ராம்நகர் கோட்டை, உதம்பூர்
| இராம்நகர் கோட்டை, உதம்பூர் Ramnagar Fort, Udhampur | |
|---|---|
| பகுதி: இந்தியாவின் கோட்டைகள் | |
| இராம்நகர், உதம்பூர் மாவட்டம், இந்தியா | |
| மனனர் சுதேத் சிங் கட்டிய பழமையான கோட்டை | |
| ஆள்கூறுகள் | 32°48′18″N 75°19′05″E / 32.8051°N 75.3181°E |
| வகை | கோட்டை |
| இடத் தகவல் | |
| மக்கள் அனுமதி |
ஆம் |
| இட வரலாறு | |
| கட்டியவர் | மன்னர் சுதேத் சிங் |
இராம்நகர் கோட்டை (Ramnagar Fort, Udhampur) இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட சம்மு-காசுமீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் நகரில் உள்ள ஒரு கோட்டையாகும்.[1][2] இக்கோட்டையானது இராசபுத்திர அரசரான சுதேத் சிங்கால் என்பவரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இவர் 1844இல் மரணமடைந்தார். இக்கோட்டைக்கு அருகிலேயே சதி (உடன் கட்டை) மேற்கொண்ட அரசரது மனைவியின் சமாதி உள்ளது. இந்தக் கோட்டை 1972ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இக்கோட்டையானது இந்திய தொல்பொருள் ஆய்வுத்துைறயால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும்.[3]
கட்டிடக்கலை வடிவமைப்பு
[தொகு]பழங்கால கோட்டையான இது சதுரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு மூலைகளையும் பாதுகாக்க பலகோண கோட்டை மேடைகள் உள்ளன. உயரமான கோட்டைச் சுவரும் மூன்று அடுக்கு மாடியும் கொண்ட இக்கோட்டை உயர்ந்து போர்க்களங்கள் மற்றும் மெரினோக்களால் முடிசூட்டப்பட்டுள்ளன. இராம்நகர் கோட்டையின் உள்ளே உள்ள மைய முற்றத்தைச் சுற்றி பீரங்கி குண்டுகள் சேமிக்கப்படும் அறைகளும் வளைந்நத அறைகளும் உள்ளன. நுழைவாயிலில் கணேசர், துர்கை, அனுமனின் உருவங்கள் உள்ளன. கோட்டையானது அகழியால் சூழப்பட்டுள்ளது. கோட்டையின் உள்ள செல்ல தென்கிழக்கு பகுதியில் ஒரு குறுகிய பாலம் உள்ளது.[4][5]

மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ramnagar Fort". udhampur.nic.in. Retrieved 23 July 2025.
- ↑ "Ramnagar: A Historic Gem in Jammu". Daily Excelsior. 23 March 2025. Retrieved 23 July 2025.
- ↑ "Historical Town of Ramnagar". Daily Excelsior. 27 June 2021. Retrieved 23 July 2025.
- ↑ "Ramnagar Fort". incredibleindia.gov.in. Retrieved 23 July 2025.
- ↑ "Sheesh Mahal Ramnagar -Popular Palace of J & K". keylr.com. Archived from the original on 2015-12-08.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Ramnagar Fort, Udhampur தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.