ராஜேஸ் தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜேஸ் தாஸ் தமிழ்நாட்டில் பணிபுரியம் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பீலா ராஜேசை மணந்தவர். இவர் பிப்ரவரி, 2021 முடிய தமிழக காவல் துறையில் சிறப்பு தலைமை இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு) பணியில் இருந்தவர். 2021-இல் 57 வயதாகும் இராஜேஸ் தாஸ் மீது ஒரு பெண் இந்தியக் காவல் பணி அதிகாரியை பாலியல் துன்புறுத்தல் செய்தமை குறித்து குற்றச்சாட்டு எழுந்தது. எனவே தமிழ்நாடு காவல் துறை, ராஜேஸ் தாஸ் மீது பாலியல் துன்புறத்தல் வழக்கு பதிந்து, தமிழக சிபி-சிஐடியின் கண்காணிப்பாளர் முத்தரசி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.[1][2][3][4][5] தற்போது ராஜேஸ் தாஸ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இராஜேஸ் தாஸ் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை தன்னிச்சையாக கையில் எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசின் உள்துறை செயலகம், ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் துன்புறத்தல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய ஒரு பெண் கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் ஆறு பேர் கொண்ட விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பெண் எஸ்பி பாலியல் வழக்கு: சிறப்பு டிஜிபியை விசாரிக்க பெண் எஸ்பி நியமனம்
  2. CB-CID to probe sexual harassment charges against TN DGP Rajesh Das
  3. Former Tamil Nadu senior cop Rajesh Das booked by CB-CID for sexual harassment of officer
  4. CB-CID to probe sexual harassment charges against TN DGP Rajesh Das
  5. Former Tamil Nadu senior cop Rajesh Das booked by CB-CID for sexual harassment of officer

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஸ்_தாஸ்&oldid=3689115" இலிருந்து மீள்விக்கப்பட்டது