ராம்கர் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராம்கர் ஏரி (Ramgarh Lake) இது, இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள ஜம்வா ராம்கர் அருகே அமைந்துள்ள ஒரு செயற்கயான ஏரி ஆகும். 1999 ஆம் ஆண்டு கடைசியாக நீர் நிரம்பிக் காணப்பட்டது. அதன்பின்னர் 1999 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை நீரின்றி வரண்டு காணப்பட்டது. இது ஜெய்ப்பூரிலிருந்து 32 கி.மீ. (20 மைல்) அதாவது 15.5 சதுர கிலோமீட்டர் (6.0 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது. செய்ப்பூர் நகருக்கு நீர் வழங்கலின் முக்கிய ஆதாரமாக இது இருந்தது. குறிப்பாக மழைக்காலத்திற்குப் பிறகு இது ஒரு பிரபலமான சுற்றுலா மையமாக இருந்தது. 1982 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்போது ராம்கர் ஏரி மீது ஊர்வலம் நடைபெற்றது.

ராம்கர் ஏரி

ஏரி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் சிங்கங்கள், சிட்டல் மற்றும் நீல்கேய் உட்பட பலவிதமான வனவிலங்குகளை உள்ளடக்கியுள்ளது, மேலும் இது 1982 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் ஒரு வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அங்கு ஜம்வா மாடா என்ற கோவிலும் ஒரு பழைய கோட்டை இடிந்த நிலையில் அழியும் தருவாயில் உள்ளது.

செய்ப்பூர்

ஏரியின் நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. இதற்கு காரணம் மாநில அரசின் கவனமின்மை என உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். 2011 ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்தை நீர்ப்பாசன பகுதிக்கு சென்று அங்குள்ள ஆக்கிரமிப்புகளை நீக்குமாறு கட்டளையிட்டது. இருப்பினும் அணையின் நீர்பிடிப்புப் பகுதியிலுள்ள அத்துமீறல் இன்னும் நிலுவையில் உள்ளது, மேலும் நீர் மறுசீரமைக்கப்படும் என்ற சிறிய நம்பிக்கை அப்பகுதி வாழ் மக்களிடையே நிலவுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்கர்_ஏரி&oldid=2722064" இருந்து மீள்விக்கப்பட்டது