ராம்கிருட்டிண கோபால் பண்டார்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராம்கிருட்டிண கோபால் பண்டார்கர் ( Sir Ramakrishna Gopal Bhandarkar 6 சூலை 1837- ) இந்தியக் கல்வியாளர், கீழைத் தத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஆவார். இவரது நினைவாக புனேவில் இயங்கும் கீழ்திசை படிப்பு ஆய்வு நிறுவனத்திற்கு பண்டார்கர் ஓரியண்டல் ஆய்வு நிறுவனம் எனப்பெயர் சூட்டப்பட்டது.

பிறப்பும் படிப்பும்[தொகு]

மகாராட்டிர மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில் மல்வன் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை வருவாய்த் துறையில் பணி புரிந்தவர். தொடக்கக்கல்வியை இரத்தினைக் கிரியில் முடித்த பண்டார்கர் மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் நிறுவனத்தில் 1853 இல் படித்தார். ஆங்கில இலக்கியம், வரலாறு, சமசுக்கிருதம் ஆகிய பாடங்களில் முதல் இடத்தில் வந்தார். பல விருதுகள், சிறந்த மாணவர்களுக்கான உதவித் தொகை ஆகியனவற்றை இவர் பெற்றார். 1862 இல் மும்பைப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்த முதல் பட்டந்தாங்கியர் குழுவைச் தேர்ந்தவர் இவர். 1863 இல் முதுகலைப் பட்டம் பெற்றார்.பின்னர் 1885 இல் கோட்டின்சன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.[1]

பணிகள்[தொகு]

பண்டார்கர் மும்பையில் உள்ள எல்பின்சுடன் கல்லூரி மற்றும் டெக்கான் முதுநிலை கல்லூரயில் ஆசிரியராகப் பணிகள் புரியும்போதே ஆய்வுகளில் மனம் தோய்ந்தார். மும்பை பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவியை வகித்த இவர், 1894 ஆம் ஆண்டில் ஒய்வு அடைந்தார். கீழையியல் பற்றிய கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் 1874 இல் இலண்டனிலும் 1886 இல் வியன்னாவிலும் நடைபெற்றபோது அவற்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். "டெக்கான் பற்றிய அரசியல் வரலாறு எழுதியவர், வைணவ வரலாறு எழுதியவர், சமூக சீர்திருத்தவாதி விதவைகள் திருமணத்தை ஆதரித்தவர் சாதிய அமைப்பை எதிர்த்தவர், குழந்தை திருமணத்தை எதிர்த்தவர்" என்று புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ராம் சரண் சர்மா பண்டார்கர் பற்றி எழுதியுள்ளார்.[2]

சமூகச் சீர்திருத்தவாதியாக[தொகு]

1853 இல் பண்டார்கர் தம் மாணவப் பருவத்தில் பரமகன்ச சபா என்ற அமைப்பில் இணைந்தார். கேசப் சந்திர சென் 1864 இல் வந்து சபை உறுப்பினர்களுக்கு ஊக்கம் தந்தார். 1866 இல் சாதிய முறைகள் ஒழிதல் வேண்டும் என்றும், விதவைகள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், பெண்கள் கல்வி பெருக வேண்டும் என்றும், குழந்தைகள் திருமணம் கூடாது எனவும் சபை உறுப்பினர்கள் உறுதி எடுத்துக் கொண்டார்கள்.  சமூகம் திருத்தம் பெற சமயச் சிர்த்திருத்தம் தேவை என்பதை உணர்ந்தார்கள். கேசப் சந்திர சென், ப்ரோதப் சந்தர் மசும்தார்,  நவீன சந்திர ராய் போன்றோர் சபை உறுப்பினர்களின் சீர்திருத்த உணர்வுகளுக்கு ஊக்கம் அளித்துப் பேசினார்கள்.  

பெற்ற சிறப்புகள்[தொகு]

கல்வியாளரான பண்டார்கர் 1903 இல் இந்தியக் கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுது அந்தக் கவுன்சிலில் கோபாலக் கிருட்டிண கோகலே உறுப்பினராக இருந்தார்.[3] 1911 இல் பிரிட்டிசு அரசு இவருக்கு சி.ஐ.ஈ. என்ற பட்டத்தை அளித்தது.[4] இவரது நினைவாக புனேயில் பண்டார்கர் கீழையியல் அராய்ச்சி நிலையம் உள்ளது.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Ramkrishna Gopal Bhandarkar - orientalist par excellence". The Times of India. 12 July 2003.
  2. Ram Sharan Sharma (2009). Rethinking India's Past. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-569787-2. 
  3. "India- Governor General Council". UK Parliament. 5 April 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. Tikekar, Aroon and Tikekara, Aruna (2006), The Cloister's Pale: A Biography of the University of Mumbai, page 27, Popular Prakashan, Mumbai, India
  5. http://www.bori.ac.in/ பரணிடப்பட்டது 2012-07-29 at the வந்தவழி இயந்திரம் Bhandarkar Oriental Research Institute