உள்ளடக்கத்துக்குச் செல்

ராம் சந்திர சட்டர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம் சந்திர சட்டர்ஜி
রামচন্দ্র চট্টোপাধ্যায়
பிறப்புகொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா
இறப்பு(1892-08-09)ஆகத்து 9, 1892
கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா
தேசியம்இந்தியர்
இனம்வங்காளி
பணிகழைக்கூத்தாளர், உடற்பயிற்சியாளர், பலூன் பறப்பாளர், வான்குடை பறப்பாளர்
சமயம்இந்து சமயம்

ராம் சந்திர சட்டர்ஜி (Ram Chandra Chatterjee) ஒரு கழைக்கூத்தாளர், உடற்பயிற்சியாளர், பலூன் பறப்பாளர், வான்குடை பறப்பாளர் மற்றும் தேசபக்தர் ஆவார். முதன்முதலில் ஆகாயத்தில் பலூனில் பறந்த முதல் இந்தியரும் இவர் தான்.[1][2] இவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். இவரது ஆரம்ப காலத்தில் சாகசங்களைச் செய்து வந்தார். மாபெரும் ஐக்கிய இந்திய சாகச நிறுவனத்தின் (Great United Indian Circus Company) இயக்குனராக காலப்போக்கில் ஆனார். அது மட்டுமல்ல இவர் உடற்பயிற்சி (ஜிம்னாஸ்டிக்) ஆசிரியராகப் பணியாற்றினார். இறுதியாக இவர் பலூனில் பறந்து சாகசம் புரிந்த சமயத்தில் அந்த பலூன் ஒரு மலையின் மீதிருந்த பெரிய பாறையில் மோதி விபத்துக்கு உள்ளானது. உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி 9 ஆகஸ்ட் 1892 ஆம் ஆண்டு உயிர் இழந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Khandurie, Vijaya. 366 Days of Science & Technology. Rupa Publications. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788129125811. பார்க்கப்பட்ட நாள் 5 September 2015.
  2. Bhattacherje, S.B. (1 May 2009). Encyclopaedia of Indian Events & Dates. Sterling Publishers. p. B31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120740747. பார்க்கப்பட்ட நாள் 5 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_சந்திர_சட்டர்ஜி&oldid=3201719" இலிருந்து மீள்விக்கப்பட்டது