உள்ளடக்கத்துக்குச் செல்

ராம் கர்பால் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம் கர்பால் சிங்
Ramkarpal Singh
பிரதமர் துறை துணையமைச்சர்
(சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள்)
பதவியில்
10 திசம்பர் 2022 – 12 திசம்பர் 2023
துணை பொதுச் செயலாளர்
ஜனநாயக செயல் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மார்ச் 2025
முன்னையவர்துங்கு சுல்புரி சா
புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
25 மே 2014
முன்னையவர் கர்பால் சிங்
பெரும்பான்மை37,659 (2014); 55,951 (2018); 63,112 (2022)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Ramkarpal Singh Karpal Singh

9 ஏப்ரல் 1976 (1976-04-09) (அகவை 50)
பினாங்கு
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சி ஜசெக
பிற அரசியல்
தொடர்புகள்
பாரா (2008–2015)
பாக்காத்தான் (2015 முதல்)
உறவுகள்ஜக்தீப் சிங் தியோ (மூத்த சகோதரர்)
கோவிந்த் சிங் தியோ (மூத்த சகோதரர்)
பெற்றோர்கர்பால் சிங் (தந்தை)
குர்மித் கவுர் (தாய்)
முன்னாள் மாணவர்பிரிஸ்டல் பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்

ராம் கர்பால் சிங் (ஆங்கிலம்; மலாய்: Ramkarpal Singh s/o Karpal Singh; பஞ்சாபி: ਰਾਮਕਰਪਾਲ ਸਿੰਘ) (பிறப்பு: 9 ஏப்ரல் 1976) என்பவர் மலேசிய அரசியல்வாதி, வழக்கறிஞர்; 2014 முதல் புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்தவர் ஆவார். மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகீம்; மற்றும் அமைச்சர் அசுலினா ஒசுமான் சயீத் ஆகியோரின் தலைமையிலான ஒற்றுமை அரசாங்க நிர்வாகத்தில் (Unity Government), திசம்பர் 2022 முதல் திசம்பர் 2023 வரை, மலேசியப் பிரதமர் துறையில் சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தங்களுக்குப் பொறுப்பான துணை அமைச்சராகப் பணியாற்றினார். அதன் பின்னர் சூலை 2019 முதல் 2020 வரை மசோதாக்கள் பரிசீலனைத் தேர்வுக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.

அவர் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (DAP) உறுப்பினர் ஆவார். மார்ச் 2025 முதல் ஜசெகவின் துணை பொதுச் செயலாளராகவும், செப்டம்பர் 2024 முதல் பினாங்கு ஜசெகவின் மாநில துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.[1]

இவர் கர்பால் சிங் அவர்களின் மகனும், மலேசிய இலக்கவியல் அமைச்சர்; மற்றும் டாமன்சாரா மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்த் சிங் தியோ; பினாங்கு முதலமைச்சர் II மற்றும் டத்தோ கெராமாட் சட்டமன்றத் தொகுதியின் பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினருமான ஜக்தீப் சிங் தியோ ஆகியோரின் தம்பியுமாவார்.

கல்வி

[தொகு]

பினாங்கு, செயின்ட் சேவியர் பள்ளியிலும்; பின்னர் செரி இனாய் பள்ளியிலும் கல்வி பயின்ற இவர், இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டத்துறை பட்டம் பெற்றார். அதன் பின்னர் வழக்கறிஞராகப் பணியாற்றத் தகுதி பெற்றார்.

அரசியல்

[தொகு]

அவரின் தந்தை கர்பால் சிங் மரணத்திற்குப் பிறகு, புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 2014 புக்கிட் குளுகோர் இடைத்தேர்தலில் பாக்காத்தான் ராக்யாட் கட்சியின் ஒரே வேட்பாளராக அவர் போட்டியிட்டார். அவர் 37,659 வாக்குகள் பெரும்பான்மையில் புக்கிட் குளுகோர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

அவர் 10 சூலை 2014 அன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். அதன் பின்னர் 2018 பொதுத் தேர்தலில், அவரின் அரசியல் கூட்டணியான பாக்காத்தான் அரப்பான் (PH), ஆளும் கூட்டணியாக இருந்த பாரிசான் நேசனல் (BN) கூட்டணியைத் தோற்கடித்து மாநில அரசாங்கத்தை அமைத்தது. ​​அந்தக் கட்டத்தில் அவர் தன்னுடைய புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதியை 55,951 வாக்குகள் பெரும்பான்மையில் தக்க வைத்துக் கொண்டார்.[3]

சட்டத் தொழில்

[தொகு]

அவர் 2000-ஆம் ஆண்டில் மலேசிய வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். தற்போது, ​​அவர் பினாங்கு, கிரீன் ஆல் (Green Hall, Penang) பகுதியில் உள்ள மறைந்த தன் தந்தையின் சட்ட நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மங்கோலியப் பெண் அல்தான்தூயா சரிபுவின் (Altantuya Shaariibuu) குடும்பத்திற்கான சட்டப் பிரதிநிதியாகவும் ராம் கர்பால் உள்ளார்.[4][5] சூன் 2018-இல், பிரதமர் மகாதீர் முகமதுவுடன் நிகழ்ந்த ஒரு சந்திப்பில் அல்தான்தூயாவின் தந்தை சரிபுவுக்கு ராம்கர்பால் உதவினார்.[6]

கர்பால் சிங்கின் மரணம்

[தொகு]

ராம்கர்பால் தன்னுடைய தந்தையுடன் புடுவில் உள்ள அவரின் அலுவலகத்திலிருந்து பினாங்கிற்கு பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு சாலை விபத்து நிகழ்ந்தது.[7][8] ராம்கர்பாலின் கூற்றுப்படி, அந்தக் கோரமான விபத்து நடப்பதற்கு முன்பு அவரின் தந்தை தூங்கிக் கொண்டிருந்தாக அறியப்படுகிறது. அந்த விபத்தில் கர்பால் சிங்; மற்றும் அவரின் தனிப்பட்ட உதவியாளர் மைக்கேல் கார்னேலியஸ் செல்வம் ஆகியோர் உயிரிழந்தனர்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதி 2004[9]
ஆண்டு தொகுதி வேட்பாளர் வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
%
2014 P051 புக்கிட் குளுகோர் ராம் கர்பால் சிங் (ஜசெக) 41,242 89.95% உவா செங் இயூ (அன்புக் கட்சி) 3,583 7.81% 46,438 37,659 56.34%
முகமட் நபி சத்தார் (சுயேச்சை) 799 1.74%
அபு பக்கார் சிடேக் (சுயேச்சை) 225 0.49%
2018 ராம் கர்பால் சிங் (ஜசெக) 65,622 86.68% லோ சூ இயாப் (மசீச) 9,671 12.77% 76,489 55,951 83.51%
லாய் கியூ சிங் (மஐக) 412 0.54%
2022 ராம் கர்பால் சிங் (ஜசெக) 71,204 82.73% தினகரநாப பத்மநாபன் (பெர்சத்து) 8,092 9.40% 86,996 63,112 76.90%
ஓங் சின் சாங் (மசீச) 6,777 7.87%

விருதுகள்

[தொகு]

மலேசிய விருதுகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Steven Sim is new Penang DAP chairman". The Star. 22 September 2024. Retrieved 22 September 2024.
  2. ↑ "DAP's Ramkarpal Singh wins". Channel News Asia. 25 May 2014.
  3. ↑ "Ramkarpal replaces Nurul as head of Consideration of Bills Committee". Malaysiakini. 18 July 2019. Retrieved 18 July 2019.
  4. ↑ Jr, Joseph Kaos (2018-06-19). "Ramkarpal confident with new evidence, Altantuya's murder case will be reopened". The Star (in ஆங்கிலம்).
  5. ↑ Rashid, Hidir Reduan Abdul (2019-12-16). "Use ex-cop's SD to renew probe into Altantuya's murder: Ramkarpal". Malaysiakini.
  6. ↑ Buang, Shakira (2018-06-20). "Ramkarpal: Dr M gave nod to reopen Atlantuya case". Malaysiakini.
  7. ↑ Karpal Singh maut kemalangan Utusan Online. 17 April 2014.
  8. ↑ "The third cub roars, Ramkarpal ready to conquer Tiger of Jelutong's den". The Star Online. 11 May 2014.
  9. ↑ "The Star Online GE14". The Star (Malaysia). Retrieved 24 May 2018. Percentage figures based on total turnout.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_கர்பால்_சிங்&oldid=4560592" இலிருந்து மீள்விக்கப்பட்டது