உள்ளடக்கத்துக்குச் செல்

ராண்டி பௌஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராண்டி பௌஷ்
டாக்டர் ராண்டி பௌஷ், 2008
பிறப்பு(1960-10-23)அக்டோபர் 23, 1960
பால்டிமோர், மேரிலேண்ட், அமெரிக்கா
இறப்புசூலை 25, 2008(2008-07-25) (அகவை 47)
சீஸாபியேக், விர்ஜீனியா, அமெரிக்கா
கணையப் புற்றுநோய்
தேசியம்அமெரிக்கர்
துறைகணினி அறிவியல்
மனித கணினி ஊடாட்டம்
பணியிடங்கள்கார்னெகெ மெல்லன் பல்கலைக்கழகம்
விர்ஜீனியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பிரவுன் பல்கலைக்கழகம்
கார்னெகெ மெல்லன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஆல்ஃப்ரெட் ஸ்பெக்டர்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஜெஃப்ரி பியர்ஸ்
டெஸ்னி டான்
மாத்யூ கோன்வே
ஆடம் ஃபாஸ்
ஆண்ட்ரூ ஃபவுலிங்
ரிச் கோஸ்வியலர்
கென் ஹின்க்லே
கெயிட்டி கெல்லிஹெர்
அறியப்படுவதுஅலிஸ் மென்பொருள் செயல்திட்டத்தின் உருவாக்குநர்
CMU வின் பொழுதுபோக்கு தொழில்நுட்ப மையத்தின் இணை நிறுவனர்
வால்ட் டிஸ்னி இமாஜினியரிங் உடன் இணைந்து விர்ச்சுவல் ரியாலிட்டி ஆய்வு
வாழ்வைப் பற்றிய உற்சாகமூட்டும் பேச்சுகள்
#1 சிறப்பான விற்பனையாகும் புத்தகம்
கணையப் புற்றுநோயுடன் போராட்டம்
விருதுகள்Karl V. Karlstrom Outstanding Educator Award
ACM Special Interest Group on Computer Science Education
Award for Outstanding Contributions to Computer Science Education
Fellow of the ACM
டைம்'s Time 100[1]

ராண்டோல்ஃப் ஃப்ரெட்ரிக் "ராண்டி" பௌஷ் [2] (அக்டோபர் 23, 1960 – ஜூலை 25, 2008) என்னும் இவர் கணினி அறிவியல் மற்றும் மனிதன்-கணினி ஊடாடுதல் ஆகிய துறைகளைச் சார்ந்த அமெரிக்க பேராசிரியர் ஆவார். இவர் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள கார்னெகெ மெல்லன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். செப்டம்பர் 2006 -இல் தான் கணையப் புற்றுநோயின் இறுதிநிலையில் இருப்பதை பௌஷ் அறிந்து கொண்டார். "கடைசி விரிவுரை: உங்கள் குழந்தைப்பருவ கனவுகளை உண்மையாக எட்டுவது (The Last Lecture: Really Achieving Your Childhood Dreams)" என்ற மிகச்சிறந்த விரிவுரையை செப்டம்பர் 18, 2007 இல் கார்னெகெ மெல்லன் பல்கலைக்கழகத்தில் ஆற்றினார். இந்த விரிவுரையானது, YouTube வீடியோ மற்றும் பிற மீடியாக்களில் மிகவும் பிரபலமானது. இதே விஷயம் தொடர்பாக, கடைசி விரிவுரை (The Last Lecture) என்ற ஒரு புத்தகத்தையும் அவர் மற்றொருவருடன் இணைந்து எழுதினார். இந்த புத்தகம், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் சிறந்த விற்பனைக்கான பட்டியலில் முதலிடத்தை எட்டியது. கணையப் புற்றுநோய் முற்றிய நிலையில் ஜூலை 25, 2008 -இல் பௌஷ் இறந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மேரிலேண்டில் உள்ள பால்ட்டிமோர் என்ற இடத்தில் பௌஷ் பிறந்தார், மேரிலேண்டில் உள்ள கொலம்பியாவில் வளர்ந்தார்.[2] கொலம்பியாவில் உள்ள ஓக்லாண்ட் மில்ஸ் உயர்நிலை பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தவுடன், 1982 -ஆம் ஆண்டு மே மாதத்தில் ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் பௌஷ் அவருடைய இளங்கலை பட்டத்தை கணினி அறிவியல் துறையில் பெற்றார். 1988 -ஆம் ஆகஸ்டில், கார்னெகெ மெல்லன் பல்கலைக்கழகத்தில், கணினி அறிவியல் துறையில், தன்னுடைய ஆய்வை (Ph.D.) முடித்தார்.[3] பௌஷ் தன்னுடைய முனைவர் படிப்பை முடிக்கும்வேளையில், பௌஷ் சில காலம் ஜெராக்ஸ் பேலோ அல்ட்டோ ஆய்வு மையம் (Xerox Palo Alto Research Center) மற்றும் அடோப் சிஸ்டம்ஸ் (Adobe Systems) ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தார்.[4]

கணினி அறிவியல் பணிகள்[தொகு]

வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பள்ளியில், கணினி அறிவியல் துறையில், உதவி மற்றும் இணை பேராசிரியராக 1988 முதல் 1997 -ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அங்கு இருந்தபோது, ஒரு விடுமுறைகாலத்தை வால்ட் டிஸ்னி இமாஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் (EA) ஆகிய இடங்களில் செலவிட்டார். 1997 -ஆம் ஆண்டு, கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில், கணினி அறிவியல் துறையச் சார்ந்த, மனிதன்-கணினி ஊடாடுதல் மற்றும் வடிவமைப்பு என்ற பிரிவில் இணை பேராசிரியராக ஆக்கப்பட்டார். 1998 -ஆம் ஆண்டில், CMU -வின் பொழுதுபோக்கு தொழில்நுட்ப மையத்தை (Entertainment Technology Center - ETC) டான் மரினெல்லி என்பவருடன் இணைந்து நிறுவினார், CMU வில் விர்ச்சுவல் உலகங்களை கட்டமைத்தல் (Building Virtual Worlds)[9] என்ற பாடத்திட்டத்தைத் தோற்றுவித்து அதனை 10 ஆண்டுகளுக்கு கற்றுக்கொடுத்து வந்தார். Google உடன் பயனர் இடைமுக வடிவமைப்பு தொடர்பாக ஆலோசித்து வந்தார், மேலும் PARC, இமாஜினியரிங் மற்றும் மீடியா மாட்ரிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடனும் இது தொடர்பாக பேசி வந்தார்.[4] ஆலிஸ் என்ற மென்பொருள் திட்டப்பணியையும் பௌஷ் தொடங்கினார்.[5] தேசிய அறிவியல் ஃபவுண்டேஷனின் தலைமை இளம் ஆராய்ச்சியாளராக இருந்தார் மற்றும் லில்லி ஃபவுண்டேஷன் டீச்சிங் ஃபெல்லோ என்ற அமைப்பிலும் இருந்தார்.[6] ஐந்து புத்தகங்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றைத் தனியாகவோ அல்லது மற்றவர்களுடன் இணைந்தோ எழுதியுள்ளார்.

இவர் கணினி கல்வியில் செய்த சாதனைகளைப் பாராட்டி ACM அமைப்பு இவருக்கு 2007 ஆம் ஆண்டில் இரண்டு விருதுகளை வழங்கியது: அவர் கார்ல் வி. கார்ல்ஸ்ட்ரோம் சிறந்த பயிற்றுவிப்பவர் மற்றும் கணினி அறிவியல் கல்வியில், சிறந்த பங்களிப்பை செய்தவர்களுக்கான் ACM கணினி அறிவியல் கல்வி தொடர்பான சிறப்பு கவனிப்பு குழுவின் விருது ஆகியவை ஆகும்.[7] 2007 -ஆம் ஆண்டில் ACM நிறுவனத்தில் சிறப்பு மானியம் பெறுபவராகவும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

புற்றுநோயும் மரணமும்[தொகு]

பௌஷுக்கு கணையப் புற்றுநோய்[8][9] இருப்பதாக கண்டறியப்பட்டது, விப்பிள் நடைமுறைக்கு (பான்கிரியாட்டிக்கோடியோடெக்டோமி) செப்டம்பர் 19, 2006 இல் உட்படுத்தப்பட்டார், ஆனால் இந்த செயல்முறை இவருடைய கணையப் புற்றுநோயைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.[10] ஆகஸ்ட் 2007 -இல் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை மட்டுமே நல்ல உடல்நிலையுடன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக இவரிடம் கூறப்பட்டது. விரைவிலேயே அவர், தன்னுடைய குடும்பத்தினருடன், நோர்ஃபோக் நகரத்துக்கு அருகிலுள்ள விர்ஜீனியாவின் செஸாபியாகெ என்ற இடத்திற்கு சென்றார், அங்கு அவருடைய மனைவியின் குடும்பத்தினருடன் நெருங்கியிருந்தார். மார்ச் 13, 2008 -இல், தொழிலாளர், நலம் மற்றும் மனிதநேய சேவைகள், கல்வி மற்றும் தொடர்பான அமைப்புகளுக்கான அமெரிக்க செனட் நிதியமைப்பு துணைக்குழுவுக்கு முன்பாக கணையப் புற்றுநோய்க்காக அதிக அளவிலான நிதியுதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[11] இதற்கு ஒரு வாரம் முன்பாக, அவர் வலது நுரையீரலில், ஊசி வழியான ப்ளூரல் எஃப்யூஷனுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.[12]

மே 2, 2008 -இல் பாசிட்ரான் உமிழ்வு டோமோகிராஃபி (positron emission tomography) (PET) ஸ்கேன் ஒன்றில், இவருடைய நுரையீரல்களில் மிகவும் சிறிய (5 மில்லிமீட்டர்கள் (0.20 அங்) அல்லது அதை விடக் குறைவான) மெட்டாஸ்டாஸ்கள் இருப்பதாகவும், மார்பில் நிணநீர் முடிச்சு இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இவருடைய பெரிடோநீல் மற்றும் ரெட்ரோபெரிட்டோநீல் குழிகளிலும் நோய்ப்பரவல் இருப்பது கண்டறியப்பட்டது. ஜூன் 26, 2008 -இல், இதன் பின்னர் கீமோதெரபியைப் பெறப்போவதில்லை என்று சுட்டிக்காட்டினார், ஏனென்றால் அதனால் மிகவும் மோசமான பக்கவிளைவுகளை அவர் பெற்றிருந்தார். ஆனாலும், அவர் சில நோய்தடுப்பு சிகிச்சை சார்ந்த அணுகுமுறைகளைப் பின்பற்றியே வந்தார்.[13] ஜூலை 24, பௌஷின் சார்பாக ஒரு அடையாளம் மறைத்த ஒரு நண்பர், பௌஷின் வலைப்பக்கத்தில், சமீபத்திய PET ஸ்கேன்களிலும், பயாப்ஸியிலும் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிகமாக புற்றுநோயானது முற்றி விட்டது என்பது தெரிய வந்தது, பௌஷின் உடல்நிலை " கவலைக்குரியதாக" மாறிவிட்டது, "அவர் முன்பிருந்ததை விடவும் மோசமான உடல்நிலை சீர்கேட்டில் உள்ளார்" என்று தெரிவித்தார். மேலும் அந்த நண்பர், வாழ்நாளின் இறுதியில் இருப்பவர்களுக்கான, வலியின்மை கவனிப்பு வழங்கும் ஹோஸ்பைஸ் திட்டத்தில் பௌஷ் பதிவு செய்துள்ளதாகவும் கூறுகிறார்.[13]

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


செஸாபியேக், விர்ஜீனீயாவில் உள்ள தன்னுடைய குடும்ப வீட்டில் ஜூலை 25, 2008 -ஆம் தேதி கணையப் புற்றுநோயால் பௌஷ் 47 -ஆம் வயதில் இறந்தார். அவருடைய மனைவி ஜெய், மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் டைலன், லோகன் மற்றும் சோலே ஆகியோருடன் அவர் வாழ்ந்து வந்தார்.[14]

உங்கள் குழந்தைப்பருவ கனவுகளை உண்மையிலே அடைவது (Really Achieving Your Childhood Dreams)[தொகு]

பௌஷ் தன்னுடைய "கடைசி விரிவுரையை", உங்கள் குழந்தைப்பருவ கனவுகளை உண்மையிலே அடைவது என்ற தலைப்பில் CMU -இல் செப்டம்பர் 18, 2007 -இல் வழங்கினார்.[15] அக்டோபர் 2007 -இல் தன்னுடைய உரையின் ஒரு சுருக்கமான வடிவத்தில் ஒபெரா ஷோவில் ராண்டி பௌஷ் வழங்கினார்.[16][17] இந்த உரையானது, தலை சிறந்த கல்வியாளர்களிடம், தன்னுடைய கடைசி உரையை ஆற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தால், ஒவ்வொருவரும் எதை உலகிற்கு கூற விரும்புவார்கள் என்று கேட்டு நடத்தப்படும் ஒரு தொடர் நிகழ்ச்சியின் ஒரு பிரிவாக நடத்தப்பட்டது, இந்த "கடைசி பேச்சு" என்ற பேச்சானது, "இதுவே உங்களுக்கு கடைசி வாய்ப்பு என்று உங்களுக்கு தெரிந்தால் உலகிற்கு எதை வழங்க விரும்புவீர்கள்?" என்ற தலைப்பிலேயே தொடர்ந்து நடத்தப்பட்டது. பேசுவதற்கு முன்பு, பௌஷ் தொடர்ச்சியான நின்றநிலை மரியாதையை பார்வையாளர்களிடமிருந்து பெற்றார், அதில் 400 க்கும் மேற்பட்ட சக பணியாளர்களும், மாணவர்களும் இருந்தனர். அவர் அவர்களை உட்காருமாறு கோருவதற்காக, "பெருமையை நான் அடையவிடுங்கள் (Make me earn it)," என்று சொன்னபோது, பார்வையாளர்களிலிருந்து ஒருவர், "நீங்கள் முன்பே அடைந்து விட்டீர்கள் (You did!)" என்று பதிலுக்கு கத்தினார்.[8][18]

தன்னுடைய விரிவுரையின்போது, பௌஷ் மிகவும் உற்சாகமாகவும், நகைச்சுவையாகவும் பேசினார், நுணுக்கமான துணுக்குகளையும், கணினி அறிவியல், பொறியியல் கல்வி போன்றவற்றைப் பற்றிய உள்ளுணர்வுகளையும், பலநிலை கூட்டமைவுகளை உருவாக்குவது பற்றியும், குழுக்களாக பணியாற்றுவது, மற்றவர்களுடன் கலந்துரையாடுவது பற்றியும் பல விஷயங்களைக் கூறினார், உணர்ச்சிமயமான வாழ்க்கை கல்வியையும், மேடையிலேயே புஷ் அப்களையும் கூட செய்து காட்டினார். "கடைசி விரிவுரை (Last Lecture)" தொடரானது சமீபத்தில் "பயணங்கள்" என்று பெயர்மாற்றப்பட்டதில் இருந்த ஒரு மறை பொருளைப் பற்றியும் அவர் கருத்தைப் பகிர்ந்து கொண்டார், இதனை, "ஒரு வழியாக நான் இந்த இடத்திற்கு வந்து விட்டேன், அவர்களோ பெயரை மாற்றிவிட்டார்கள்" என்று கூறியதன் மூலம் சுட்டிக்காட்டினார்.[14] பௌஷ் தன்னுடைய விரிவுரையை முடித்தவுடன், எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் (தற்போது இந்த நிறுவனம் CMU உடன் இணைந்து ஆலிஸ் 3.0 ஐ வடிவமைத்து வருகிறது[19]) நிறுவனத்தின் சார்பாக ஸ்டீவ் ஸீபோல்ட் என்பவர், கணினி அறிவியிலில் பெண்களுக்கான நினைவு ஸ்காலர்ஷிப்பை வழங்கவிருப்பதாக அறிவித்தார். இதனை கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் பௌஷ் பெண்களுக்கு அளித்த ஆதரவு மற்றும் வழிகாட்டுதலின் அங்கீகரிப்பாக தனது நிறுவனம் செய்வதாக அறிவித்தார்.[8]

CMU -வின் தலைவர் ஜாரெட் கோஹன் பேசும்போது, பௌஷின் மனிதநேயத்தைப் பாராட்டி மிகவும் உணர்ச்சிவயப்பட்டு, பல்கலைக்கழகம் மற்றும் கல்விக்கு பௌஷின் பங்களிப்புகள் "மிகவும் போற்றத்தக்கது மற்றும் ஆச்சரியமளிக்கக்கூடியது (remarkable and stunning)" என்று கூறினார்.[20] அதன் பின்னர் CMU பௌஷ் உலகில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கொண்டாடும் விதமாக,[21] CMU வின் புதிய கணினி அறிவியல் கட்டிடம் மற்றும் கலை மையக் கட்டிடம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு நடைபாதையை உருவாக்கி அதற்கு பௌஷின் பெயரைச் சூட்டுவோம் என்று அறிவித்தார். இது இந்த இரண்டு துறைகளையும் இணைத்த பௌஷின் நோக்கத்தைச் சுட்டிக்காட்டுவதாக அமையும். பௌஷின் கடைசி விரிவுரைக்கு பின்பு பேசிய, பிரவுன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரி வேன் டாம் கண்ணீருடனும், கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளுடனும் அவருடைய நம்பிக்கையையும், தலைமையையும் பாராட்டி பேசினார், அவரை முன்மாதிரி மனிதர் என்று அழைத்தார்.[20][22][23]

கடைசி விரிவுரை (The Last Lecture)[தொகு]

டிஸ்னிக்கு சொந்தமான ஹைபீரியன் என்ற பதிப்பகம், தி லாஸ்ட் லெக்சர் என்ற தலைப்பில் பௌஷைப் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிடுவதற்கான உரிமைகளுக்கு $6.7 மில்லியன்களை வழங்கியது, இந்த புத்தகத்தை பௌஷ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையின் நிருபர் ஜெஃப்ரி ஸாஸ்லோ ஆகியோர் இணைந்து எழுதினார்கள்.[24] ஏப்ரல் 28, 2008 -இல் இந்த புத்தகம் நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனை புத்தகமாக மாறியது.[25] தி லாஸ்ட் லெக்சர் பௌஷின் உரையை விரிவாக கூறுகிறது. இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 400,000 பிரதிகளாக இருந்தது, மேலும் இது 46 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 85 வாரங்களுக்கும் மேலாக, நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனை பட்டியலில் நீடித்தது, மேலும் தற்போது அமெரிக்காவில் மட்டும், 4.5 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்த புத்தகம் ஒரு திரைப்படமாக எடுக்கப்படும் என்ற யூகங்கள் இருந்தாலும், பௌஷ் அந்த வதந்திகளை மறுத்தார், அதனை "புத்தகமாக வழங்குவதற்கு காரணம் உள்ளது, ஆனால், ஒரு விரிவுரையின் கதையை திரைப்படமாக வழங்குவது என்றால், நாம் அதை முன்பே பார்த்து விட்டிருக்கிறோம்" என்று கூறி மறுத்தார்.[26]

ஊடகப் பதிவு[தொகு]

ABC தொலைக்காட்சியின் வோர்ல்ட் நியூஸ் வித் சார்லஸ் கிப்சன் என்ற நிகழ்ச்சியில், செப்டம்பர் 21, 2007 -இல் பௌஷ் "வாரத்தின் சிறந்த நபர்" என்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.[27] அவருடைய "கடைசி விரிவுரை" உலக ஊடகங்களை அதிக அளவில் ஈர்த்தது,[28] மேலும் இணையத்தில் பெரிய ஹிட்டாகியது, வழங்கப்பட்ட முதல் மாதத்திற்குள்ளாகவே ஒரு மில்லியன் முறைகளுக்கும் மேலாக பார்க்கப்பட்டது.[29] அக்டோபர் 22, 2007 -இல் பௌஷ் தி ஒபெரா வின்ஃப்ரே ஷோவில் கலந்து கொண்டார், இதில் அவருடைய நிலையை விவரித்தார், மற்றும் அவருடைய "கடைசி விரிவுரையை" சுருக்கமாக விவரித்தார்.[17] அக்டோபர் 6, 2007 -இல், பிட்ஸ்பர்க் ஸ்டீலர்ஸ் அணியின் வழக்கமான பயிற்சியின்போது, பௌஷ் அவர்களுடன் சேர்ந்து கொண்டார், அதன் பின்னர்தான் அந்த அமைப்பு, தன்னுடைய "கடைசி விரிவுரையில்" குறிப்பிட்டது போன்ற குழந்தைப்பருவ கனவுகளில் ஒன்று NFL அணியில் விளையாட வேண்டும் என்பது என்ற செய்தியை அறிந்து கொண்டனர்.[30] ஏப்ரல் 9, 2008 -இல், ABC நெட்வொர்க், டயனெ சாயர் வழங்கிய ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்றை பௌஷைப் பற்றி, "தி லாஸ்ட் லெக்சர்: ஏ லவ் ஸ்டோரி ஃபார் யுவர் லைஃப்" என்ற பெயரில் ஒளிபரப்பியது.[31][32] ஜூலை 29, 2008 -இல், தி லாஸ்ட் லெக்சர் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியை, பௌஷையும் மற்றும் அவருடைய பிரபலமான கடைசி விரிவுரையையும் நினைவு கூறும் வண்ணம் ABC நிறுவனம் ஒளிபரப்பியது.[33]

பிற விரிவுரைகளும் தோற்றங்களும்[தொகு]

விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில், 850 பேர் முன்னிலையில், நவம்பர் 27, 2007 -இல் நேர நிர்வாகம்[34] தொடர்பான விரிவுரை ஒன்றை பௌஷ் வழங்கினார்.[35] மார்ச் 2008 -இல், ஒரு பொது சேவை அறிவிப்பு வீடியோவில் பௌஷ் தோன்றினார்[36] மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு தன்னுடைய ஆதரவை காங்கிரஸின் முன்னிலையில் உறுதிப்படுத்தினார்.[37] மே 18, 2008 -இல், பௌஷ் கார்னெகி மெலனில் ஒரு திடீர் விஜயம் செய்து, ஒரு தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றினார்,[38] மேலும் ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸின் டிப்ளமா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்,[39] மற்றும் மே 19 -இல் பௌஷ் குட்மார்னிங் அமெரிக்கா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.[40] இவருடைய விரிவுரையான, "உங்கள் குழைந்தைப்பருவ கனவுகளை உண்மையிலேயே அடைவது" என்பது, 2007 ஆம் ஆண்டு YouTube வீடியோ விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[41][42]

ஸ்டார் ட்ரெக்கின் தீவிர விசிறியான, பௌஷை திரைப்பட இயக்குனர் ஜே.ஜே. ஆப்ராம்ஸ் தன்னுடைய சமீபத்திய "ஸ்டார் ட்ரெக் திரைப்படத்தில் நடிக்குமாறு அழைத்தார். பௌஷின் நிலையைப் பற்றி அறிந்த ஆப்ராம்ஸ், ஒரு தனிப்பட்ட மின்னஞ்சலை பௌஷுக்கு அனுப்பி, செட்டுக்கு வருமாறு அழைத்தார். இதை ஏற்றுக் கொண்ட பௌஷும் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவுக்கு சென்று அந்த காட்சியைப் படமெடுக்க உதவினார். இந்த திரைப்படத்தில் நடித்தது மட்டுமின்றி, படத்தின் தொடக்கத்தில் ஒரு உரையாடலையும் இவர் பேசினார், ("கேப்டன், வீ ஹேவ் விஷுவல்.") மற்றும் இதற்கு கிடைத்த $217.06 சம்பளத்தை கருணை இல்லங்களுக்கு அளித்துவிட்டார்.[43][44]

கவுரவங்கள்[தொகு]

 • பிட்ஸ்பர்க் நகரக் கவுன்சில், நவம்பர் 19, 2007 -ஐ "டாக்டர் ராண்டி பௌஷ் நாள்" என்று அறிவித்தது.[45]
 • மே 2008 -இல், டைம் பத்திரிகையில், உலகின் தலைசிறந்த 100 சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக பௌஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
 • 2008 ஆம் ஆண்டின் பிட்ஸ்பர்கர் என்ற விருதையும் ராண்டி பெற்றார்.[46]
 • மே 30, 2008 -இல், ஜனாதிபதி ஜார்ஜ். டபுள்யூ. புஷ்ஷிடமிருந்து, தேசிய இளைஞர்களுடனான உங்கள் பிணைப்பிற்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்தைப் பெற்றார்.[47]
 • பிப்ரவரி 4, 2009 -இல் வால்ட் டிஸ்னி நிறுவனம், வால்ட் டிஸ்னி வேர்ல்டில், "மேட் டீ பார்ட்டி" என்ற இடத்திற்கு அருகில் ஒரு வெண்கல சிலையை வைத்தது, இதில் ராண்டி கூறிய, "ஏதேனும் ஒன்றில் சிறந்தவராக இருங்கள், அது உங்கள் மதிப்பை அதிகரிக்கும்... (Be good at something; It makes you valuable ...) மேலும், எப்போதும் ஏதேனும் புதிதாக கொண்டு வாருங்கள், அது உங்களுக்கு வரவேற்பைத் தரும் (Have something to bring to the table, because that will make you more welcome)." என்ற சொற்கள் வடிக்கப்பட்டிருந்தன.[48]
 • கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில், டிஸ்னி நினைவு பௌஷ் ஃபெல்லோஷிப் ஒன்றை வால்ட் டிஸ்னி நிறுவனம் உருவாக்கியது, இதனால் இரண்டு பட்டப்படிப்பு மாணவர்கள் பயன்பெறுவார்கள்.[49]
 • பௌஷின் கடைசி விரிவுரை நாளில், ஜாரெட் கொஹன்னின் அறிவிப்பின்படி, CMUவில் கணினி அறிவியல் கட்டிடம் மற்றும் கலை மையக் கட்டிடம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு நடைபாதை கட்டப்பட்டது, அதற்கு பௌஷின் பெயர் வைக்கப்பட்டது. இதன் மூலம் இவ்விரு துறைகளையும் அவர் இணைத்த முறைமை சுட்டிக்காட்டப்பட்டது.[21]

பிற வெளியீடுகள்[தொகு]

 • பரிமாற்ற மாடலில் உள்ளீடு மற்றும் வெளியீட்டைச் சேர்த்தல் (ஆய்வுக்கட்டுரை, CMU), 1988
 • Dann, Wanda P.; Cooper, Stephen; Pausch, Randy (2005-07-25). Learning to Program with Alice. Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0131872893. Archived from the original on 2008-10-11. பார்க்கப்பட்ட நாள் 2010-04-06.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
 • Pausch, Randy (2008-08-07). Time Management. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0982055633.

குறிப்புதவிகள்[தொகு]

 1. 1.0 1.1 Couric, Katie. "Randy Pausch". Time. Archived from the original on 2012-06-06. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 2. 2.0 2.1 Nelson, Valerie J. (2008-07-26). "Randy Pausch, 47; terminally ill professor inspired many with his 'last lecture'". Los Angeles Times. Archived from the original on 2012-12-06. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 3. "Prof Whose 'Last Lecture' Became a Sensation Dies". ABC. 2008-07-26. Archived from the original on 2008-08-13. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 4. 4.0 4.1 "Curriculum Vitae". Carnegie Mellon University. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 5. Dillon, Beth A. (2007-01-25). "Carnegie Mellon's ETC Opens In Silicon Valley". Gamasutra. பார்க்கப்பட்ட நாள் 2008-09-08.
 6. Porter, Sabrina (2008-04-28). "Randy Pausch, beloved professor and worldwide inspiration, dies at age 47". The Tartan. பார்க்கப்பட்ட நாள் 2008-10-05.
 7. "ACM Award Citation / Randy Pausch". Association for Computing Machinery. Archived from the original on 2008-08-02. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 8. 8.0 8.1 8.2 Roth, Mark (2007-09-19). "CMU professor gives his last lesson on life". Pittsburgh Post-Gazette. Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 9. "A Beloved Professor Delivers The Lecture of a Lifetime". The Wall Street Journal. 2007-09-20. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 10. Pausch, Randy (December 2007). "Short Summary". Carnegie Mellon University. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 11. "Dying Professor, Famous for His Last Lecture, Testifies Before Congress". The Chronicle of Higher Education. 2008-03-13. Archived from the original on 2008-04-16. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 12. Pausch, Randy; Zaslow, Jeffrey (2008-04-08). The Last Lecture. Hyperion. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1401323251. Archived from the original on 2009-03-02. பார்க்கப்பட்ட நாள் 2010-04-06.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
 13. 13.0 13.1 Pausch, Randy (2008-07-25). "Randy Pausch's Update page". Carnegie Mellon University. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 14. 14.0 14.1 Plushnick-Masti, Ramit (2008-07-25). "Prof whose 'last lecture' became a sensation dies". Associated Press. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 15. "Really Achieving Your Childhood Dreams". Carnegie Mellon University. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 16. "Randy Pausch reprising his "Last Lecture"". Google Video. 2007-10-24. Archived from the original on 2008-12-19. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 17. 17.0 17.1 "Confronting Death". Oprah. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 18. "Professor's Full Lecture: Part 1". ABC. 2007-10-03. பார்க்கப்பட்ட நாள் 2008-09-08.
 19. "Carnegie Mellon Collaborates With EA to Revolutionize Computer Science Education". Carnegie Mellon Today. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 20. 20.0 20.1 Robins, Gabriel (2007-09-20). "Randy Pausch's Last Lecture". University of Virginia. Archived from the original on 2008-03-12. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 21. 21.0 21.1 Heinrichs, Allison M. (2007-09-19). "Professor diagnosed with cancer offers his final words for the CMU community". Pittsburgh Tribune-Review. Archived from the original on 2007-11-14. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 22. A Beloved Professor Delivers The Lecture of a Lifetime at The Wall Street Journal , September 20, 2007
 23. The Professor's Manifesto: What It Meant to Readers, September 27, 2007
 24. Flamm, Matthew (2007-11-20). "Hyperion wins auction for The Last Lecture". Crain's New York Business. Archived from the original on 2009-10-02. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 25. "Hardcover Advice". The New York Times. 2008-06-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-05.
 26. Wilson, Craig (2008-04-08). "Professor Pausch's life, 'Lecture' go from Web to book". USA Today. பார்க்கப்பட்ட நாள் 2008-10-05.
 27. "Dying Professor's Lecture of a Lifetime". ABC. 2008-03-21. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 28. Schmitz, Von Gregor Peter (2007-10-01). "Ein todkranker Professor rührt Amerika". Spiegel (in German). பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 29. "The Professor's Manifesto: What It Meant to Readers". The Wall Street Journal. 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 30. Heinrichs, Allison M. (2007-10-04). "Dying prof tackles final dream -- the NFL". Pittsburgh Tribune-Review. Archived from the original on 2007-11-14. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 31. "Randy Pausch ABC Special about the "Last Lecture", April 2008". Google Video. 2008-04-11. Archived from the original on 2008-04-20. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 32. "ABC News: Randy Pausch, Author of 'The Last Lecture,' Dies at 47". ABC. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 33. Shattuck, Kathryn (2008-07-29). "What's On Today". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 2008-09-08.
 34. "Randy Pausch's Time Management lecture". Google Video. 2008-11-27. பார்க்கப்பட்ட நாள் 2007-11-27.
 35. "Randy Pausch: Time is All That Matters". University of Virginia Today. 2007-11-28. Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 36. "The Pancreatic Cancer Action Network Debuts a New Public Service Announcement Featuring Carnegie Mellon Professor Dr. Randy Pausch". PR Newswire. 2008-04-22. 
 37. ""Last Lecture" Professor Pausch Dies". CBS. 2008-07-25. Archived from the original on 2008-10-08. பார்க்கப்பட்ட நாள் 2008-10-05.
 38. Chute, Eleanor (2008-07-25). "Randy Pausch, noted CMU prof, succumbs to cancer". Pittsburgh Post-Gazette. பார்க்கப்பட்ட நாள் 2008-10-05.
 39. "SCS Commencement". Carnegie Mellon University. 2008-05-18. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 40. "Randy Pausch on Good Morning America, May 19, 2008". AOL. பார்க்கப்பட்ட நாள் 2008-10-05.
 41. "2007 Video Awards". YouTube. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 42. ஒரு இறுதி பிரியாவிடை (A Final Farewell), மே 3, 2008
 43. Pascale, Anthony (2008-01-19). "Inspirational Professor Given Part In Star Trek". TrekMovie. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 44. "'Last Lecture' professor dies at 47". CNN. 2008-07-25. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 45. "Master Detail Report". City of Pittsburgh. 2007-11-19. Archived from the original on 2008-07-31. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
 46. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-06. பார்க்கப்பட்ட நாள் 2010-04-06.
 47. http://download.srv.cs.cmu.edu/~pausch/news/index.html
 48. http://www.etc.cmu.edu/global_news/?q=node/242
 49. கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் நினைவு ஃபெல்லோஷிப்பை அளித்தது பௌஷை கவுரவித்தது பரணிடப்பட்டது 2009-05-22 at the வந்தவழி இயந்திரம், prnewswire.com ஐ 2009-04-05 -இல் அணுகி பெறப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

வீடியோக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராண்டி_பௌஷ்&oldid=3792394" இலிருந்து மீள்விக்கப்பட்டது