உள்ளடக்கத்துக்குச் செல்

ரிஃப்ட் வேல்லி காய்ச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிஃப்ட் வேல்லி காய்ச்சல்
ஊடுருவி எதிர்மின்னி நுண்ணோக்கி micrograph of tissue infected with Rift Valley fever virus
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases, விலங்கு மருத்துவம்
ஐ.சி.டி.-10A92.4
ஐ.சி.டி.-9066.3
நோய்களின் தரவுத்தளம்31094
ம.பா.தD012295

ரிஃப்ட் வேல்லி காய்ச்சல் (Rift Valley fever, RVF) என்பது மிதமானது முதல் தீவிரமானது வரையிலான ஒரு நச்சுயிரி நோய் ஆகும். மிதமான அடையளங்களில் காணப்படுபவை: காய்ச்சல், தசை வலிகள், மற்றும் தலைவலிகள், பெரும்பாலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கக் கூடியவை. தீவிரமான அடையாளங்களில் அடங்குபவை: தொற்றுக்குப் பின்னர் மூன்று வாரங்களில் தொடங்கி பார்க்கும் தன்மையை இழத்தல், மூளையில் ஏற்படும் தொற்றானது கடுமையான தலைவலிகள் மற்றும் குழப்பம், மற்றும் ரத்தக் கசிவுடனான கல்லீரல் பிரச்சனைகளும் கூட சில நாட்களுக்குள்ளாக நேரக்கூடும். ரத்தக் கசிவு கொண்டிருப்பவர்களுக்கு இறப்புக்கான வாய்ப்பு 50% வரையில் இருக்கிறது. [1]

இந்த நோய் RVF வைரசினால் ஏற்படுகிறது, இது "பிலிபோவைரசு" (Phlebovirus) வகையைச் சேர்ந்ததாகும். தொற்றுக்கு ஆளாகிய விலங்குகளின் இரத்தத்தைத் தொடுவதினால், வெட்டிக்கொல்லப்படும் விலங்கினைச் சுற்றிலுமிருக்கும் காற்றினை சுவாசிப்பதினால், தொற்றுக்கு ஆளாகிய விலங்கின் கறந்த பாலைக் குடிப்பதினால், அல்லது தொற்றுக்கு ஆளாகிய கொசுக்கள் கடிப்பதினால் பரவுகிறது. பசுக்கள், ஆடுகள், வெள்ளாடுகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற விலங்குகள் இதனால் பாதிக்கப்படலாம். இந்த விலங்குகளில் இது கொசுக்களினால் பரவுகிறது. இது ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றுவதாகத் தோன்றவில்லை. வைரசுக்கு எதிரான பிறபொருளெதிரியை அல்லது இரத்தத்திலேயே வைரசு இருப்பதைக் கண்டுபிடிப்பதால் நோய் கண்டறியப்படுகிறது.[1]

விலங்குகளில் நோய்க்கு எதிரான நோய்த்தடுப்பு மருந்து கொடுப்பதன் மூலம் மனிதர்களுக்கு நோய் ஏற்படுவதை முன் கூட்டியே தடுக்கலாம். பரவியிருக்கும்போது நிலைமையை மோசமாக்கிவிடும் என்பதால் இது பரவுதல் நேர்வதற்கு முன்பாகவே செய்யப்பட வேண்டும். பரவியிருக்கும்போது விலங்குகளின் நடமாட்டத்தை நிறுத்திவிடுவது பயன்மிக்கதாக இருக்கும். இதுபோலவே, கொசுக்களின் எண்ணிக்கை மற்றும் கொசுக்கடியைக் குறைப்பதுவும் பலன் தரலாம். மனிதருக்கான ஒரு தடுப்பு மருந்து இருக்கிறது; என்றாலும் 2010 வாக்கில் பரவலாக கிடைக்கப்பெறவில்லை. தொற்றுக்கு ஆளாகிவிட்டால் குறிப்பிட்ட சிகிச்சை என்று எதுவுமில்லை.[1]

கொள்ளைநோய் பரவுதல் ஆப்பிரிக்கா மற்றும் அரேபியா வில் மட்டுமே நிகழ்ந்தது. கொசுக்கள் அதிகமாகும் காலங்களாகிய அதிகமான மழைக்காலங்களில்தான் வழக்கமாகவே நோய்ப்பரவல் ஏற்படுகிறது.[1] இந்த நோயானது கென்யாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கில் (Rift Valley) இருந்த கால்நடைகளில்தான் 1900 இன் ஆரம்ப ஆண்டுகளில் தோன்றியது,[2] இந்த வைரஸ் 1931 இல் தனிமைப் படுத்தப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Rift Valley fever". Fact sheet N°207. World Health Organization. May 2010. பார்க்கப்பட்ட நாள் 21 March 2014.
  2. Palmer, S. R. (2011). Oxford textbook of zoonoses : biology, clinical practice, and public health control (2nd ed.). Oxford u.a.: Oxford Univ. Press. p. 423. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198570028.