ராஜ்பிகாரி கோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர் ராஷ்பிகாரி கோஷ் (Sir Rashbehari Ghosh, 23 டிசம்பர் 1845 - 1921) இந்திய அரசியல்வாதியும், வழக்கறிஞரும், சமூக சேவையாளரும், வள்ளலும் ஆவார்.

கோஷ் அவர்களின் திறமையும், பங்களிப்புகளும் அவருக்கு தொடர்ச்சியான மரியாதைகளை வழங்கியது. கல்கத்தா பல்கலைகழகம் சட்டத்துறை பேராசிரியர் பதவி வழங்கி கவுரவித்தது. அவர் தனது வழக்கறிஞர் தொழிலில் நிறைய சம்பாதித்தார், அதனை தானமாக வழங்கும் கொடை குணம் கொண்டவராக இருந்தார்.[1]

கல்கத்தா பல்கலைகழகத்தில் அறிவியல் படிப்பிற்காக 10 லட்ச ரூபாய் பணத்தை கொடையாக வழங்கினார். இவர் ஏற்கனவே ஜாதவ்பூரில் உள்ள தேசிய கல்வி குழுமத்திற்கு 13 லட்ச ரூபாய் வழங்கியிருந்தார். அது பிற்காலத்தில் ஜாதவ்பூர் பல்கலைகழகமாக உருவெடுத்தது. தேசிய கல்விகுழுமத்தின் முதல் தலைவராக பொறுப்பு வகித்தார்.

கோஷ் அவரது கிராமத்தில் நிறைய பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் நிறுவினார். 2010ல் கந்தகோஷ் பகுதியில் உகிர்த் என்னுமிடத்தில் சர். ராஷ்பிகாரி கோஷ் மகா வித்யாலயா கட்டப்பட்டது.[2]

ராஷ்பிகாரி கோஷ் இந்திய மக்களுக்கு ஆற்றிய சீரிய பங்களிப்புகளுக்கு நன்றி பாரட்டும் விதமாக கொல்கத்தாவில் ஒரு தெருவிற்கு ராஷ்பிகாரி சாலை என்று அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது காளிகாட் மெட்ரோ நிலையத்திலிருந்து கிழக்கு நோக்கியுள்ள பள்ளிகங்க் மற்றும் கார்ஜஹாத் வரை இந்த சாலை பரவியுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sinha, D P. "Past Presidents — Rashbehari Ghose". Article. All India Congress Committee. 2 ஏப்ரல் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Sir Rashbehari Ghosh Mahavidyalaya". SRGM. 24 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. P Thankappan Nair, A History of Calcutta's Streets, Publisher: Calcutta: Firma KLM, 1987
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்பிகாரி_கோசு&oldid=3687830" இருந்து மீள்விக்கப்பட்டது