ராம் சுந்தர் தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராம் சுந்தர் தாசு
15 ஆவது முதலமைச்சர் பீகார் முதலமைச்சர்களின் பட்டியல்
பதவியில்
21 ஏப்ரல் 1979 – 17 பிப்வரவரி 1980
முன்னவர் கர்ப்பூரி தாக்கூர்
பின்வந்தவர் ஜகந்நாத் மிஸ்ரா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
2009–2014
முன்னவர் இராம் விலாசு பாசுவான்
பின்வந்தவர் இராம் விலாசு பாசுவான்
பதவியில்
1991–1996
முன்னவர் இராம் விலாசு பாசுவான்
பின்வந்தவர் இராம் விலாசு பாசுவான்
தொகுதி ஹாஜீபூர் மக்களவைத் தொகுதி, பீகார்
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 9, 1921(1921-01-09)
கங்காஜல், சரண் மாவட்டம், பீகார், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு 6 மார்ச்சு 2015(2015-03-06) (அகவை 94)
பட்னா, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி ஐக்கிய ஜனதா தளம்
பிற அரசியல்
சார்புகள்
ஜனதா தளம் , ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சவிதா தேவி
பிள்ளைகள் 2 மகன்கள் மற்றும் 1 மகள்
பணி அரசியல்வாதி
சமயம் இந்து சமயம்
As of 6 March, 2015
Source: [1]

ராம் சுந்தர் தாசு (Ram Sundar Das) (இந்தி: राम सुन्दर दास; 9 சனவரி 1921 – 6 மார்ச் 2015) ஒரு இந்திய அரசியல்வாதியும் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களுள் ஒருவரும் ஆவார்[1]

இவர் பீகார் மாநிலத்தில் 1979 ஆம் ஆண்டு ஏப்வரல் 21 ஆம் நாள் முதல் 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் நாள் வரை முதலமைச்சராக இருந்தார். 1991 ஆம் ஆண்டு பத்தாவது மக்களவைக்கு, பீகார் மாநிலத்தின் ஹாஜீபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே தொகுதியிலிருந்து 2009 ஆம் ஆண்டிலிருந்து பதினைந்தாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஹாஜீபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இம்முறை இராம் விலாசு பாசுவான் நரேந்திர மோடி - பாரதீய ஜனதா கட்சியின் அலையின் காரணமாக வெற்றி பெற்றார்.

இவர் பீகார் முதலமைச்சராக இருந்த போது ஜனதா கட்சியின் தலைவர்களான சந்திரசேகர் போன்றோரின் ஆதரவையும் அந்நாளைய பீகார் ஜனதா கட்சி தலைவரான சத்யேந்திர நாராயண் சின்கா ஆதரவையும் பெற்றவராக இருந்தார்.[2] 2015 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாள் தனது 94 ஆம் வயதில் இறந்தார். [1]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Former Bihar Chief Minister Ram Sundar Das passes away". The Economics Times (6 March 2015). பார்த்த நாள் 6 March 2015.
  2. "Detailed Profile: Shri Ram Sundar Das". india.gov.in website. பார்த்த நாள் 18 May 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_சுந்தர்_தாசு&oldid=2805849" இருந்து மீள்விக்கப்பட்டது