ராஜ் கௌதமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேராசிரியர் ராஜ் கௌதமன் (பிறப்பு: 1950) தமிழ் பண்பாட்டு ஆய்வாளர். பழந்தமிழ் பண்பாட்டு வரலாறுசார்ந்து முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவர். தலித் சிந்தனையாளர்.

ராஜ் கௌதமன்

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

ராஜ் கௌதமனின் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். எஸ்.கௌதமன் என்று பெயரை மாற்றிக்கொண்டார். 1950ல் விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டி என்ற ஊரில் பிறந்தார். அங்கேயே தொடக்கக் கல்வி பயின்றார். மதுரையில் உயர்நிலைப்படிப்பு. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் விலங்கியல் இளங்கலை, தமிழிலக்கியத்தில் முதுகலை, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். அ. மாதவையா பற்றிய ஆய்வுகளுக்காக முனைவர் பட்டம் பெற்றார்.

புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றார். மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா.

இவருடைய தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு எனும் நூல் சங்க இலக்கியம் பற்றிய சிறந்ததொரு ஆய்வு நூலாகும். 1990களில் தலித் அரசியல் எழுச்சி பெற்றபோது தமிழ்ச் சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இச்சூழலில் ராஜ்கௌதமனின் இந்நூல் 1994இல் வெளிவந்தது சிறப்புக்குரிய ஒன்றாகும்.

பங்களிப்பு[தொகு]

தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார்.

ஆய்வு நூல்கள்[தொகு]

 • க.அயோத்திதாசர் ஆய்வுகள்
 • பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும்
 • ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்
 • தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,
 • அறம் அதிகாரம்
 • அ.மாதவையா
 • தலித்திய விமர்சனக் கட்டுரைகள்
 • கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக.
 • கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.
 • ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்

புதினங்கள்[தொகு]

 • சிலுவைராஜ் சரித்திரம்
 • காலச்சுமை
 • லண்டனில் சிலுவைராஜ்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்_கௌதமன்&oldid=2639473" இலிருந்து மீள்விக்கப்பட்டது