ராம் கோபால் பஜாஜ்
ராம் கோபால் பஜாஜ் | |
|---|---|
| பிறப்பு | 1 சூலை 1940 தர்பங்கா, பீகார் மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா |
| படித்த கல்வி நிறுவனங்கள் | தேசிய நாடகப் பள்ளி, டெல்லி |
| செயற்பாட்டுக் காலம் | 1965–தற்போது வரை |
| அறியப்படுவது | இயக்குனர், NSD, டெல்லி |
| உயரம் | 5'8" |
| வாழ்க்கைத் துணை | சுலோச்சனா தேவி மற்றும் சந்திரகலா கேம்சந்த் பிரகாஷ் |
| பிள்ளைகள் | ரிஜு பஜாஜ், அசிம் பஜாஜ், சாந்தி பிரகாஷ் பஜாஜ் |
| உறவினர்கள் | லீனா யாதவ்
தீபா பஜாஜ் (மருமகள்) ரவி பிரகாஷ் பஜாஜ் காஜல் பஜாஜ் (பேரன்/பேத்திகள்) |
| விருதுகள் | 1996: சங்கீத நாடக அகாடமி விருது 2003: பத்மஸ்ரீ 2017: காளிதாஸ் சம்மான் |
ராம் கோபால் பஜாஜ்(Ram Gopal Bajaj) ஒர் இந்திய நாடக இயக்குனர், கல்வியாளர், இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். இவர் புது தில்லியில் உள்ள 'நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா' (NSD) நிறுவனத்தில் ஆசிரியராகவும், அதன் இயக்குனராகவும் (நவம்பர் 1995 – செப்டம்பர் 2001) பணியாற்றியுள்ளார்.
நாடகத் துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, 2003-ல் பத்மஸ்ரீ விருதும், 1996-ல் சங்கீத நாடக அகாடமி விருதும், 2024-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான META விருதும் இவருக்கு வழங்கப்பட்டன.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]பஜாஜ் 1965-ல் 'நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா'வில் (NSD) தனது படிப்பை முடித்தார். பின்னர் இவர் அங்கு ஆசிரியராகவும், இறுதியில் அதன் இயக்குனராகவும் (நவம்பர் 1995 – செப்டம்பர் 2001) பொறுப்பேற்றார். NSD-யின் தலைவராக இருந்த காலத்தில், 'பாரத் ரங் மஹோத்சவ்' (தேசிய நாடக விழா) , 'ஜஷ்ன்-ஏ-பச்பன்' (தேசிய குழந்தைகள் நாடக விழா) ஆகிய இரண்டு நாடக விழாவில் இவர் தொடங்கினார்.
பல ஆண்டுகளாக, NSD ரெபர்ட்டரி நிறுவனத்துடன் இணைந்து பல நாடகங்களை அவர் இயக்கினார். 1974-ல் 'சூர்யா கி அந்திம் கிரண் சே, சூர்யா கி பெஹ்லி கிரண் தக்' நாடகத்துடன் தொடங்கி, 1977-ல் ஜெய் சங்கர் பிரசாத்தின் 'ஸ்கந்த குப்தா' 1989-ல் 'கைத்-ஏ-ஹயாத்' ஆகியவற்றை இயக்கினார். 1992-ல் மோகன் ராகேஷின் 'ஆஷாத் கா ஏக் தின்' நாடகத்தை இயக்கியது இவரது மற்றொரு குறிப்பிடத்தக்க படைப்பாகும். 1988 முதல் 1994 வரை NSD ரெபர்ட்டரி நிறுவனத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றினார். கிரிஷ் கர்னாடின் 'ரக்த் கல்யாண்' (தலேதண்டா) நாடகத்தை இவர் இந்தி மொழியில் மொழிபெயர்த்தார்; இது முதலில் NSD-க்காக இப்ராஹிம் அல்காசியாலும், பின்னர் 'அஸ்மிதா தியேட்டர்' குழுவிற்காக அரவிந்த் கௌராலும் (1995) இயக்கப்பட்டது.
2017-ல், மத்தியப் பிரதேச அரசால் 'காளிதாஸ் சம்மான்' விருது வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார். [1]
தொழில் வாழ்க்கை
[தொகு]பஜாஜ் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் திரைப்படத் துறையுடன் தொடர்புடையவராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் 'உத்சவ்' (1984) மற்றும் 'கோதூளி' (1977) போன்ற கலைத் திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர், பின்னர் 'மாசூம்' (1983), 'ஹிப் ஹிப் ஹுர்ரே' (1984), 'மிர்ச் மசாலா' (1985) , 'சாந்தினி' (1989) போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 'பார்ஸானியா', ஜாக்கி சான் நடித்த 'தி மித்' ஆகிய படங்களில் (இரண்டும் 2005-ல் வெளியானவை) அவர் ஏற்று நடித்த வேடங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. மேலும், 'மாங்கோ ட்ரீம்ஸ்' (2016) படத்தில் டாக்டர் அமித் சிங்காகவும், 'ஜாலி எல்எல்பி 2' படத்தில் வழக்கறிஞர் ரிஸ்வி சாஹப் ஆகவும் அவர் நடித்துள்ளார். இவர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களான 'நவ்யா.. நயே தட்கன் நயே சவால்' (2011) மற்றும் 'ரிஷ்டோன் கா சக்ரவ்யூ' (2017) ஆகியவற்றில் முறையே "ஷங்கர் தயாள் பாஜ்பாய்" மற்றும் "விக்கிரமாதித்ய சிங்" ஆகிய கதாபாத்திரங்களில் நடித்தார்.[5] ஸ்டார் பாரத் தொலைக்காட்சியில் 2019-இல் ஒளிபரப்பான 'சுஃபியானா பியார் மேரா' தொடரில் சையத் ஷெஹ்ரியத் "மியாஜான்" ஷா காசி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததே இவரது சமீபத்திய தொடராகும்.
இவர் ஜீ டிவி -க்காக 'எல்எஸ்டி பிரைவேட் லிமிடெட்' தயாரிக்கும் அடுத்த தொலைக்காட்சித் தொடரில் தோன்றவுள்ளார்.
ஜூலை 2025-இல், அமேசான் பிரைம் வீடியோவின் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'பஞ்சாயத்' தொடரின் நான்காவது பருவத்தில் "நானாஜி" (மஞ்சு தேவியின் தந்தை) கதாபாத்திரத்தில் பஜாஜ் தோன்றினார். கூர்மையான அரசியல் கருத்துகள் , தாக்கத்தை ஏற்படுத்தும் வசனங்களுக்காக இவரது சுமார் 10 நிமிடத் தோற்றம் பரவலாகப் பாராட்டப்பட்டது.
இவர் புது தில்லியில் உள்ள 'நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா'வின் கல்விசார் மன்றத்தின் உறுப்பினராக உள்ளார்.
என்எஸ்டி -யில் இருந்த காலத்தில் இர்பான் கான், ரகுபீர் யாதவ் மற்றும் நீனா குப்தா போன்ற நடிகர்களுக்கு இவர் வழிகாட்டியாக இருந்துள்ளார். கிரிஷ் கர்னாடின் 'ரக்த் கல்யாண்' நாடகத்தை பஜாஜ் இந்தியில் மொழிபெயர்த்தார்; இந்தி வடிவம் என்எஸ்டி-யில் இப்ராஹிம் அல்காசியாலும் (1992) மற்றும் அஸ்மிதா தியேட்டரில் அரவிந்த் கௌராலும் (1995) இயக்கப்பட்டது.
திரைப்பட விவரங்கள்
[தொகு]உதவி இயக்குனர்
[தொகு]ஆண்டு தலைப்பு பங்கு
[தொகு]- 1984 உத்சவ் (Utsav) உதவி இயக்குனர்
- 1977 கோதூளி (Godhuli)
நடிகர்
[தொகு]ஆண்டு தலைப்பு பங்கு
[தொகு]- 2017 ஜாலி எல்எல்பீ 2 (Jolly LLB 2) ரிஸ்வி சாஹப்
- 2016 மாங்கோ ட்ரீம்ஸ் (Mango Dreams) டாக்டர் அமித் சிங்
- 2007 பார்ஸானியா (Parzania) குரு
- 2005 தி மித் (The Myth)
- 1989 சந்தினி (Chandni)
- 1985 மிர்ச் மசாலா (Mirch Masala)
- 1984 ஹிப் ஹிப் ஹுர்ரே (Hip Hip Hurray)
- 1983 மாசூம் (Masoom)
இணையத் தொடர்கள்
[தொகு]ஆண்டு தலைப்பு பங்கு தளம் குறிப்புகள்
[தொகு]- 2019 தி வெர்டிக்ட் - ஸ்டேட் vs நானாவதி பாய் பிரதாப் ALTBalaji மற்றும் ZEE5
- 2025 பஞ்சாயத் மஞ்சு தேவியின் தந்தை Amazon Prime பருவம் 4
மேலும் பார்க்கவும்
[தொகு]இந்தியாவில் நாடகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்; "award" என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை