உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜா ராணி (1956 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜா ராணி
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புதின்சா கே. தோராணி
நேஷனல் புரொடக்சன்ஸ்
கதைகதை வசனம் : மு.கருணாநிதி
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புசிவாஜி கணேசன்
எஸ். எஸ். ஆர்
என். எஸ். கிருஷ்ணன்
பத்மினி
ராஜசுலோச்சனா
டி. ஏ. மதுரம்
ஒளிப்பதிவுஜித்தன் பானர்ஜி
படத்தொகுப்புஏ. பீம்சிங்
விநியோகம்தேவி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிட்
வெளியீடுபெப்ரவரி 25, 1956
ஓட்டம்.
நீளம்16343 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜா ராணி 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய இப்படத்தில் கருணாநிதியால் எழுதப்பட்ட சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் போன்ற பல ஓரங்க நாடகங்கள் இடம்பெற்றன.[2]

திரைக்கதை

[தொகு]

ராணி என்ற பெண் கண்ணிழந்த ஞானக்கண்ணுவின் ஒரே மகள். குடும்ப நிலை காரணமாக வேலை தேடுகிறாள். "கீதா நாடகக் கம்பெனி"யில் டிக்கெட் விற்பவளாக வேலை கிடைக்கிறது. நாடகக் கம்பெனி முதலாளி பாபு ஒரு ஸ்திரீ லோலன். அவன் ராணியை தன்வசப்படுத்த திட்டம் போடுகிறான். ஒரு நாள் சில முரடர்கள் ராணியின் ஆபீசுக்குள் நுழைந்து அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து பணத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். அங்கு வந்த பாபு அவளைக் கெடுக்க முயற்சி செய்யவே அவள் பயந்து ஓடிப்போய் ஒரு காருக்குள் பதுங்கிக் கொள்கிறாள்.

ராஜா ஓர் எலெட்ரிக்கம்பெனி சொந்தக்காரன். நாடகக் கலையில் பற்றுள்ளவன். அவன் பாபுவின் நாடகக் கம்பெனி நாடகங்களில் நடித்து வந்தான். ராணி அவனுடைய காரில்தான் ஏறியிருந்தாள். மயக்க மருந்து காரணமாக அவள் உறங்கி விட்டாள். அவள் காரில் இருப்பதை அறியாத ராஜா காரை ஓட்டிச் செல்கிறான். வீட்டுக்கு வந்தபோதுதான் காரில் ஒரு பெண் இருப்பதை அறிகிறான். அவளை வீட்டில் படுக்க வைக்கிறான்.

தினசரிப் பத்திரிகையில் லீலா என்ற பெண் கல்யாண விஷயமாக பெற்றோரிடம் மனத்தாங்கல் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் என்ற செய்தியை ராஜா படிக்கிறான். இந்தப் பெண் தான் லீலா என நினைத்து அந்த முகவரிக்கு அவளை காரில் அழைத்துச் செல்கிறான்.

தான் தான் லீலா என ராணி சொல்லி அந்த வீட்டு வாசலில் காரிலிருந்து இறங்கிக் கொள்கிறாள். ராஜா போனதும் தன் வீட்டுக்குப் போனாள்.

பின்னர் ராணி வேலை தேடி ராஜாவின் எலெக்ட்ரிக் கம்பெனிக்கு வருகிறாள். அங்கு ராஜாவைக் கண்டதும் திடுக்கிடுகிறாள். என்றாலும் தான் லீலா தான் என்றும் பொழுது போக்கிற்காக வேலைக்கு வந்ததாகக் கூறுகிறாள். ராஜா அவளுக்கு வேலை கொடுக்கிறான்.

ராஜா ஒவ்வொரு நாளும் பங்களா வாசலில் ராணியை (லீலாவை) இறக்கி விடுவான். பங்களாவின் சொந்தக்காரியான சாந்தம் ராணி ஒவ்வொரு நாளும் தங்கள் வீட்டு வாசலில் வந்து இறங்குவதைக் கவனித்து, தனது கணவன் சமரசத்தைச் சந்தேகிக்கிறாள்.

நாடகத்துறையில் ராஜா புகழ் பெற்று வந்தான். பாபு அவனை தனது நாடகக் கம்பெனியிலிருந்து நீக்கி விடுகிறான். ராஜா சொந்தமாக ஒரு நாடகக் கம்பெனி தொடங்கி சாக்ரடீஸ் நாடகம் நடத்தும்போது பாபுவின் ஏற்பாட்டால் உண்மையான நஞ்சைக் கொடுக்க முற்பட சமரசம் மூலம் உண்மை வெளிப்பட்டு பாபு கைது செய்யப்படுகிறான்.

பின்னர் சாந்தத்துக்கு ஏற்பட்ட சந்தேகம் நீங்கிய விதத்தையும், ராஜாவும் ராணியும் திருமணத்தில் ஒன்று சேர்வதையும் சொல்வதே திரைக்கதை.[3]

ஓரங்கநாடகம்- சாக்ரடீஸ்

[தொகு]

ராஜா ராணி திரைப்படத்தில் கிரேக்க ஞானி சாக்ரடீஸ் ஓரங்க நாடகமாக இடம் பெற்றிருக்கிறது. சாக்ரடீஸாக சிவாஜி கணேசன் நடித்திருப்பாா். கிரேக்க வீதியொன்றில் சாக்ரடீஸ் 'உன்னையே நீ அறிவாய்' என்று அறிவுரை ஆற்றுகின்றாா். அப்போது அனிடெஸ், மெலிடெஸ் இருவரும் சாக்ரடீஸை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகின்றனா். நீதிபதி, சாக்ரடீஸ் விஷம் தின்று உயிா்விட வேண்டும் என மரண தண்டணை விதிக்கிறாா். சிறையில் இருக்கும் சாக்ரடீஸ் தம் மனைவியை எண்ணிப் பேசுகிறாா். கிாிட்டோ என்பவா் சாக்ரடீஸை எண்ணி வருந்துகிறாா்.காவலன் விஷக்கிண்ணத்துடன் வருகிறான். விஷமருந்தி சாகும்முறை பற்றி காவலன் கூற, சாக்ரடீஸ் கிண்ணத்தை வாங்குகிறாா். கிாிட்டோ சிறிது நேரம் கழித்துக்கூட சாக்ரடீஸ் விஷமருந்தலாம் எனக் கூறுகிறாா். அது அற்ப ஆசை என்று கூற, சாக்ரடீஸின் உடல் எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என கிாிட்டோ கேட்க, சாக்ரடீஸ் விளக்கமளிக்கிறாா்[4].

நடிகர்கள்

[தொகு]
நடிகர் வேடம்
பத்மினி ராணி
ராஜசுலோசனா கீதா
சிவாஜி கணேசன் ராஜா
எஸ். எஸ். ராஜேந்திரன் பாபு
என். எஸ். கிருஷ்ணன் சமரசம்
கே. துரைசாமி ஞானக்கண்ணு
எம். என். கிருஷ்ணன் கரெண்ட்
டி. ஏ. மதுரம் சாந்தம்
கே. எஸ். அங்கமுத்து கீதாவின் தாய்
மற்றும்..
வி. ஆர். ராஜகோபால்
டி. ஆர். நடராஜன்
ஹரிஹர ஐயர்
ஜி. எஸ். மகாலிங்கம்
சுந்தரம்
எஸ். ஏ. கண்ணன்
பொன்னுசாமி
வி. சிவராமன்
ஏ. என். தாரா
பிரேமா

[5]

தயாரிப்பு குழு

[தொகு]

தயாரிப்பாளர்: தின்ஷா கே.தெஹ்ராணி
இயக்குநர்: ஏ. பீம்சிங்
கதை, வசனம்: மு. கருணாநிதி
இசை: டி. ஆர். பாப்பா
ஒளிப்பதிவு இயக்குநர்: ஜித்தன் பானர்ஜி
ஒளிப்பதிவு: ஜி. விட்டல் ராவ்
ஒலிப்பதிவு மேற்பார்வை: தின்ஷா கே.தெஹ்ராணி
ஒலிப்பதிவு: எம். லோகநாதன்
நடனம்: ஹீராலால், சம்பத்குமார்
கலை: எஸ். அம்மையப்பன்
மேக்கப்: டி. தனகோடி
படப்பிடிப்பு நிலையம்: நியூடோன்[5]

பாடல்கள்

[தொகு]

ராஜா ராணி படத்துக்கு இசையமைத்தவர் டி. ஆர். பாப்பா. பாடல்களை இயற்றியவர்கள்: மு. கருணாநிதி, ஏ. மருதகாசி, வில்லிபுத்தன், எம். கே. ஆத்மநாதன், விவேகன் ஆகியோர். பாடியவர்கள்: என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோர். பின்னணி பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எம். ராஜா, எஸ். சி. கிருஷ்ணன், எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, என். எல். கானசரஸ்வதி, டி. வி. இரத்தினம் ஆகியோர்.[3]

எண். பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு (நி:செக்)
1 யூடியூபில் வாங்க வாங்க ... இன்றிரவு மிக நன்றிரவு எம். எல். வசந்தகுமாரி மு. கருணாநிதி 03:30
2 யூடியூபில் சிரிப்பு, இதன் சிறப்பை என். எஸ். கிருஷ்ணன் & டி. ஏ. மதுரம் ஏ. மருதகாசி 03:12
3 யூடியூபில் மணிப்புறா, புத்தம் புது எம். எல். வசந்தகுமாரி மு. கருணாநிதி 02:52
4 யூடியூபில் கண்ணற்ற ... பூனை கண்ணை மூடிக்கொண்டால் எஸ். சி. கிருஷ்ணன் மு. கருணாநிதி 03:28
5 யூடியூபில் காணாத இன்பமெல்லாம் கண்டிடலாம் சீர்காழி கோவிந்தராஜன் & டி. வி. இரத்தினம் வில்லிபுத்தன் 02:44
6 யூடியூபில் சொல்லாலே வீணானதே ஜிக்கி ஏ. மருதகாசி 03:06
7 யூடியூபில் ஆனந்த நிலை பெறுவோம்
தலைப்பு பின்னணி பாடல்
எம். எல். வசந்தகுமாரி & என். எல். கானசரஸ்வதி எம். கே. ஆத்மநாதன் 02:56
8 யூடியூபில் திருமணம் ஆகாத பெண்ணே டி. வி. இரத்தினம் விவேகன் 02:46
9 யூடியூபில் திரை போட்டு நாமே ஏ. எம். ராஜா & ஜிக்கி ஏ. மருதகாசி 03:07

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1956 – ராஜா ராணி". lakshmansruthi.com. Archived from the original on 2021-05-08. பார்க்கப்பட்ட நாள் 2016-10-07.
  2. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  3. 3.0 3.1 ராஜா ராணி
  4. . 
  5. 5.0 5.1 திரைப்பட தலைப்பு

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_ராணி_(1956_திரைப்படம்)&oldid=3959136" இலிருந்து மீள்விக்கப்பட்டது