ராணா ஜங் பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாள பிரதம அமைச்சர்
ராண ஜங் பாண்டே
श्री मुख्तियार काजी साहेब
रणजङ्ग पाँडे
Ranajang Pande.jpg
நேபாள பிரதம அமைச்சர் ராணா ஜங் பாண்டே
மூன்றாவது பிரதம அமைச்சர்
முன்னவர் பீம்சென் தபா
பின்வந்தவர் ரங்கநாத் பௌடியால்
பதவியில்
1837–1837
பதவியில்
1839–1840
முன்னவர் புஷ்கர் ஷா
பின்வந்தவர் ரங்கநாத் பௌடியால்
தனிநபர் தகவல்
பிறப்பு கிபி 1789
காட்மாண்டு
இறப்பு 18 ஏப்ரல் 1843
காட்மாண்டு
தேசியம் நேபாளி
பிள்ளைகள் பதர்ஜங், தேக்ஜங், சமர்ஜங், சூம்செர்ஜங்
பெற்றோர் தாமோதர பாண்டே
சமயம் இந்து சமயம்

ராணா ஜங் பாண்டே (Rana Jang Pande) (நேபாளி: रणजङ्ग पाँडे), நேபாள இராச்சியத்தின் மூன்றாவது பிரதம அமைச்சராக பணியாற்றியவர். நேபாள பிரதம அமைச்சராக இருந்த தாமோதர பாண்டேவின் மகன்களில் ஒருவராவார்.[1][2]

இவர் நேபாளத்தின் பிரதம அமைச்சராக இரு முறை பதவி வகித்தவர். முதன் முறையாக 1837ம் ஆண்டிலும், இரண்டாம் முறையாக 1839–1840 ஆண்டுகளில் பணியாற்றியவர்.

நேபாள பிரதம அமைச்சராக பணியாற்றிய பீம்சென் தபாவை கைது செய்த பிறகு, ராணா ஜங் பாண்டே, நேபாள இராச்சியத்தின் பிரதம அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் பதவி வகித்தார்.

ராணா ஜங் பாண்டே, ஒருங்கிணைந்த நேபாள இராச்சியத்தை நிறுவும் பணியில் இருந்த கோர்க்கா மன்னர் இருந்த பிரிதிவி நாராயணன் ஷாவின் அரசவையில் பிரதம அமைச்சராக பணியாற்றிய கலு பாண்டேவின் மகன் ஆவார்.

1804ல் தன் தந்தையும், பிரதம அமைச்சருமான தாமோதர பாண்டேவின் மரணத்திற்கு, பீம்சென் தபா பொறுப்பானவர் எனக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Internal Server Error 500". sanjaal.com. 21 பிப்ரவரி 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. Sep 11, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Prime Ministers of Nepal". We All Nepali. Sep 11, 2017 அன்று பார்க்கப்பட்டது.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணா_ஜங்_பாண்டே&oldid=3578149" இருந்து மீள்விக்கப்பட்டது