ரிக்கெட்ஸியா
Jump to navigation
Jump to search
ரிக்கெட்ஸியா என்ற நுண்ணுயிர்கள் குறிப்பாக ஓம்புயிர்கள், பூச்சிகள், சிறிய பாலூட்டிகள் முதலியவற்றில் உள்ளன. இவற்றில் பத்து வகையானவை மனிதனில் நோயை ஊக்கவல்லன. எலக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலம் இவற்றைக் காணும் போது, கிராம் எதிர் நுண்ணுயிரிகள் போன்று தோற்றமளிக்கின்றன. இத்தகைய ரிக்கெட்ஸியா செல்லின் உள்ளே பொதிந்து கிடக்கும் ஒட்டுண்ணிகளாக இருப்பதால் ஆய்வாளர் களங்களில் வளர்க்க இயலாது. இந்த நுண்ணியிரிகள் சிறிய இரத்த நாளங்களின் உட்தீலிய செல்களில் வளர்ச்சி அடைந்து இரத்த நாள அழற்சியை உண்டாக்கி நோயைத் தோற்றுவிக்கிறது. இந்த நுண் கிருமி உண்டாக்கும் பல வகையான நோய்களில், மலைப்பாறை புள்ளிக் காய்ச்சல் ஒன்றைப் பற்றி விளக்கமாக கூறினாலே அது மற்ற நோய்களுக்கும் பொருந்தும்.[1]
- ↑ அறிவியல் களஞ்சியம் - தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு எண்: 344 - நவம்பர் 2009 - அறிவியல் களஞ்சியம், தொகுதி - 18, பக்கம் - 111.