ராஜ் அர்ஜூன் என்பவர் இந்திய திரைப்பட மற்றும் வலைத்தொடர் நடிகர் ஆவார். இவர் பல்வேறுபட்ட மாறுபட்ட கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் வழக்கம் கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்இந்திய திரைப்படங்களிலும் இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சீக்ரெட் சூப்பர் ஸ்டார், தலைவி,[1]ரவுடி ரத்தோர், ஷாப்ரி, அன்புள்ள தோழர், வாட்ச்மேன் ,ரெய்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் சாரா அர்ஜுன் மற்றும் மகன் சுஹான் அர்ஜுன் ஆகியோரும் இந்திய குழந்தை நடிகர்கள். ஜீ சினி விருதுகளிலிருந்து சீக்ரெட் சூப்பர் ஸ்டாருக்கான எதிர்மறை பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.