உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜா சூலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜா சூலான்
Raja Chulan Muhammad Shah II
Raja Chulan Sultan Muhammad Shah II
ராஜா ஈலீர் பேராக்
ராஜா சூலான் (இடதுபுறம்) (1920)
25-ஆவது பேராக் சுல்தான்
ஆட்சிக்காலம்1919 - 10 ஏப்ரல் 1933
முடிசூட்டுதல்1 திசம்பர் 1920
முன்னையவர்சுல்தான் யூசோப் இசுடின் சா (Sultan Yussuff Izzuddin Shah)
பின்னையவர்பேராக் சுல்தான் இட்ரிஸ் இசுகந்தர் சா II
பிறப்புராஜா சூலான் ராஜா அப்துல்லா
(1869-07-01)1 சூலை 1869
தஞ்சோங் பெரம்பாங் பேராக்
இறப்பு22 திசம்பர் 1922(1922-12-22) (அகவை 80)
கோலாகங்சார், பேராக்
புதைத்த இடம்11 ஏப்ரல் 1933
துணைவர்ராஜா அஜா பூத்தே கல்சோம்
குழந்தைகளின்
பெயர்கள்
ராஜா சைனல் அசுமான் சா; ராஜா சைனியா அசூன் சா; ராஜா கிமாஸ்; ராஜா அஜா மத்ரா; ராஜா அமினா; ராஜா சான்; ராஜா அமிரா
பெயர்கள்
பேராக் சுல்தான் ராஜா சூலான்
சுல்தான் இரண்டாம் முகமது சா
பட்டப் பெயர்
(Raja Di-Hilir Perak Raja Hajji Sir Chullan Ngah Mehammid Shah ibni Amarhum Sultan Abdullah Muhammad Shah II Habibullah)
மரபுகெராபாட் டி ராஜா பேராக்
(Kerabat Diraja Perak)
தந்தைசுல்தான் அப்துல்லா முகமட் சா II
தாய்ராஜா பெரம்புவான் அம்புவான் பெசார்
மதம்இசுலாம்

ராஜா சூலான் அல்லது பேராக் சுல்தான் ராஜா சூலான்; (ஆங்கிலம்: Raja Chulan; மலாய்: Raja Chulan ibni Sultan Abdullah Muhammad Shah II); (1 சூலை 1869 – 10 ஏப்ரல் 1933) என்பவர் பேராக் மாநிலத்தின் 25-ஆவது சுல்தான் ஆவார். இவரின் தந்தையின் பெயர் சுல்தான் அப்துல்லா முகமட் சா II.

இவர் மலாக்கா உயர்நிலைப் பள்ளி (Malacca High School); கோலா கங்சார் மலாய் கல்லூரி (Malay College Kuala Kangsar); மற்றும் சிங்கப்பூர் இராபிள்ஸ் கல்வி நிலையம் (Raffles Institution) ஆகியவற்றில் தம் உயர்நிலைக் கல்வியைப் பெற்றார்.

1896 சூலை 1-ஆம் தேதி, பிரித்தானிய அதிகாரிகள்; மற்றும் பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் பகாங் சுல்தான்களுடன் இணைந்து, மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் அமைப்பை உருவாக்கினார்.[1] இந்த மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் எனும் அமைப்பில் இருந்துதான் மலாயா ஒன்றியம்; மற்றும் தற்போதைய மலேசியா கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டன.[2][3]

வாழ்க்கை

[தொகு]

1896-ஆம் ஆண்டு, லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தின் உதவி மாவட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

1911-ஆம் ஆண்டில், ராஜா சூலான், மலாயா மாநிலங்களில் பல முக்கியமான நிர்வாகப் பதவிகளை வகித்த பின்னர் மலேசியப் பொதுச் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் அவர் 1924-இல் மலாயா கூட்டாட்சி சட்டக் குழுவின் (Federal Law Committee) உறுப்பினரானார்.

மலாய் மக்களின் பொருளாதார நிலையையும், குடிமைப் பணியில் அவர்கள் பெறும் வேலை வாய்ப்புகளையும் மேம்படுத்துமாறு ராஜா சூலான் பிரித்தானியர்களை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். பிரித்தானிய குடியேற்றவிய காலத்தில் மலாய் மக்களின் பொருளாதார நிலை மற்றும் குடிமைப் பணிக்கான வாய்ப்புகளை மேம்படுத்தியதற்காக இவர் நினைவு கூரப்படுகிறார்.[4] 1925-ஆம் ஆண்டில் இவருக்கு ஐக்கிய இராச்சியத்தின் CMG செயிண்ட் மைக்கேல் விருது வழங்கப்பட்டது.[5]

சுல்தான் அப்துல்லா முகமது சா II

[தொகு]
சுல்தான் அப்துல்லா முகமது சா II

ராஜா சூலானின் தந்தை சுல்தான் அப்துல்லா முகமது சா II மலேசிய வரலாற்றில் நன்கு அறியப்பட்டவர்; மற்றும் பேராக் மாநிலத்தின் 26-ஆவது சுல்தான் ஆவார்.

பேராக் மாநிலப் பாடலான சுல்தானின் காலத்தை இறைவன் நீட்டிக்கட்டும் (மலாய்: Allah Lanjutkan Usia Sultan) எனும் பாடலை உருவாக்குவதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். இந்தப் பாடல் தற்போது நெகாராகூ எனும் மலேசிய நாட்டின் தேசியப் பாடலாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஜேம்ஸ் பர்ச் கொலை

[தொகு]

சுல்தான் ராஜா அப்துல்லா பேராக் மாநிலத்தை ஆட்சி செய்த காலத்தில், இவருக்கும் பேராக் மாநிலத்தின் முதல் பிரித்தானிய முதல்வரான ஜேம்ஸ் பர்ச்சிற்கும் இடையே அதிக அளவில் பதற்றங்கள் நிலவி வந்தன.[6]

1875-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி மகாராஜா லேலாவின் சீடர்களால் ஜேம்ஸ் பர்ச் கொல்லப்பட்டார். மகாராஜா லேலாவின் சீடர்களில் ஒருவரான செபுண்டம் (Sepuntum) என்பவர் ஜேம்ஸ் பர்ச்சை ஈட்டியால் குத்திக் கொன்றார்.[7] கொலைக்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்பட்ட பேராக் சுல்தான் அப்துல்லா முகமது சா II, பேராக் சுல்தான் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் அவர் சீசெல்சு (Seychelles) நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார்.

ராஜா சூலான் நினைவுகள்

[தொகு]

ராஜா சூலானின் நினைவாக மலேசியாவில் சில அடையாளச் சின்னங்கள் உள்ளன. ராஜா சூலான் எனும் பெயரில் 8  MR7  ராஜா சூலான் மோனோரெயில் நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது.[8]

கோலாலமபூரில் ஒரு சாலைக்கு ராஜா சூலான் சாலை (Jalan Raja Chulan) என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சாலையின் பழைய பெயர் வெல்ட் சாலை (Weld Road).

ராஜா சூலான் தேசிய உயர்நிலைப் பள்ளி

[தொகு]

கோலாலம்பூர் மாநகரின் கான்லே சாலையில் உள்ள கோலாலம்பூர் அரச சூலான் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிக்கு (The Royale Chulan Kuala Lumpur) ராஜா சூலானின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.[9]

பேராக், ஈப்போ, தாமான் செம்பாக்கா, டெய்ரி சாலையில் உள்ள ராஜா சூலான் தேசிய உயர்நிலைப் பள்ளி எனும் பள்ளிக்கும் ராஜா சூலானின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

மேற்கோள்

[தொகு]
  1. "SIR ROGER HALL NEW F.M.S. CHIEF JUSTICE". The Straits Times. 6 September 1937. p. 12.
  2. Simon C. Smith, "Rulers and Residents: British Relations with the Aden Protectorate, 1937–59", Middle Eastern Studies, Vol. 31, No. 3 (Jul., 1995), p. 511.
  3. "Samuel Joyce THOMAS". homepages.ihug.co.nz. Archived from the original on 13 அக்டோபர் 2015.
  4. "The Station is named after Raja Chulan, a member of the Perak royal family. He was recognized for improving the Malay people's economical standing and accessibility to civil service during British colonial era". mrt.com.my. Retrieved 9 February 2025.
  5. "No. 33053". இலண்டன் கசெட் (Supplement). 2 June 1925. p. 3767.
  6. Winstedt, Richard Olof (1962). A History of Malaya (in ஆங்கிலம்). Singapore: Maricon and sons. p. 226.
  7. Winstedt, Richard Olof (1962). A History of Malaya (in ஆங்கிலம்). Marican. p. 225.
  8. "Maharajalela Monorail station is a Malaysian elevated monorail train station that forms a part of KL Monorail line located in Kuala Lumpur and opened alongside the rest of the train service on August 31, 2003". klia2.info. 9 October 2017. Retrieved 6 February 2025.
  9. The Royale Chulan Kuala Lumpur

வெளியீடுகள்

[தொகு]
  • மிசா மெலாயூ - Misa Melayu; Richard Olaf Winstedt. Singapore: Methodist Publishing House, 1919 (reissued in 1966 by Pustaka Antara, Kuala Lumpur).

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_சூலான்&oldid=4368046" இலிருந்து மீள்விக்கப்பட்டது