ராபர்ட் ரைட் (இதழாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராபர்ட் ரைட் (இதழாளர்)

ராபர்ட் ரைட்  (Robert Wright 15 சனவரி 1957) அமெரிக்க நூலாசிரியர், கல்வியாளர் மற்றும் இதழாளர் ஆவார். பிளாக்கிங் ஹெட்ஸ் தொலைக்காட்சியைத் தொடங்கி நடத்தி வருபவர். வரலாறு, மதம், அறிவியல், உளவியல், கடவுள் என பல துறைகள் தொடர்பான நூல்களை எழுதியுள்ளார். பிரின்சுடன் பல்கலைக் கழகத்தில் அறிவியலுக்கும் புத்தமதத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும் கருத்தரங்குகளில் பாடம் நடத்துகிறார். நியூ அமெரிக்கா பவுண்டேசனில் முதிய உறுப்பினராகப் பதவி வகிப்பவர்.[1]

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

அமெரிக்காவில் ஓக்லகோமாவில்  லாட்டன் என்னும் ஊரில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார்.[2] சான் பிரான்சிசுக்கோவில் வாழ்ந்தார். டெக்சாசு பல்கலைக்கழகத்திலும் பிரின்சுடன் பல்கலைக்கழகத்திலும் படித்தார். சமூக உயிரியலைப் பயின்றார். எழுத்தாளரும் பேராசிரியருமான ஜான் மெக்பி இவருடைய ஆசிரியரும் முன்னோடியுமாவார்.

ராபர்ட் ரைட் 2000 ஆண்டுத் தொடக்கத்தில் பிரின்சுடன் பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பேராசிரியாராகப் பணிபுரிந்தார். மதமும் மனித இயல்புகளும் என்ற  தலைப்பிலும் மதங்களின் வளர்ச்சி என்பது பற்றியும் மாணவர்களுக்குக் கற்பித்தார்.

இணையத் தொலைக்காட்சிப் பணிகள்[தொகு]

2002 ஆம் ஆண்டில் மீனிங் ஆப் லைப் என்ற  இணையத்  தொலைக்காட்சியில் பல் துறை அறிஞர்கள், அறிவியலாளர்கள், பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள், போன்றோரை நேர்காணலில் சந்தித்து, உரையாடி மதம், கடவுள், ஆன்மிகம் தொடரபான வினாக்களைக்  கேட்டு அவர்களுடைய கருத்துகளைப் பதிவு செய்து ஒளிபரப்பினார்.[3] அவர்களில் முகாமையானவர்கள் கரேன் ஆர்ம்ஸ்டராங், டேனியல் டென்னட், பிரிமென் டைசன், ஸ்டீவன் பிங்கர் ஆவார்கள்.  

2005 நவம்பர் 1இல் ராபர்ட் ரைட்  பிளாக்கிங்ஹெட்ஸ் தொலைக்காட்சியை மிக்கி காஸ் மற்றும் கிரேக் டிங்கில் ஆகியோருடன் இணைந்து, தொடங்கி நடப்பு நிகழவுகள் பற்றிய அறிஞர்களின்  உரையாடல்களை   ஒளிபரப்பச் செய்தார்.[4]

இதழாளராக[தொகு]

தி சயன்சஸ், தி நியூ ரிபப்ளிக், தி வில்சன் குவார்ட்டர்ளி ஆகிய இதழ்களின் ஆசிரியாராக இருந்தார். மேலும் தி அட்லாண்டிக், தி நியூ யார்க்கர் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ்,  தி ஒபினியனேட்டர் போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

மதம் பற்றிய ஆய்வுகள்[தொகு]

மதம் பற்றிய தம் கருத்துகளை எவொலுயூசன் ஆப் காட் என்ற நூலில் விரிவாக எழுதினார். கடவுள் என்னும் கருத்து கற்பனையான ஒன்று எனவும், தாம் கடவுளைப் பற்றிக் கவலைப் படாதவர் என்றும், மேலும் மதமற்ற மனித நேயர் என்றும் கூறுகிறார். மதத்தினால் நல்லவை ஏற்படுவதைவிட தீயவையே மிகுதியாக ஏற்படுகின்றன என்பது இவரது கருத்து. 2014 இல் புத்த மதமும் நவீன உளவியலும் என்ற தலைப்பில் ஆறு வாரங்கள் உரையாற்றினார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • 1989 த்ரீ சயன்டிஸ்ட்ஸ் அண்ட் தேர் காட்ஸ் [5] 
  • 1994 தி மோரல் அனிமல் 
  • 2001 நான் சிரோ: தி லாஜிக் ஆப் ஹியூமன் டெஸ்டினி 
  • 2009 தி எவொலூசன் ஆப் காட் 
  • 2017 ஒய் புத்திசம் இஸ் ட்ரூ

மேற்கோள்[தொகு]

  1. "Robert Wright - Senior Future Tense Fellow". newamerica.net. The New America Foundation. பார்த்த நாள் 26 August 2011.
  2. Debold, Elizabeth. "Suggestions of a Larger Purpose An interview with Robert Wright". enlightennext.org. Enlightennext Magazine. பார்த்த நாள் 25 August 2011.
  3. Meaningoflife.tv at the வந்தவழி இயந்திரம் (archived March 5, 2002)
  4. "About Us". bloggingheads.tv. பார்த்த நாள் 27 August 2011.
  5. https://www.amazon.com/Robert-Wright/e/B000AP9O2U