உள்ளடக்கத்துக்குச் செல்

ராதிகா வீணா சாதிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராதிகா வீணா சாதிகா
பிறப்புராதிகா உம்டேகர் புத்கர்
1982 (அகவை 4344)[1]
குவாலியர், மத்திய பிரதேசம், இந்தியா
பணிவிசித்திர வீணை மற்றும் சித்தார் கலைஞர்
பெற்றோர்சிறீராம் உம்டேகர் மற்றும் சும்ருதி உம்டேகர்
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்இந்திய செவ்வியல் இசை
இசைக்கருவி(கள்)விசித்திர வீணை
வலைத்தளம்
www.veenavenuartfoundation.com

ராதிகா வீணா சாதிகா (Radhika Veena Sadhika) என்றும் அழைக்கப்படும் ராதிகா உம்டேகர் புத்கர் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விசித்திர வீணை வாசிப்பவரும், வீணை ஆசிரியரும் ஆவார். இவர் உலகின் முதல் பெண் விசித்திர வீணைக் கலைஞர் ஆவார்.[சான்று தேவை]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

சாதிகா, பல தலைமுறைகளுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியருக்குக் குடிபெயர்ந்த இசைக்கலைஞர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[2]இவரது தாத்தா பாலபாவு உம்டேகர், குவாலியர் கரானாவில் பயிற்சி பெற்ற ஒரு பாடகர் ஆவார்.[3] அவர் அப்போதைய குவாலியர் சமசுதானத்தின் ஆட்சியாளர்களான சிந்தியாக்களின் அரசவை இசைக்கலைஞராகவும் இருந்தார்.[4] அதேபோல், சித்தார் மற்றும் உருத்ர வீணை வாசிப்பாளரான இவரது தந்தை சிறீராம் உம்டேகர், சித்தார், சுர்பகார் மற்றும் ருத்ர வீணை ஆகியவற்றை வாசித்தும் கற்பித்தும் வந்தார்.[3][3] இவரது முதல் குரலிசை நிகழ்ச்சி குழந்தையாக இருந்தபோதே நடந்தது.[3] இவர் முதலில் பாரம்பரியக் குரலிசையும் சித்தாரும் பயின்றார்.[3] இவருக்கு 12 வயதாக இருந்தபோது, ​​இவர் ஒரு சித்தார் கலைஞராக அறியப்படத் தொடங்கினார். இரட்டை முதுகலைப் பட்டத்தையும் பல தங்கப் பதக்கங்களையும் பெற்றார்.[4] பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, இவரும் இவரது தந்தையும் விசித்திர வீணை[விளக்கம் தேவை] பற்றி அறிந்து கொண்டனர், மேலும் இவர் அந்த இசைக்கருவியை வாசிக்கத் தொடங்கினார்.[3] வீணையின் அளவு மற்றும் எடை காரணமாக பலர் அந்த இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்ளவில்லை. பின்னர், இவர் மோகன் வீணை மேஸ்ட்ரோ விஸ்வ மோகன் பட்டிடம் பயிற்சி பெற்றார்.[3] தற்போது இவர் நவி மும்பையில் வசித்து வருகிறார், அங்கு இவர் தனது வீணை வேணு கலை அறக்கட்டளை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.[3]

இசை வாழ்க்கை

[தொகு]

சாதிகா தனது இசைப் படிப்பை பாரம்பரிய குரலிசை மற்றும் சித்தார் பயின்று தொடங்கினார். பின்னர் தனது இளமைப் பருவத்தின் ஆரம்பத்தில் விசித்திர வீணையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.[3] இவர் உலகின் முதல் பெண் விசித்திர வீணை கலைஞர் என்று அங்கீகரிக்கப்படுகிறார்.[4] தேசிய கலைநிகழ்ச்சி மையத்தால் (NCPA) ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர வாத்திய இசை விழாவான சாஸ்-இ-பஹாரில் இவர் பங்கேற்றார்.[3] இவர் அந்த இசைக்கருவியின் இலகுவான மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தினார்.[5] பாரம்பரிய விசித்திர வீணை 5 அடி நீளமும் 5 கிலோ எடையும் கொண்டதாக இருக்கும் நிலையில், ராதிகாவின் பதிப்பு 48 அங்குல நீளமும் 2 கிலோ எடையும் மட்டுமே கொண்டது.[5]

சாதிகா இந்தியாவில் பல இசை விழாக்களில் பங்கேற்றுள்ளார்.[6] நிகழ்ச்சிகளைத் தவிர, இவர் நவி மும்பையில் உள்ள வீணை வேணு கலை அறக்கட்டளையில் வீணையையும் கற்பிக்கிறார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sangeet Sat Nov 6 with Sangeet Team on WPRB Princeton 103.3 FM". spinitron.com (in ஆங்கிலம்). Retrieved 2022-06-14.
  2. "One of a kind". DNA India (in ஆங்கிலம்). Retrieved 2022-06-11.
  3. 1 2 3 4 5 6 7 8 9 10 11 Kusnur, Narendra (2018-04-05). "Of sur and tone" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/music/of-sur-and-tone/article23445865.ece. பிழை காட்டு: Invalid parameter "ராதிகா" in <ref> tag. The supported parameters are: details, dir, follow, group, name.
  4. 1 2 3 "How the world's first female vichitra veena player found the instrument that spoke to her soul". Firstpost (in ஆங்கிலம்). 2018-04-07. Retrieved 2022-06-11.
  5. 1 2 Basu, Indrani. "Navi Mumbai musician creates lighter Vichitra Veena | Navi Mumbai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-06-11.
  6. Vandana, Shukla. "Of a vichitra girl and her veena | undefined News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-06-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதிகா_வீணா_சாதிகா&oldid=4539056" இலிருந்து மீள்விக்கப்பட்டது