உள்ளடக்கத்துக்குச் செல்

ராய்சேன்

ஆள்கூறுகள்: 23°20′N 77°48′E / 23.33°N 77.8°E / 23.33; 77.8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராய்சென்
நகரம்
ராய்சென் கோட்டை
ராய்சென் கோட்டை
ராய்சென் is located in மத்தியப் பிரதேசம்
ராய்சென்
ராய்சென்
மத்தியப் பிரதேசத்தில் ராய்சென் நகரத்தின் அமைவிடம்
ராய்சென் is located in இந்தியா
ராய்சென்
ராய்சென்
ராய்சென் (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°20′N 77°48′E / 23.33°N 77.8°E / 23.33; 77.8
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்ராய்சேன் மாவட்டம்
பெயர்ச்சூட்டுராய் மகால்
அரசு
 • வகைநகராட்சி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்44,162
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
464551.
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுMP-38
இணையதளம்https://raisen.nic.in/en/

ராய்சென் (Raisen), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராய்சேன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான போபால் நகரத்திலிருந்து 45.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரத்தின் மலை மீது கோட்டை உள்ளது. மேலும் இராய்சென் மாவட்டத்தில் சாஞ்சி மற்றும் சாஞ்சி தூபி எண் 2 மற்றும் பீம்பேட்கா பாறை வாழிடங்கள் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 303 மீட்டர் (994 அடி) உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 வார்டுகளும், 8,637 குடியிருப்புகளும் கொண்ட ராய்சென் நகரத்தின் மக்கள் தொகை 44,162 ஆகும். அதில் 22,972 ஆண்கள் மற்றும் 21,190 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.81 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 922 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.98 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 15.68 % மற்றும் 3.92 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 74.42%, இசுலாமியர் 24.68%, சமணர்கள் 0.36%,கிறித்தவர்கள் 0.38%, மற்றும் பிற சமயத்தினர் 0.17% வீதம் உள்ளனர்.[1]

போக்குவரத்து

[தொகு]

போபால்-சாகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 147, ராய்சென் நகரம் வழியாகச் செல்கிறது. அருகமைந்த வானூர்தி நிலையம், 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போபால் ஆகும்.

அருகமைந்த சுற்றுலாத் தளங்கள்

[தொகு]

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், ராய்சென் (1991-2020)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 33.0
(91.4)
39.5
(103.1)
41.0
(105.8)
47.5
(117.5)
47.7
(117.9)
47.0
(116.6)
41.5
(106.7)
38.7
(101.7)
40.0
(104)
40.4
(104.7)
36.4
(97.5)
33.1
(91.6)
47.7
(117.9)
உயர் சராசரி °C (°F) 25.1
(77.2)
29.6
(85.3)
34.1
(93.4)
37.5
(99.5)
40.7
(105.3)
36.6
(97.9)
30.9
(87.6)
29.4
(84.9)
30.6
(87.1)
31.5
(88.7)
27.8
(82)
25.0
(77)
31.5
(88.7)
தாழ் சராசரி °C (°F) 7.5
(45.5)
11.2
(52.2)
16.7
(62.1)
23.6
(74.5)
28.6
(83.5)
25.5
(77.9)
23.6
(74.5)
23.5
(74.3)
22.9
(73.2)
18.3
(64.9)
15.4
(59.7)
10.2
(50.4)
18.8
(65.8)
பதியப்பட்ட தாழ் °C (°F) 0.0
(32)
0.0
(32)
2.5
(36.5)
10.8
(51.4)
16.8
(62.2)
19.5
(67.1)
19.1
(66.4)
19.0
(66.2)
12.2
(54)
9.0
(48.2)
2.5
(36.5)
0.0
(32)
0
(32)
ஆதாரம்: India Meteorological Department[2]

மேற்கோள்கள்=

[தொகு]
  1. Raisen Town Population Census 2011
  2. "Climatological Tables of Observatories in India 1991-2020" (PDF). India Meteorological Department. Retrieved April 8, 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்சேன்&oldid=4288700" இலிருந்து மீள்விக்கப்பட்டது