ராண்டால் அராசு
Appearance
ராண்டால் அராசு Randall Arauz | |
---|---|
தேசியம் | கோசுட்டாரிக்கர் |
பணி | உயிரியலாளர் |
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2010) |
ராண்டால் அராசு (Randall Arauz) கோசுட்டாரிக்கா நாட்டில் பணிபுரியும் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். சுறாக்களின் பாதுகாப்பு மற்றும் சுறாக்களை வேட்டையாடும் தொழிலை தடைசெய்வதற்கான முயற்சிகளுக்காக 2010 ஆம் ஆண்டு இவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1] இதைத்தவிர 2010 ஆம் ஆண்டிற்கான நிலையான மேம்பாட்டுக்கான கோதன்பர்க் விருதும் அராசிற்கு கென் செர்மனுடன் கூட்டாக பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.[2][3] கடல் ஆமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு ஒன்றையும் அராசு நிறுவி நடத்திவருகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2010 Recipient for South & Central America". goldmanprize.org. Goldman Environmental Prize. Archived from the original on 23 November 2010. பார்க்கப்பட்ட நாள் 11 November 2010.
- ↑ "Ocean scientists share one million Swedish crowns". goteborgaward.com. The Götheborg Award. Archived from the original on January 2, 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2010.
- ↑ "Biólogo Randall Arauz gana el premio Gotemburgo". pretoma.org (in Spanish). November 18, 2010. Archived from the original on March 28, 2016. பார்க்கப்பட்ட நாள் August 14, 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)