ராஜா ராணி–2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜா ராணி–2
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
மூலம்என் கணவன் என் தோழன்
இயக்கம்பிரவீன் பேனாட்
நடிப்பு
 • சித்து
 • ஆல்யா மானசா
 • பிரவீனா
முகப்பு இசைஇளையவன்
முகப்பிசைஇளையவன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்வெங்கடேஷ் பாபு
குளபல் வில்லஜெர்ஸ்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
தொகுப்பு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்12 அக்டோபர் 2020 (2020-10-12) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்பாக்கியலட்சுமி
தொடர்புடைய தொடர்கள்என் கணவன் என் தோழன்

ராஜா ராணி–2 என்பது 12 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குடும்பக்கதைக்களம் கொண்ட நாடகத் தொடர் ஆகும்.[1][2]

இந்த தொடர் இந்தி மொழித் தொடரான என் கணவன் என் தோழன் என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரில் 'ஆல்யா மானசா' என்பவர் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக 'சித்து' என்பவர் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். முதல் பருவத்தை இயக்கிய 'பிரவீன் பேனாட்' என்பவரே இந்த பருவத்தையும் இயக்குகிறார்.[3]

கதைச்சுருக்கம்[தொகு]

சிறுவயதிலிருந்து காவல் அதிகாரியாக வரவேண்டும் என்ற கனவுடன் வளரும் சந்தியா. சர்தார்ப சூழ்நிலையால் இனிப்புக்கடைக்கரான சரவணன் என்பவரை திருமணம் செய்கின்றார். சரவணன் படிக்கவில்லை தாய் மீது அதிக பாசமும் மரியாதையும் கொண்டவன். இவளின் புகுந்த வீடு பாரம்பரியம் மிக்க குடும்பமாக இருந்ததால் தன் கனவு உடைந்துவிட்டதாக எண்ணி சந்தியா வருத்தப்பட்டார். பிறகு அவரது கனவை அறியும் சரவணன் அவருக்கு உறுதுணையாக இருந்தார். பல தடைகளைக் கடந்து தனது கணவனின் துணையுடன் காவலர் பயிற்சியில் எப்படி வெற்றி பெறுகின்றார் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • சித்து - சரவணன்
 • ஆல்யா மானசா - சந்தியா
 • பிரவீனா - சிவகாமி (சரவணனின் தாய்)

துணைக் கதாபாத்திரங்கள்[தொகு]

 • -- - சிவகுமார் (சந்தியாவின் தந்தை, இந்த தொடரில் இறந்து விட்டார்)
 • காயத்ரி பிரியா - சரண்யா (சந்தியாவின் தாய், இந்த தொடரில் இறந்து விட்டார்)
 • மணி - மணி (சந்தியாவின் சகோதரன்)
 • நிஹாரிகா ராஜ்ஜித் - ஜனனி (மணியின் மனைவி)
 • சைவம் ரவி - --- (சரவணனின் தந்தை)
 • வைஷ்ணவி சுந்தர் - பார்வதி (சரவணனின் இளைய சகோதரி)
 • பாலாஜி தியாகராஜன் - செந்தில் (சரவணனின் முதலாவது இளைய சகோரன்)
 • அர்ச்சனா - அர்ச்சனா (செந்திலின் மனைவி)
 • பரதோஷ் - கதிர் (சரவணனின் இரண்டாவது இளைய சகோரன்)
 • நவ்யா சுஜி -

நடிகர்களின் தேர்வு[தொகு]

இந்த தொடரில் கதாநாயகியாக ராஜா ராணி–1 முதல் பருவத்தில் நடித்த ஆல்யா மானசா என்பவரே சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் தொடர் இதுவாகும்.[4][5][6] இவருக்கு ஜோடியாக திருமணம் தொடர் புகழ் சித்து என்பவர் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சரவணனின் தாய் கதாபாத்திரத்தில் பிரவீனா என்பவர் நடிக்கின்றார்.

ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]

இந்த தொடர் முதலில் 12 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 ஒளிபரப்பானது. பின்னர் இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதும் 11 சனவரி 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் 'பாவம் கணேஷன்' என்ற தொடர் ஒளிபரப்பாகிறது.[7]

ஒளிபரப்பான திகதி திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
12 அக்டோபர் 2020 - 9 சனவரி 2021 மாலை 6:30 மணிக்கு
11 சனவரி 2021 - ஒளிபரப்பில் இரவு 9:30 மணிக்கு

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2020 4.4% 6.7%
2021 7.4% 10.4%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "ALYA MANASA'S LATEST SERIAL SHOOTING SPOT PIC WITH THE MAIN CAST". Behindwoods.com.
 2. "Raja Rani Season 2 Premiere Today Today's Episode 12th October 2020". socialtelecast.com.
 3. "New Tamil daily soap Raja Rani 2 to premiere soon". timesofindia.indiatimes.com.
 4. "Alya Manasa acting in a new tv serial on Vijay Tv, here are the details". gizmosheets.com. 2020-10-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-10-17 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Actress Alya Manasa to entertain fans soon; watch rehearsal video". The Times of India.
 6. "குழந்தை பிறந்ததிற்கு பின் ஆல்யா மானஸா நடிக்கும் தொடர் – புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட அப்டேட்". Behindtalkies.com.
 7. "Bigg Boss 4 Time Change". www.behindwoods.com.

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 9:30 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி ராஜா ராணி–2 அடுத்த நிகழ்ச்சி
பிக் பாஸ் தமிழ் 4
(4 அக்டோபர் 2020 - 10 சனவரி 2021)
-
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி ராஜா ராணி–2 அடுத்த நிகழ்ச்சி
பாக்கியலட்சுமி பாவம் கணேஷன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_ராணி–2&oldid=3569743" இருந்து மீள்விக்கப்பட்டது