ராஜா மகேந்திர பிரதாப் சிங்
ராஜா மகேந்திர பிரதாப் சிங் | |
---|---|
1979 இல் வெளிவந்த ராஜா மகேந்திர பிரதாப் சிங்கின் அஞ்சல் தலை | |
அதிபர் இந்திய இடைக்கால அரசு | |
பதவியில் 1 டிசம்பர் 1915 — ஜனவரி 1919 | |
பதவியில் 1957–1962 | |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் இந்தியப் பொதுத் தேர்தல், 1957 – இந்தியப் பொதுத் தேர்தல், 1962 | |
முன்னையவர் | ராஜா கிரிராஜ் சரன் சிங் (சுய) |
பின்னவர் | சௌதரி திகம்பார் சிங் (இந்திய தேசிய காங்கிரசு) |
தொகுதி | மதுரா மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 டிசம்பர் 1886 மகாமாயா நகர் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணம் |
இறப்பு | 29 ஏப்ரல் 1979 (வயது 92) |
தேசியம் | இந்தியர் |
முன்னாள் கல்லூரி | மிண்டோ சர்கிள் |
ராஜா மகேந்திர பிரதாப் சிங் (1 டிசம்பர் 1886 – 29 ஏப்ரல் 1979) என்பவர் இந்திய விடுதலை செயல்பாட்டாளர், பத்திரிக்கையாளர், இந்திய இடைக்கால அரசின் அதிபராக நாடு கடந்த அரசை நிறுவியவராவார். 1932 இல் அமைதிக்கான நோபல் பரிசிற்காகப் பரிந்துரைக்கப்பட்டார்.[1] 2021 செப்டம்பர் 14 இல் இவரது பெயரில் அலிகர் நகரில் புதிய பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.[2]
இளமைக் காலம்
[தொகு]1886 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் நாள் உத்தரப் பிரதேசத்தின் ஹத்தராஸ் மாவட்டத்தில் ஜாட் குடும்பத்தில் பிறந்தார். கன்சியாம் சிங்கின் மூன்றாவது மகனாகப் பிறந்தாலும் மூன்று வயதில் ராஜா ஹரிநாராயண் சிங் இவரைத் தத்தெடுத்தார்.[3] 1895 இல் அலிகர் அரசுப் பள்ளியிலும் மிண்டோ சர்கிளில் (அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முந்தைய பெயர்) கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.[3] பெல்வீர் கௌர் என்பவரை 1902 இல் மணந்தார்.
விடுதலைப் போராட்டம்
[தொகு]சுதேசி இயக்கத்தில் கலந்து கொண்ட பல்வேறு தலைவர்களைச் சந்தித்ததன் மூலம் நாட்டுப் பற்று உணர்வு கொண்டார். தாதாபாய் நவ்ரோஜி, பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால் ஆகியோரின் கருத்துகள் தாக்கத்தை ஏற்படுத்தின, இதன் காரணமாக வெளிநாட்டு ஆடைகளை எரிக்கும் இயக்கத்தைத் தொடங்கினார்.[4]
வீரேந்திரநாத் சட்டோபாத்யாய செயல்பாடுகள் குறித்து சியாம்ஜி கிருஷ்ண வர்மா மற்றும் ஹர் தயால் மூலம் அறிந்து கொண்டார். ஆப்கான் எல்லைவழியாக இராணுவ நடவடிக்கையினால் இந்தியாவினைக் கைப்பற்றத் திட்டமிட்டனர். பிரித்தானியப் பேரரசினை வீழ்த்த பல்வேறு ஐரோப்பிய ரஷ்ய அரசியல்வாதிகளுடன் நட்பு கொண்டிருந்தார். இவரது சொத்துக்களை முடக்கி, பிடித்துத் தருவோருக்குப் பரிசினை பிரித்தானிய அரசு அறிவித்தது. 1925 இல் ஜப்பான் இடம்பெயர்ந்தார்.
இந்திய இடைக்கால அரசு
[தொகு]இந்திய விடுதலைக்காக 1915 இல் இவரது பிறந்தநாளில் காபுல் நகரில் முதலாவது நாடு கடந்த அரசை உருவாக்கினார். இவர் அதிபராகவும், பர்கதுல்லா பிரதமராகவும், மௌலானா உள்துறை அமைச்சராகவும் பதவியேற்று பிரித்தானிய அரசின் மீது ஜிகாத் போரை அறிவித்தனர்.[5] ஆனால் போதிய பலமில்லாததால் வெற்றி பெறமுடியவில்லை. 32 ஆண்டுகள் கழித்து, சிட்டி ஆப் பேரீஸ் கப்பலில் 1946 ஆகஸ்ட் 9 ஆம் நாள் சென்னைவழியாக இந்தியா வந்தடைந்தார்.
1957 மக்களவை தேர்தல்
[தொகு]1957 இல் இரண்டாவது மக்களவைத் தேர்தலில் மதுரா மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்றார்.[6]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சுயேட்சை | ராஜா மகேந்திர பிரதாப் [7][8] | 95,202 | 40.68 | ||
காங்கிரசு | சௌதரி திகம்பார் சிங் | 69,209 | 29.57 | ||
சுயேட்சை | பூரன் | 29,177 | |||
பாரதீய ஜனசங்கம் | அடல் பிகாரி வாச்பாய் | 23,620 | 10.09 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Nomination Database for the Nobel Prize in Peace, 1901–1955. nobelprize.org
- ↑ "அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலை: அடிக்கல்". தினம்மணி. https://www.dinamani.com/india/2021/sep/13/raja-mahendra-pratap-singh-university-in-aligarh-modi-lays-the-foundation-3698433.html. பார்த்த நாள்: 4 December 2021.
- ↑ 3.0 3.1 Bhattacharya, Abinash Chandra (1962). Bahirbharate Bharater Muktiprayas (in Bengali), Kalikata:Firma K.L.Mukhopadhyaya, pp. 9–24
- ↑ "இந்தியாவின் முதலாவது நாடு கடந்த அரசு உருவாவதற்கு காரணமாக இருந்தவர்". நியூ இந்தியா சமாச்சார் (2). https://newindiasamachar.pib.gov.in/WriteReadData/flipbook/2021/Dec/1st/tamil/index.html. பார்த்த நாள்: 4 December 2021.
- ↑ Contributions of Raja Mahendra Prata by ஹக்கீம் சையத் ஜில்லூர் ரஹ்மான், International Seminar on Raja Mahendra Pratap & Barkatullah Bhopali|பர்கதுல்லா, Barkatulla University, Bhopal, 1–3 December 2005.
- ↑ Statistical Report on General Elections, 1957 to the Second Lok Sabha. Election Commission of India (1957)
- ↑ "General Election, 1957 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
- ↑ साहिल, अफ़रोज़ आलम (1 October 2019). "बीजेपी को जिन राजा महेंद्र प्रताप पर प्यार आ रहा है, उन्होंने वाजपेयी को हराया था". ThePrint Hindi. https://hindi.theprint.in/opinion/new-love-bjp-raja-mahandra-pratap-singh-had-defeated-vajpayee/87987/.
வெளியிணைப்புகள்
[தொகு]- https://www.rajamahendrapratap.com/ பரணிடப்பட்டது 2019-05-11 at the வந்தவழி இயந்திரம்
- https://web.archive.org/web/20040910013359/http://www.punjabiamericanheritagesociety.com/paf/paf2000/ghadar_ki_goonj.html
- http://www.punjabilok.com/misc/freedom/history_of_the_ghadar_movement8.htm
- Mahendra Pratap materials at the South Asian American Digital Archive (SAADA)
- http://shodh.inflibnet.ac.in:8080/jspui/bitstream/123456789/508/2/02_introudction.pdf