உள்ளடக்கத்துக்குச் செல்

ராவண தேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராவண தேசம்
சுவரிதழ்
இயக்கம்அஜய் நூதக்கி
தயாரிப்புலட்சுமிகாந்த் நாதென்ட்லா
இசைசிவா ஆர் நந்திகம்
நடிப்புஅஜய் ஆண்ட்ரூஸ் நூதக்கி
ஜெனிபர்
ரமேஷ்பாபு
சந்தேஷ்
ஒளிப்பதிவுவி. கே. ராமராஜ்
படத்தொகுப்புகார்த்திக் சீனிவாஸ்
வெளியீடு14 நவம்பர் 2013 (2013-11-14)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராவண தேசம் (Ravana Desam0 என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதை அஜய் நூதக்கி எழுதி இயக்கினார். இந்த படத்தின் கதை 2009 ஈழப் போரின் போது காணாமல் போன அகதிகளை அடிப்படையாகக் கொண்டது.[1][2]

கதைக்களம்

[தொகு]

ஈழத்தில் தமிழர்கள் தனி நாட்டு கேட்டுப் போராடும் போது இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடக்கிறது. அக்காலகட்டத்தில் இந்தப் படம் தொடங்குகிறது. போரின் போது உயிர் தப்பிக்கி கள்ளத் தோணிகள் மூலம் தமிழ்நாட்டிற்கு கடல் எல்லையைக் கடந்து வர முயலும்போது காணாமல் போன அகதிகளின் கதையை இந்தப் படம் சொல்கிறது. இந்தப் படம் கடல் பயணத்தின் போது நடந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது.[3]

நடிகர்கள்

[தொகு]
  • விக்டராக அஜய்
  • அபிநயாவாக ஜெனிபர்
  • அல்லு ரமேஷ்
  • சந்தோஷ்
  • கௌதல்யா
  • பாரதி ராவ்
  • செரிஷா
  • பிரபாகர்
  • மெய்னார் பாபு

தயாரிப்பு

[தொகு]

நூதக்கி இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் செலவிட்டார். இரண்டு ஆண்டுகள் சரியான உண்மைத் தகவல்களைப் பெறுவதற்கான ஆய்வுக்காக செலவழித்தார். நூதக்கி கூறுகையில்: "எனது படம் உண்மைச் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், மனிதர்கள் இன்னும் விலங்குகள்தான், விரைவில் அழிந்து போக வாய்ப்புள்ளவர்கள் என்ற மிக எளிய கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கதையை உருவாக்கியுள்ளேன். 2009 இல் ஈழத்தில் நடந்தது ஒரு இரத்தக்களரிப் படலம் என்று ஐக்கிய நாடுகள் அவை விவரித்துள்ளது." இந்தப் படத்தில் பணியாற்ற தான் செலவிட்ட நேரம் மதிப்புக்குரியது என்று அவர் கூறினார். படத் தயாரிப்பின்போது நடிகர்களும், குழுவினரும் கிட்டத்தட்ட 120 நாட்கள் கடலில் படப்பிடிப்பில் இருந்தனர், பல நடிகர்களுக்கு கடல் நோய் ஏற்பட்டது.[3]

வரவேற்பு

[தொகு]

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதுகையில் " இந்த அற்புதமான விஷயத்தை வைத்து ஒரு சிறந்த திரைப்பட படைப்பாளி இதைவிட என்ன செய்திருப்பார் என்று படம் முழுவதும், நாங்கள் தொடர்ந்து ஆச்சரியப்பட்டோம்" என்று குறிப்பிட்டது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ravan Desam inspired by 2009 civil war in Sri Lanka". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 November 2013. Archived from the original on 19 November 2013. Retrieved 9 December 2013.
  2. Kumar, S.R. Ashok (19 October 2013). "Audio Beat: Ravana Desam – In search of an identity". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250623125135/https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-ravana-desam-in-search-of-an-identity/article5251325.ece. 
  3. 3.0 3.1 Subramanian, Anupama (30 October 2013). "A film on missing refugees". Deccan Chronicle இம் மூலத்தில் இருந்து 17 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141017164220/http://www.deccanchronicle.com/131030/entertainment-kollywood/article/film-missing-refugees. 
  4. "Ravana Desam Movie Review". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 25 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220725034921/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/ravana-desam/movie-review/25973324.cms. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராவண_தேசம்&oldid=4363414" இலிருந்து மீள்விக்கப்பட்டது