ராதா குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராதா குமார் (Radha Kumar) ஓர் இந்திய பெண்ணியவாதி, கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். இவரது இன மோதல்கள் குறித்தும் மற்றும் சமாதான செயல்முறைகளில் கவனம் செலுத்தும் பணிகள் அனைத்தும் வலுவான பெண்ணிய கண்ணோட்டத்தில் அமையும்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

குமார், முன்னாள் அதிகாரமிக்க அதிகாரியும்,இந்திய நிர்வாக சேவையின் உயரடுக்கு உறுப்பினருமான லோவ்ராஜ் குமாரின் மகள் ஆவார்.இவரது தாயார் தர்மா குமார், ஓர் வரலாற்றாசிரியர். லோவ்ராஜ் குமார் உத்தரகண்ட் பகுதியைச் சேர்ந்தவர் என்றாலும், தர்மா தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு தமிழ் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். ராதா குமார் டெல்லியில் வளர்ந்து நவீன பள்ளியில் (புது தில்லி) படித்தார். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்[தொகு]

குமார் பலவிதமான தலைப்புகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது புத்தகங்கள் பெரும்பாலும் பாலின பிரச்சினைகளில் உள்ள சிக்கலான சூழ்நிலைகளை பற்றியதாக இருக்கிறது. வழக்கமாக இந்த முறையில் உரையாற்ற இவர் தேர்ந்தெடுத்த மோதல்கள் ஒரு முஸ்லீம் கட்சி அல்லது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அல்லது இவை இரண்டையும் உள்ளடக்கியது.

இவர் டெல்லியில் அமைந்துள்ள முஸ்லீம் சிறுபான்மை கல்வி நிறுவனமான ஜாமியா மிலியா இஸ்லாமியாவில் அமைதி மற்றும் மோதலுக்கான தீர்வுக்கான நெல்சன் மண்டேலா மையத்தில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். மேலும் ஃபோர்டு பவுண்டேஷன் பொன்ற அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவங்களிடம் இருந்து நிதியுதவி பெற்று நடத்தப்படும் டெல்லி பாலிசி குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.[1]

காஷ்மீர் பேச்சுவாத்தை குழு[தொகு]

2010 அம ஆண்டு அக்டோபரில், இந்திய மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவால் நியமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீருக்கான பேச்சுவார்த்தை குழுவின் மூன்று நபர்களில் ஒருவராக குமார் நியமிக்கப்பட்டார். [2] [3] இந்த குழுவிற்கு டைம்ஸ் ஆப் இந்தியாவின் முன்னாள் ஆசிரியர் திலீப் பட்கோங்கர் தலைமை தாங்கினார். முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் எம்.எம்.அன்சாரி அவர்களும் இந்த குழுவில் இடம்பெற்றார்.

வெளியிடப்பட்ட படைப்புகள்[தொகு]

  • பிரிந்து வீழ்வதா?: போஸ்னியா பிரிவினை
  • ஆழமாக பிளவுபட்ட சமூகங்களில் சமாதானத்தை பேச்சுவார்த்தை நடத்துதல்: உருவகப்படுத்துதல்களின் தொகுப்பு
  • பிரிவினையோடு சமாதானம் செய்தல்
  • இந்தியாவில் பெண்கள் உரிமைகள் மற்றும் பெண்ணியத்திற்கான இயக்கங்கள் 1900-1990 : ஓர் வரலாறு
  • போஸ்னியா-ஹெர்சகோவினா: போருக்கும் அமைதிக்கும் இடையில் (இணை ஆசிரியர்)
  • ஒரு காஷ்மீர் தீர்வுக்கான கட்டமைப்புகள்
  • போரில் சொர்க்கம்: காஷ்மீரின் அரசியல் வரலாறு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Professor Radha Kumar". Delhi Policy Group.
  2. "Padgaonkar, Radha Kumar & Ansari to be interlocutors". தி எகனாமிக் டைம்ஸ். 14 October 2010. http://articles.economictimes.indiatimes.com/2010-10-14/news/27589776_1_interlocutors-m-m-ansari-jammu-and-kashmir. பார்த்த நாள்: 29 July 2012. 
  3. "Radha Kumar to stay J&K interlocutor". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 August 2011. https://timesofindia.indiatimes.com/india/Radha-Kumar-to-stay-JK-interlocutor/articleshow/9548081.cms. பார்த்த நாள்: 18 November 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதா_குமார்&oldid=3033983" இலிருந்து மீள்விக்கப்பட்டது