ரிசர்ப்பின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 இது ஒரு மிகை இரத்த அழுத்த மருந்தாகும். (anti hypertension drug) இது ஒரு அல்காய்டு ஆகும். ராவோல்ஃபியா சர்ப்பென்டைனா என்ற தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.
 இத்தாவரம் இந்தியாவில் 2000 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இது பெருவாரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில், இது மனச்சோர்வு, தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் எண்ணம் ஆகிய விளைவுகளை அதிக அளவில் ஏற்படுத்துகிறது.
 ==இயங்கும் விதம்==
   இது மைய மற்றும் புற நரம்பு மண்டலங்களிலிருந்து கேட்டக்கால் அமீன்களைக் காலியாக்குகிறது. செல்லினுள் உள்ள கேட்டக்கால் அமீன்களின் தேக்கத்தைப் பாதிப்பதன் மூலம் இவற்றைக் காலியாக்குகிறது. இதயக்குறை துடிப்பையும் ஏற்படுத்தக்கூடும். 0.1, 0.25 மற்றும் 1மி.கி மாத்திரைகளாகக் கிடைக்கிறது. மிகை இரத்த அழுத்த அவசரகால மருத்துவத்தில் 0.25 4மி.கி அளவில் தசை வழியாகச் செலுத்தப்படுகிறது.

 இவ்வாறு செலுத்தும்போது இரத்த அழுத்தம் 2-4 மணி நேரங்களில் குறைந்து நீடிக்கிறது. ஊசி மூலம் செலுத்த ஏற்ற வகையில் 2.5 மி.கி மற்றும் 1மி.கி அளவுகள் கொண்ட தயாரிப்பாகவும் கிடைக்கிறது.
"திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர் தொகுப்புக் கட்டுரை
 ==மேற்கோள் நூல்கள்==

1. அறிவியல் களஞ்சியம் தொகுதி - 18.

 பதிப்பாசிரியர் - முனைவர் நே. ஜோசப்
 முதற்பதிப்பு - 2009 பக்கம் 118 - 119.

2. கட்டுரையாளர் டாக்டர். ச. ஆதித்தன்

 ஜிப்மெர் - பாண்டிச்சேரி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசர்ப்பின்&oldid=2376562" இருந்து மீள்விக்கப்பட்டது