ராம்நாதி
ராம்நாதி கோயில் (Ramnathi) கோவாவின் பாண்டிவேடிலுள்ள ராம்நாதீமில் அமைந்துள்ளது. கவுட சாரஸ்வத் பிராமணர் (ஜி.எஸ்.பி) சமூகத்தைச் சாா்ந்தவா்கள் மற்றும் வைசியர்கள் இக்கோவிலின் முதன்மை வழிபாட்டாளர்கள் ஆவர். மற்ற கோன் பிராமண கோயில்களைப் போலவே, ராம்நாத்தியும் பஞ்சைத்தன்யா முறையை உள்ளடக்கியது. எனவே, இந்த கோவிலில் 5 முக்கிய தெய்வங்கள் உள்ளன. ஸ்ரீராமநாத் முதன்மை தெய்வமாகவும், சாந்தேரி, காமாட்சி, இலட்சுமி நாராயணன், கணபதி, பீட்டல் மற்றும் காலபைரவா் உள்ளிட்ட பிற குடும்ப தெய்வங்களும் உள்ளனர்.
புராணக் கதை
[தொகு]ஸ்ரீராமநாத் தெய்வம் முதலில் இராமேஸ்வரத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இராமனால் நிறுவப்பட்டது. இராமர் சீதையுடன் இலங்கையிலிருந்து திரும்பி வந்தபோது, இராவணனைக் கொன்றதால், பிராமணனைக் கொன்ற பாவத்தைப் போக்க சிவனை வணங்க முடிவு செய்தார். எனவே ஒரு சிவலிங்கத்தை நிறுவி இராமர் அதை வணங்கினார். சிவபெருமான் வந்து இராமரை குரு கோரக்ஷ்நாத்துக்கு அனுப்பினார். இங்கு 12 பாந்த்கள் உள்ளன, மேலும் பந்தில் ஒன்று ராமரிடமிருந்து தொடங்கியது. இது ராமநாத் என்று அறியப்பட்டது[1]

வரலாறு
[தொகு]கோவாவில் உள்ள ராம்நாத்தின் அசல் கோயில், கோவாவின் சால்செட்டில் லவுட்டோலிமில் அமைந்துள்ளது. ராம்நாதியின் சிலை 16 ஆம் நூற்றாண்டில் அப்போதைய போர்த்துகீசிய அதிகாரிகளால் அதன் அழிவைத் தடுப்பதற்காக தற்போது உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. மே 2011 இல் ராம்நாதி கோயில் 450 ஆண்டுகள் நிறைவடைந்தது.

தெய்வங்கள்
[தொகு]கோயிலின் பிரதான தெய்வம் ராம்நாத். ராம்நாத் பிரதான தெய்வம் என்பதால், இந்த கோயில் ராம்நாதி என்று அழைக்கப்படுகிறது. ராம்நாத் என்ற பெயர் கடவுளான இராமரின் பெயா். எ.கா. சிவன்.கூடுதலாக, இந்த கோவிலில் ரிவோனாவைச் சேர்ந்த சாந்தேரி (சாந்ததுர்கா) மற்றும் லூடோலிமில் இருந்து காமாட்சி தேவி சிலைகள் உள்ளன. ஸ்ரீ லட்சுமி நாராயண் ஸ்ரீ சித்தநாத் (கணேஷ்), ஸ்ரீபெட்டல் மற்றும் ஸ்ரீகாலபைரவா் ஆகியோரின் சிலை உள்ளது. இது ராம்நாதி பஞ்சைத்தன்யாவினை நிறைவு செய்கிறது.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-27. Retrieved 2020-11-26.
- ↑ "|| Shree Ramnath Prasanna ||".