உள்ளடக்கத்துக்குச் செல்

ராதா ராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராதா ராகவன் (Radha Raghavan)(பிறப்பு 3 ஜுன் 1961) கேரளாவைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி ஆவார். இவர் கேரள சட்டமன்றத்தில் இரண்டு முறை உறுப்பினராக பதவியில் இருந்தார். தனது இரண்டாவது பதவியிலிருக்கும்போது விலகினார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ராதா ராகவன் ஜூன் 3, 1961ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது பள்ளிப் படிப்பை மேல்நிலை வரை பயின்றார்.[1]

அரசியல்

[தொகு]

ராகவன் மத்திய வர்ஜன சமிதியின் கேரளத் தலைவராகவும், ஆதிவாசி விகாஸ் பரிஷத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். ஜனநாயக இந்திய காங்கிரசின் செயற்குழுவின் உறுப்பினராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐஎன்சி) கட்சியுடன் இணைந்தவர். ஐ.என்.சி அரசியல்வாதியான இவரது கணவர் இறந்ததைத் தொடர்ந்து, பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட வடக்கு வயநாடு தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டார். பத்தாவது கேரள சட்டப்பேரவைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் மீண்டும் ஒரு முறை போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தனது பதவியிலிருந்து விலகினார். விளிம்புநிலை சமூகங்களின் நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட தனது சமூகப் பணியினைத் தொடர்ந்தார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி கே. ராகவன் மாஸ்டரை மணந்தார்‌. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Radha Raghavan". Kerala Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதா_ராகவன்&oldid=3185973" இலிருந்து மீள்விக்கப்பட்டது