உள்ளடக்கத்துக்குச் செல்

ராணா அய்யூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராணா அய்யூப்
பிறப்பு1 மே 1984 (1984-05-01) (அகவை 40)
தேசியம்இந்தியர்
பணிபத்திரிகையாளர், புலனாய்வு இதழாளர் மற்றும் அரசியல் விமர்சகர்
சமயம்இசுலாம்
சமயப் பிரிவுசுன்னி இசுலாம்

ராணா அய்யூப் என்பவர் இந்தியப் பெண் பத்திரிகையாளர், புலனாய்வு இதழாளர் மற்றும் அரசியல் விமர்சகர் ஆவார். தகெல்கா என்னும் புலனாய்வு இதழில் பணி புரிந்தவர்.[1]

2002இல் குசராத்தில் நிகழ்ந்த முசுலிம்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் பற்றி "குசராத்து பைல்ஸ்: அனாடமி ஆப் கவர் அப்" என்னும் பெயரில் ஒரு நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.[2] மைதிலி தியாகி என்னும் பெயரில் ரானா அய்யூப் குசராத்தில் தங்கி, குசராத்து மாநில அரசின் அதிகாரிகளையும் காவல்துறை அதிகாரிகளையும் சந்தித்து 2002 இல் நடந்த குசராத்துக் கலவரம் தொடர்பான தரவுகளைச் சேகரித்தார்.

இவரது துணிச்சல் மிக்க செயலைப் பாராட்டி 2011 ஆம் ஆண்டுக்குரிய சான்ஸ்க்ரிதி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[3]

சான்றாவணம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணா_அய்யூப்&oldid=2716182" இலிருந்து மீள்விக்கப்பட்டது