-nafeek-executed-.html. பார்த்த நாள்: 9 சனவரி 2013. 
  19. டெய்லி மெயில். http://www.dailymail.co.uk/news/article-2259967/Saudi-Arabia-beheads-maid-Rizana-Nafeek-murdering-baby.html?ito=feeds-newsxml. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசானா_நபீக்&oldid=3791597" இலிருந்து மீள்விக்கப்பட்டது