உள்ளடக்கத்துக்குச் செல்

ராவலாகோட்

ஆள்கூறுகள்: 33°51′12.26″N 73°45′05.31″E / 33.8534056°N 73.7514750°E / 33.8534056; 73.7514750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராவலாகோட்

راولا کوٹ
ராவலாகோட் நகரக் காட்சி
ராவலாகோட் நகரக் காட்சி
ராவலாகோட் is located in Azad Kashmir
ராவலாகோட்
ராவலாகோட்
ராவலாகோட் is located in பாக்கித்தான்
ராவலாகோட்
ராவலாகோட்
ஆள்கூறுகள்: 33°51′12″N 73°45′05″E / 33.85333°N 73.75139°E / 33.85333; 73.75139
நாடுஇந்தியா
பிரதேசம்ஆசாத் காஷ்மீர்
மாவட்டம்பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான்
பரப்பளவு
 • மொத்தம்1,010 km2 (390 sq mi)
ஏற்றம்
1,638 m (5,374 ft)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்78,800
 • அடர்த்தி375/km2 (970/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (PST)
தொலைபேசி குறியீடு05824
நகரங்கள்3
ஊராட்சிகள்21

ராவலாகோட் (Rawalakot) (உருது: راولا کوٹ ‎), பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீர் பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். பிர் பாஞ்சல் மலைத்தொடரில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள எல்லைக் கோட்டிற்கு அருகே உள்ளது.

அமைவிடம்

[தொகு]

பிர் பாஞ்சல் மலைத்தொடரில் 5374 அடி உயரத்தில் ராவலாகோட் நகரம் உள்ளது. இது இந்தியாவின் பூஞ்ச் நகரத்திற்கு கிழக்கே 32 கிமீ தொலைவில் பாகிஸ்தானின் பூஞ்ச் மாவட்டத்தில் ராவலாகோட் நகரம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2015-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ராவலாகோட் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 78,800 ஆகும்.[1]

பூஞ்ச் - ராவலாகோட் பேருந்து சேவைகள்

[தொகு]

இந்தியாவின் பூஞ்ச் நகரத்தையும், பாகிஸ்தானின் ராவாலாகோட் நகரத்தையும் இணைக்கும் சாலைப்போக்குவரத்து பயணியர் பேருந்து சேவைகள் மற்றும் சரக்கு சேவைகள் 2005 மற்றும் 2008 முதல் துவங்கியுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Population of Azad Kashmir Areas". Citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராவலாகோட்&oldid=2795727" இலிருந்து மீள்விக்கப்பட்டது