ராபிலேசியா வனக் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராபிலேசியா வனக் காப்பகம்
Rafflesia Forest Reserve
ஐயுசிஎன் வகை Iஏ (Strict Nature Reserve)
Borneo Locator Topography.png
அமைவிடம்சபா, மலேசியா
கிட்டிய நகரம்தம்புனான்
பரப்பளவு356 சதுர kiloமீட்டர்கள் (137 sq mi)
நிறுவப்பட்டது1984

ராபிலேசியா வனக் காப்பகம் (மலாய்: Hutan Simpan Rafflesia; ஆங்கிலம்: Rafflesia Forest Reserve) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, தம்புனான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு வனக்காப்பகம் ஆகும்.

1984-ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் ஏராளமாகக் காணப்படும் ராபிலேசியா (Rafflesia pricei) மலர்களைப் பாதுகாக்க, இந்த வனப் பாதுகாப்பகம் சபா வனத் துறையால் (Sabah Forestry Department) நிறுவப்பட்டது.

பொது[தொகு]

இந்த வனக் காப்பகத்தைப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature - IUCN), ஒரு பாதுகாப்பு காப்பகமாக அறிவித்து உள்ளது. இந்த வனக் காப்பகத்தின்பரப்பளவில் 356 ஹெக்டர்.

தம்புனான் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் இந்த வனக் காப்பகம் உள்ளது. உலகின் மிகப்பெரிய மலரான ராபிலேசியா மலர்களுக்காக இந்த வனக் காப்பகம் உருவாக்கப்பட்டு உள்ளது.[1] [2]

காட்சியகம்[தொகு]

ராபிலேசியா தகவல் மையம்[தொகு]

கோத்தா கினபாலுவில் இருந்து தம்புனான் செல்லும் சாலையில் ராபிலேசியா தகவல் மையம் (Rafflesia Information Centre) எனும் பெயரில் ஒரு தகவல் அலுவலகத்தை அமைத்து உள்ளார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rafflesia Information Centre, Tambunan | Forest Reserve | Sabah Tourist & Travel Guide | Malayisia". sabah.attractionsinmalaysia.com. 6 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Rafflesia Forest Reserve: Conserving not only Rafflesia but also Endemic, Rare and Interesting Insects". 6 April 2022 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் காண்க[தொகு]

மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல்

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Rafflesia Forest Reserve". சபா வனத்துறை. 2012-02-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-04-06 அன்று பார்க்கப்பட்டது.