ராஜேஷ் பட்டேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராஜேஷ் பட்டேகர் (Rajesh Patnekar, பிறப்பு: செப்டம்பர் 23, 1963) இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். பட்டேகர் வட கோவாவின், பிக்கோலிம் தொகுதியிலிருந்து, கோவா சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார். இவரது மனைவி அருணா பட்னேக்கர், மாப்புசாவில் உள்ள புனித மேரி கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியாற்றுகிறார். இவர் 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு முன்பு 2002-2007 மற்றும் 2007-2012 ஆண்டுகளில் இவர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் காதி கிராமத்தின் தலைவராகவும், கோவாவின் தொழில் துறை வாரியராகவும் பணியாற்றினார். கோவா சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர், பொது கணக்குக் குழுவின் தலைவராகவும், சட்டமன்றத்தின் பல்வேறு குழுமங்களின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்_பட்டேகர்&oldid=2720921" இருந்து மீள்விக்கப்பட்டது