ராமபுரம், கன்னியாகுமரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமபுரம் (தமிழ்: இராமபுரம்) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கணக்கெடுப்பு கிராமமாகும். இராமபுரம் 8°05′03″N 77°32′31″E / 8.08403°N 77.54187°E / 8.08403; 77.54187-இல் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் அகத்தீசுவரம் வட்டத்தில் இராமபுரம் உள்ளது. இராமபுரம் கிராமத்தின் அஞ்சல் குறியீடு 629 303 ஆகும். [1]

அருகாமையில் உள்ள ஊா்கள்[தொகு]


ஊர் நிகழ்வுகள்[தொகு]

இந்த ஊர் ஏறத்தாழ 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஊரில் குடியிருப்பவர்கள் அனைவரும் நாஞ்சில் நாட்டு வெள்ளாள பிள்ளை என்னும் ஒரே சமுதாயத்தை சார்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் மரபுவழி இந்துக்கள் என்றாலும் இராமபுரத்தில் உள்ள குடும்பங்கள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ரோமன் கத்தோலிக்கத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் இந்து மத தோழர்களின் பண்பாடு, மரபுகளைத்தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்.

இராமபுரத்தின் அருகே ஆண்டார்குளம் என்ற பெரிய கிராமம் உள்ளது. ஆண்டார்குளம் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் பெரியதாக இருந்தாலும் அனைத்து செயல்களுக்கும் இராமபுரம் தான் மையமாக விளங்குகிறது மேலும் இராமபுரம் தான் புகழ்பெற்றதாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த ஊர் கார்மேல் அன்னையின் விழாவினை கொண்டாடி வருகிறது. மண்ணின் மைந்தர்கள் உலகத்தில் எங்கு வசித்தாலும் விழாவின்போது இங்கு வந்து தங்கள் அன்பையும் நன்றியுணர்வையும் அன்பான தாய் மேரிக்கு காட்டுகிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் இவ்விழா நாட்களில் சந்திப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இராமபுர மக்கள் இந்தியா முழுவதிலும் வெளிநாடுகளிலும் பரவி வசித்து வருகின்றனர். அவர்கள் பணிபுரியும் எந்த நிறுவனத்திலும் முதன்மைப் பதவிகளை வைத்திருக்கிறார்கள்.

இந்த ஊரில்  கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது.

அண்மையில் இந்த ஊர் மக்கள் தங்கள் அருகாமையில் வசிக்கும் நண்பா்கள், உறவினா்களிடம் இருந்து நிதி திரட்டி  தேவாலய வளாகத்தில் ஒரு பெரிய கொட்டகை ஒன்றைக் கட்டியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tamil Nadu, India Villages, Town and City Complete Details.http://www.tamil-page.com/city_detail.php?pincode=629303&city=Ramapuram%A0&district=kanyakumari&state=Tamil%20Nadu
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமபுரம்,_கன்னியாகுமரி&oldid=3746355" இலிருந்து மீள்விக்கப்பட்டது