ராஸ் லபான்

ஆள்கூறுகள்: 25°51′27″N 51°32′20″E / 25.85750°N 51.53889°E / 25.85750; 51.53889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஸ் லபான் (Ras Laffan Industrial City) என்பது கத்தார் நாட்டின் தோகா நகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தொழிற்துறை நகரம் ஆகும். இங்கு அதிக அளவில் இயற்கை எரிவளி கிடைக்கிறது. பல நாடுகளுக்கு இங்கிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவளி ஏற்றுமதி ஆகிறது. இந்நகர் கத்தார் பெற்றோலியம் நிறுவனத்தினால் நிருவகிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

ராஸ் லாஃபனை விவரிக்க முதன்முதலில் அறியப்பட்ட ஆங்கில உரை 1890 ஆம் ஆண்டில் பிரிட்டன் ஹைட்ரோகிராஃபிக் துறையால் வெளியிடப்பட்ட தி பார்சியன் கோல்ப் பைலட் புத்தகத்தில் இருந்தது. இந்த உரை இந்நகரின் புவியியல் அம்சங்களை மட்டுமே விவரிக்கிறது. அந்த நேரத்தில் இந்தகரில் பகுதி குடியேற்றங்கள் காணப்படவில்லை என்று ஊகிக்கிறது.[1] 1904 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாரசீக வளைகுடா, ஓமான் மற்றும் மத்திய அரேபியாவின் வர்த்தமானியின் ஜான் ஜி. லோரிம்ரின் எழுத்துப்படி உம் அல் ஷெப் என்று அழைக்கப்படும் ஒரு முத்து வங்கி ராஸ் லாஃபான் கடற்கரையில் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் ராஸ் லாஃபனைப் பற்றிய எந்த விளக்கமும் இல்லை.[2]

1996 ஆம் ஆண்டில் தொழிற்துறை நகரமாக ராஸ் லாஃபன் இல் நியமிக்கப்பட்டது.[3] அது ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கம் இயற்கை வாயுவுக்கு பெற்றோ இரசாயன வசதிகளை வழங்குவதாகும்.  1971 ஆம் ஆண்டில் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை வாயு உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு துறையாகும். இது சுமார் 6,000 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது. கத்தார் மாநிலத்தின் பாதிக்கும் மேற்பட்ட அளவை கொண்டுள்ளது.[4]

2011 ஆம் ஆண்டில் மார்ச் இல் ராணி பீட்ரிக்ஸ் கத்தாருக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் ரோட்டர்டம் துறைமுகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.[5]

புவியியல்[தொகு]

ராஸ் லாஃபன் மிகக் குறைந்த உயரத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் மணல் மண்ணைக் கொண்டுள்ளது. இது தலைநகர் தோஹாவிற்கு வடக்கே 50 மைல் (80 கி.மீ) மற்றும் ராஸ் ராகனுக்கு தென்கிழக்கில் 23 மைல் (37 கி.மீ) தூரத்தில் அமைந்துள்ளது. கடற்கரையில் பாறையொன்று காணப்படுகிறது.[2] ஃபுவேரிட்டுடன் இணைந்து ராஸ் லாஃபான் கட்டாரில் உள்ள அனைத்து கடல் ஆமை இருப்பிடங்களில் சுமார் 30% வீதத்தை கொண்டுள்ளது.[6] ராஸ் லாஃபான் கடற்கரையில் சுமார் 17 ஹெக்டேயர் சதுப்பு நிலங்கள் காணப்படுகின்றன.[7]

2010 ஆம் ஆண்டில் கத்தார் ராஸ் லாபனின் கடலோர நீர் குறித்து புள்ளிவிவர ஆணையம் நடத்திய ஆய்வில், அதன் அதிகபட்ச ஆழம் 12.5 மீட்டர் (41 அடி) மற்றும் குறைந்தபட்ச ஆழம் 5 மீட்டர் (16 அடி) என்று கண்டறியப்பட்டது. மேலும், நீர் சராசரியாக 8.05 pH, 46.94 psu இன் உப்புத்தன்மை , சராசரி வெப்பநிலை 24.6 °C மற்றும் 6.86 mg / L கரைந்த ஆக்சிசனை கொண்டிருந்தது.[8]

லாஃபன் சுற்றுச்சூழல் சங்கம் என்பது கத்தார் பெட்ரோலிய தொழில்துறை நகரங்கள் மற்றும் ராஸ் லாஃபனில் செயல்படும் பல பெரிய நிறுவனங்களுக்கிடையில் ஒரு கூட்டு கூட்டாக உருவாக்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். நகரத்தை சுற்றியுள்ள பகுதியில் மேம்பட்ட சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்காக இது நிறுவப்பட்டது.[9]

தொழிற்துறை உட்கட்டமைப்பு[தொகு]

ராஸ் லாஃபன் தற்போது மூன்று மின் உற்பத்தி மற்றும் நீர் உப்புநீக்கும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இது சுருக்கமாக ராஸ் லாஃபான் ஏ, பி மற்றும் சி என அழைக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில் கஹ்ராமா உப்பு நீக்கும் திட்டத்தை அதிகரிப்பதற்கான திட்டமொன்றை அறிவித்தது.[10]

1999 ஆம் ஆண்டில் கத்தார் பெற்றோலியத்தால் ராஸ் லாஃபனின் பெற்றோ இரசாயன தொழில்களின் நீர் குளிரூட்டும் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் 2003 ஆம் ஆண்டில் தொடக்க கட்டத்தில் 308,000 கன மீற்றர் கடல் நீரில் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக நிறைவேற்றப்பட்டது. 2010 ஆம் ஆண்டளவில் மீதமுள்ள இரண்டு கட்டங்கள் நிறைவடைந்தன. ஒரு மணிநேரத்தில் உற்பத்தி திறன் 937,000 கன மீற்றராக அதிகரித்தது.[11]

ராஸ் லாஃபன் அவசர மற்றும் பாதுகாப்பு கல்லூரி[தொகு]

ராஸ் லாஃபன் அவசர மற்றும் பாதுகாப்புக் கல்லூரி என்பது நகரின் தொழில்துறை நிறுவனங்களின் பாதுகாப்புத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட அவசரகால நிபுணர்களுக்கான பயிற்சி மையமாகும்.

போக்குவரத்து[தொகு]

ராஸ் லாஃபன் அல் ஹூவைலா இணைப்பு சாலை வழியாக அல் கோர் நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் நவம்பர் இல் 16 கி.மீ சாலையை ஒரு பாதையிலிருந்து நான்கு பாதைகளாக அதிகரித்து மேம்படுத்தப்பட்டது.[12]

சான்றுகள்[தொகு]


  1. Lua error in Module:Citation/CS1 at line 4442: attempt to call field 'make_sep_list' (a nil value).
  2. 2.0 2.1 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  4. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  5. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  6. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  7. Lua error in Module:Citation/CS1 at line 4442: attempt to call field 'make_sep_list' (a nil value).
  8. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  9. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  10. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  11. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  12. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

வெளி இணைப்புகள்[தொகு]

Ras Laffan Industrial City Official website[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஸ்_லபான்&oldid=3649343" இருந்து மீள்விக்கப்பட்டது