ராம்தேனு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம்தேனு
இயக்கம்முனின் பாருவா
தயாரிப்புபிரைடு ஈஸ்ட் என்டெர்டெய்ன்மென்ட்ஸ் பிரைவேட் லிட்
இசைஜடின் சர்மா
நடிப்புஜடின் போரா
பிராஸ்டுடி பாராசார்
உத்பால் தாஸ்
நிசிதா கோஸ்வாமி
பிஷ்ணு கார்கோரியா
தபான் தாசு
பித்யுத் சக்ரபர்த்தி
ஒளிப்பதிவுசுமன் துவாரா
கலையகம்பிரைடு ஈஸ்ட் என்டெர்டெய்ன்மென்ட்ஸ் பிரைவேட் லிட்
வெளியீடுபெப்ரவரி 4, 2011 (2011-02-04)
நாடு இந்தியா
மொழிஅசாமிய மொழி
ஆக்கச்செலவு70 இலட்சம் (US$88,000)
மொத்த வருவாய்2.04 கோடி (US$2,60,000)

ராம்தேனு (Raamdhenu) (ஆங்கில மொழி: Rainbow) என்பது 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய அசாமிய காதல் நாடகத் திரைப்படமாகும். இது அனுபவம் வாய்ந்த முனின் பாருவா இயக்கிய, மற்றும் பிரைட் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்த திரைப்படமாகும். .இத்திரைப்படத்தில், ஜதின் போரா, பிராஸ்துதி பாராசார், தபான் தாஸ், உத்பல் தாஸ் மற்றும் நிசிடா கோஸ்வாமி முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். படம் பிப்ரவரி 4, 2011 அன்று அசாம் முழுவதும் 24 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஜடின் சர்மா இசையமைத்துள்ளார். [1]

இந்த படத்தில் பாடல்களை பிரபலமான பாடகர்கள் சுபீன் கர்க், அங்காராக் மகந்தா, திக்சு, சுபீ, ஸ்ரேயா கோஷல், ராஜ் ஜே கோன்வார், ரூப்ஜ்யோதி மற்றும் சுனிதி சவுகான்.ஆகியோர் பாடியுள்ளனர்.

கதைச்சுருக்கம்[தொகு]

வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்த சில கதாபாத்திரங்களின் கதை இது. கடினமான சூழ்நிலைகள் மற்றும் துன்பங்கள் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்து, சூழ்நிலைகளை தைரியமாக கையாளும் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் நிலைத்தன்மையை நிலைநாட்ட முயற்சிக்கின்றன. கதை 7 நபர்களின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது, அந்த வாழ்க்கைகளும், அவற்றின் துன்பங்களும் ஒன்றோடொன்று சந்தித்துக் கொள்கின்றன. 7 நபர்கள், 7 வெவ்வேறு கதைகள் 7 வண்ணங்களையும் குறிக்கின்றன, அவை ஒன்றாக சேர்ந்து ராம்தேனு (வானவில்) ஆகின்றன

நடிகர்கள்[தொகு]

  • ஜடின் போரா
  • பிரஸ்தூதி பராஷர்
  • ஜெயந்த தாஸ்
  • உத்பால் தாஸ்
  • நிஷிதா கோஸ்வாமி
  • பிஷ்ணு கார்கோரியா
  • தபன் தாஸ்
  • பித்யுத் சக்ரவர்த்தி
  • பக்கிசா பேகம்
  • ஜெயந்த தாஸ்

வசூல் நிலை[தொகு]

ராம்தேனு சினிமா அரங்குகளில் அதன் மொத்த ஓட்டத்திலிருந்து ₹ 2 கோடி ஈட்டிக்கொடுத்தது. இத்திரைப்படம் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டது; இது ஒரு வெற்றிப்படம் என்று அறிவிக்கப்பட்டது.[சான்று தேவை] இந்த திரைப்படம் வசூலில் ரூபாய் 1 கோடியை தாண்டிய முதல் அசாமிய திரைப்படமாகவும், 2011 இல் அதிக வருமானம் ஈட்டிய அசாமி திரைப்படமாகவும் ஆனது.

இசை மற்றும் ஒலிப்பதிவு[தொகு]

ராம்தேனு
ஒலிநாடா
ஜடின் சர்மா
வெளியீடு2011
ஒலிப்பதிவு2011
இசைப் பாணிதிரைப்படப் பின்னணிப் பாடல்
நீளம்42:28
மொழிஅசாமிய மொழி
இசைத் தயாரிப்பாளர்பிரைடு ஈஸ்ட் என்டெர்டெய்ன்மென்ட்ஸ் பிரைவேட் லிட்

ராம்தேனுவின் இசை ஜடின் சர்மா என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. ராம்தேனுவின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. பாலிவுட்டின் பாடகர்களான ஸ்ரேயா கோஷல், சுனிதி சவுகான் ஆகியோர் இந்த படத்தில் குரல் கொடுத்துள்ளனர்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்தேனு&oldid=3072847" இருந்து மீள்விக்கப்பட்டது