ராம்பிரசாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம்பிரசாதி
நாகரிகம் துவக்கம்
வங்காள நாட்டுப்புறப் பாடல்கள், சியாமா சங்கீதம், கீர்த்தனை
மண்பாட்டு தொடக்கம்
இசைக்கருவிகள்
மண்டல நிகழ்வுகள்
இந்தியா, மேற்கு வங்காளம், திரிபுரா, மற்றும் வங்காளதேசம்

ராம்பிரசாதி (Ramprasadi) என்பது பதினெட்டாம் நூற்றாண்டின் வங்காளத் துறவி-கவி ராம்பிரசாத் சென் இயற்றிய பாடல்கள் ஆகும். இவை பொதுவாக இந்து தெய்வமான காளிக்கு அர்ப்பணிக்கப்பட்டு வங்காள மொழியில் எழுதப்பட்டுள்ளன.[1] [2] [3] [4]

தாக்கம்[தொகு]

ராம்பிரசாத் சென் காளியை அந்தரங்கமான பக்தியுடன் உரையாடிய முதல் சாக்த கவிஞர் ஆவார். மேலும் அவளை ஒரு மென்மையான அன்பான தாயாக அல்லது ஒரு சிறுமியாக கூட பாடினார். வங்காள நாட்டுப்புற பாணியான பால் இசையை பாரம்பரிய மெல்லிசை மற்றும் கீர்த்தனையுடன் இணைத்து ஒரு புதிய இசையமைப்பு வடிவத்தை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. அவருக்குப் பிறகு, சாக்த கவிஞர்களின் பள்ளி காளி-பக்தி பாரம்பரியத்தைத் தொடர்ந்தது. கிருஷ்ணசந்திர ராய், சிராச் உத் தவ்லா, இரவீந்திரநாத் தாகூர், காஜி நஸ்ருல் இஸ்லாம் ஆகியோர் ராம்பிரசாத்தின் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். அவரது பல பாடல்கள் தனஞ்செய் பட்டாச்சார்யா, பன்னாலால் பட்டாச்சார்யா மற்றும் அனுப் கோஷல் போன்ற பிரபல சியாமா சங்கீத பாடகர்களால் பாடப்பட்டன.

சான்றுகள்[தொகு]

  1. "রামপ্রসাদের গলায় শ্যামাসংগীত শুনে কেঁদে ফেললেন বাংলার নবাব সিরাজ". nilkantho.in (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-27. பார்க்கப்பட்ட நாள் 2020-08-28.
  2. "রামপ্রসাদের ভিটেয় কালীর কদর যেমন, সাধককবির আদরও ততটাই!". Ei Samay (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2020-08-28.
  3. Singing to the Goddess: Poems to Kali and Uma from Bengal, Ramprasad Sen, Translated by Rachel Fell McDermott (ISBN 0-19-513434-6)
  4. History of Bengali Literature, Dr. Dulal Chakraborty, July - 2007, Bani Bitan. (Bengali)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்பிரசாதி&oldid=3690269" இலிருந்து மீள்விக்கப்பட்டது