உள்ளடக்கத்துக்குச் செல்

ராமதுரை (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமதுரை(N.Ramadurai) ஒரு தமிழ் அறிவியல் எழுத்தாளர், பத்திரிகையாளர்.

என்.ராமதுரை
என்.ராமதுரை

தினமணி நாளிதழின் செய்தி ஆசிரியராகவும், தினமணியின் அறிவியல் வார இணைப்பாக வெளிவந்த தினமணி சுடரின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தினமணியில் பல அறிவியல் மற்றும் பொதுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவர் 2018-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் நாள் காலமானார்.[1]

எழுதிய நூல்கள்[தொகு]

  • விண்வெளி
  • அணு
  • அறிவியல் - எது ஏன் எப்படி? - இரண்டு பாகங்கள்
  • எங்கே இன்னொரு பூமி?
  • சூரிய மண்டல விந்தைகள்
  • பருவநிலை மாற்றம்
  • ராக்கெட் துறையில் கடும் போட்டா போட்டி
  • கிரகங்கள், சூரியன், சந்திரயான், செயற்கைக்கோள் பற்றிய கையடக்கப் புத்தகங்கள்

விருதுகள்[தொகு]

2010-ம் ஆண்டின் ”தேசிய விருது: புத்தகம் மற்றும் இதழ்கள் மூலம் அறிவியல், தொழில்நுட்ப தகவல் தொடர்பில் தனித்துவ ஈடுபாட்டு முயற்சிக்கு”[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. என்.ராமதுரை; N.Ramadurai. "ராமதுரை காலமானார்". பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.
  2. அறிவியல் தொடர்புக்கான தேசிய விருது

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமதுரை_(எழுத்தாளர்)&oldid=3284492" இலிருந்து மீள்விக்கப்பட்டது