ராம்பெர்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராம்பெர்கைட்டு (Rambergite) என்பது MnS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு சல்பைடு வகைக் கனிமமாகும். ஆக்சிசனற்ற கடல்சார் படிவுகளில் இக்கனிமம் காணப்படுகிறது. பால்டிக் கடல் பகுதியின் கோட்லேண்டு டீப் எனப்படும் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அதிக அளவிலும், சுவீடன் நாட்டிலுள்ள தலார்மா மாகாணம் கார்பென்பெர்க்கு பகுதியிலும் இக்கனிமம் கிடைக்கிறது. 1917-1998 காலப்பகுதியில் வாழ்ந்த ஆன்சு ராம்பெர்க்கு என்ற கனிமவியலாளர் நினைவாக இக்கனிமத்திற்கு ராம்பெர்கைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது [1].

ஆவ்யெரைட்டு என்ற மாங்கனீசு சல்பைடு கனிமத்துடன் ராம்பெர்கைட்டு நெருங்கிய தொடர்பு கொண்டதாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்பெர்கைட்டு&oldid=3602569" இலிருந்து மீள்விக்கப்பட்டது