வாராந்தரி ராணி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராணி (இதழ்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வாராந்தரி ராணி  
Raniwrapper.jpg
துறை குடும்பப் பத்திரிகை
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: ர. பாஸ்கரன்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகத்தார் ராணி பப்ளிகேசன்ஸ்,
86, பெரியார் நெடுஞ்சாலை,
சென்னை - 600 007. (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: வார இதழ்

ராணி தமிழ்நாட்டில் வெளியாகிவரும் ஒரு குடும்ப வார இதழ் ஆகும். இதன் நிறுவனர் சி. பா. ஆதித்தனார். தினத்தந்தி குழுமத்திலிருந்து இந்த இதழ் வெளியிடப்படுகிறது. 1961 ஆம் ஆண்டு முதல் வெளிவரும் இந்த இதழ் மகளிர் மற்றும் சமூகத்தில் உள்ள அனைத்துத் தகவல்களை முக்கிய உள்ளடக்கமாகக் கொண்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

ராணி இதழ் அட்டையின் முதற் பக்கத்தில் திரைப்பட நடிகை ஒருவரின் படமே பெரும்பாலும் இடம் பெற்று வருகின்றது. 'நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்' என்ற தலைப்பு தலையங்கம் இடம் பெற்றுள்ள பக்கத்தின் தலைப்பில் இருக்கும். அந்தந்த வாரத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக உலாவரும் கருத்துக்களில் முக்கியமானதை முதன்மைப் படுத்தி சுருக்கமாகத் தலையங்கம் எழுதப்பட்டிருக்கும். மர்மத் தொடர் ஒன்று, இராசிபலன், மூளைக்கு வேலை (வார்த்தைகளை நிரப்பும் போட்டி) ஆகியவற்றுடன், ஒரு சிறுகதை, பெண்களின் உடல் நலம், மனநலம் குறித்த பகுதிகள் இடம்பெறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாராந்தரி_ராணி_(இதழ்)&oldid=3395023" இருந்து மீள்விக்கப்பட்டது