ரிங்கு சிங்
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ரிங்கு சிங் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 12 அக்டோபர் 1997 அலிகார், உத்தரப் பிரதேசம், இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை உட்சுழல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–தற்போது | உத்தரப் பிரதேசம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | கிங்ஸ் XI பஞ்சாப் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018– | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 9 April 2023 |
ரிங்கு சிங் (Rinku Singh) ஓர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் உத்தரபிரதேசத்திற்காகவும் விளையாடுகிறார். இவர் ஒரு இடது கை மட்டையாளர். 9 ஏப்ரல் 2023 இல் இவர் தனது ஆட்டத்தினால் மிகவும் பிரபலமானார். இவர் தனது அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், போட்டியின் கடைசிப் பந்துப் பரிமாற்றத்தின் கடைசி 5 பந்துகளில் தொடர்ச்சியாக 5 ஆறு ஓட்டங்களை அடித்துக் குஜராத் டைட்டன்ஸை தோற்கடிக்க உதவினார். [1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]5 உடன்பிறந்தவர்களில் மூன்றாவதான ரிங்கு சிங், எரிவாயு விநியோக நிறுவனத்தில் பணிபுரிந்த கான்சந்திர சிங்கிற்கு மகனாக ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் நகரில் உள்ள அலிகார் மைதானத்தின் அருகில் தனது தந்தையின் முதலாளிகளால் வழங்கப்பட்ட 2 அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டில் சிறுவயதைக் கழித்தார்.
உள்ளூர்ப் போட்டிகள்
[தொகு]சிங் உத்தரப் பிரதேசத்தை 16 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் 23 வயதுக்குட்பட்டோருக்கான நிலைகளிலும், மத்திய மண்டலத்தை 19 வயதுக்குட்பட்டோர் அணியிலும் பிரதிநிதித்துவப்படுத்தினார். [2] இவர் தனது 16 வயதில் மார்ச் 2014 இல் உத்தரப் பிரதேசத்திற்காக தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் அதிக ஓட்டங்களான 83 ஓட்டங்களைப் பெற்றார். [3] இவர் 2016-17 பருவகாலத்தில் ரஞ்சிக் கோப்பை போட்டியில் 5 நவம்பர் 2016 அன்று உத்தரப் பிரதேசத்திற்காக தனது முதல் தரத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார் [4]
2018-19 ரஞ்சிக் கோப்பை குழு நிலைப் போட்டிகளில் இவர் ஒன்பது போட்டிகளில் 803 ஓட்டங்களுடன் உத்தரபிரதேச அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்தார். [5] அந்தப் பருவகாலத்தில் பத்து போட்டிகளில் 953 ஓட்டங்களைப் பெற்றார். [6]
இந்தியன் பிரீமியர் லீக்
[தொகு]பிப்ரவரி 2017 இல், இவர் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். [7] சனவரி 2018 இல், 2018 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸால் 80 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார். [8]
9 ஏப்ரல் 2023 அன்று, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரிங்கு சாதனை படைத்தார், இறுதி ஓவரில் 5 ஆறு ஓட்டங்களை அடித்து 29 ஓட்டங்களை வெற்றிகரமாக அடைய உதவினார். இது போட்டியின் வரலாற்றில் கடைசிப் பந்துப் பரிமாற்றத்தில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். [9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cricketer Rinku Singh Biography in Hindi: How did the son of the person who delivered the gas cylinder hit 5 sixes in the IPL". Yugantar Pravah. Archived from the original on 11 April 2023. பார்க்கப்பட்ட நாள் 10 April 2023.
- ↑ "Teams Rinku Singh played for". CricketArchive. Archived from the original on 25 December 2015. பார்க்கப்பட்ட நாள் 25 December 2015.
- ↑ "Central Zone: Uttar Pradesh v Vidarbha at Jaipur, Mar 5, 2014". ESPNcricinfo. Archived from the original on 25 December 2015. பார்க்கப்பட்ட நாள் 25 December 2015.
- ↑ "Ranji Trophy, Group A: Punjab v Uttar Pradesh at Hyderabad (Deccan), Nov 5-8, 2016". ESPN Cricinfo. Archived from the original on 9 November 2016. பார்க்கப்பட்ட நாள் 6 November 2016.
- ↑ "From irresistible Rajasthan to inconsistent Karnataka". ESPNcricinfo (in ஆங்கிலம்). Archived from the original on 2 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2 May 2021.
- ↑ "Ranji Trophy, 2018/19 – Uttar Pradesh Cricket Team Records & Stats | ESPNcricinfo.com". Cricinfo. Archived from the original on 11 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2 May 2021.
- ↑ "List of players sold and unsold at IPL auction 2017". ESPN Cricinfo. Archived from the original on 20 February 2017. பார்க்கப்பட்ட நாள் 20 February 2017.
- ↑ "List of sold and unsold players". ESPN Cricinfo. Archived from the original on 28 January 2018. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
- ↑ "31 Runs scored by Knight Riders in the last over, the highest any team has managed in the 20th over to win a men's T20 chase". ESPN Cricinfo (in ஆங்கிலம்). Archived from the original on 10 April 2023. பார்க்கப்பட்ட நாள் 9 April 2023.