ரிங்கு ராச்குரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிங்கு ராச்குரு
Rinku Rajguru.jpg
சைராட் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டது.
தாய்மொழியில் பெயர்மராத்தி: रिंकू राजगुरू
பிறப்பு2000/2001 (அகவை 22–23)[1]
அக்லுச், மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2016 முதல்

ரிங்கு ராச்குரு (Rinku Rajguru) ( 3 ஜூன் 2001) இவர் மராத்தி மொழி திரைப்பட நடிகையாவார்.[2][3] 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சைராட் என்ற திரைப்படதில் சிறப்பாக நடித்து புகழைப்பெற்றார். இவருக்கு கதாநாயகனாக அறிமுக நாயகன் ஆகாஸ் தோசார் என்பவர் நடித்துள்ளார்.[4] தற்சமயம் இவர் மகாரஷ்டிரா மாநிலம், சோலாபூர் அக்லுஜ்[5] என்ற இடத்தில் உள்ள ஜிஜமதா கன்ய பிரசாலா பள்ளியில் 10 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறார்.[6][7] சாய்ராட் படத்தின் இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே இவரை 2013 ஆம் ஆண்டு இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இவர் 63 வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த சிறிய வயது நடிகை என்பதற்காக இந்திய ஜனாதிபதியிடம் விருது பெற்றார்.[8] இவரின் அப்பா, அம்மா ஆகிய இருவரும் ஆசிரியர்களாக வேலை செய்கிறார்கள். இவரது ஆசை மருத்துவராக படிக்க வேண்டும் என்பதாகும்.[9][10] சாய்ராட் திரைப்படம் 4 கோடி செலவில் தயாரிக்கப்பட்டாலும் இந்தியாவில் 50 கோடியும், வெளிநாடுகளில் 100 கோடிகளும் வசூல் செய்து சாதனை செய்துள்ளதால் இவருக்கு இப்படத்தின் தாரிப்பாளர் ஊக்க தொகையாக 5 கோடி கொடுத்து பாராட்டியுள்ளார். இதேபோல் இவருடன் நடித்த ஆகாஸ் தோசாருக்கும் 5 கோடி ஊக்க தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது.[11] இந்த செய்தியை பின்னர் இவர் மறுத்தார்.[12]

திரைப்படம்[தொகு]

வருடம் தலைப்பு மொழி கதாபாத்திரம் குறிப்புகள்
2016 சைராட் மராத்தி அர்ச்சனா பட்டேல் சிறப்பு ஜூரி விருது 63 வது தேசிய திரைப்பட விருதுகள்.

விருதுகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Atulkar, Preeti (29 March 2016). "I'm enjoying this moment to the fullest: Rinku Rajguru". The Times of India. 15 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Sairat: Rinku Rajguru on winning the National Award and much more".
 3. "Sairat amasses Rs 25.50 cr in first week". The Times of India. 8 May 2016.
 4. "Sairat Movie Review". The Times of India.
 5. 15-yr-old Rinku, aka Sairat’s Archie: Maharashtra’s latest film sensation[தொடர்பிழந்த இணைப்பு] Thr Indian Express May 19, 2016
 6. https://www.youtube.com/watch?v=onvkllwM-OI
 7. "Rinku Rajguru school result - Maharashtra Times". Maharashtra Times.
 8. National Awards: Rinku Rajguru from Nagraj Manjule’s Sairat gets a SPECIAL MENTION![தொடர்பிழந்த இணைப்பு] May 3, 2016
 9. Preeti Atulkar (4 May 2016). "Anurag Kashyap praises Sairat". The Times of India.
 10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2016-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-07-05 அன்று பார்க்கப்பட்டது.
 11. sets box office on fire: Rinku Rajguru and Akash Thosar get bonus of Rs 5 crore each[தொடர்பிழந்த இணைப்பு] India Today May 20, 2016
 12. [1] தி டைம்ஸ் ஆப் இந்தியா 20 ஜூன் 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிங்கு_ராச்குரு&oldid=3602570" இருந்து மீள்விக்கப்பட்டது