ராஜா கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
raaஜா கிருஷ்ணமூர்த்தி
Raja Krishnamoorthi
Raja Krishnamoorthi official photo.jpg
இலினொய் மாநிலத்தின் 8-வது மாவட்டக் கீழவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சனவரி 3, 2017
முன்னவர் டம்மி டக்வர்த்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 19, 1973 (1973-07-19) (அகவை 45)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சி மக்களாட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பிரியா
பிள்ளைகள் 3
இருப்பிடம் சாம்பூர்க், இலினொய், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு சட்டப் பள்ளி
பணி தொழிலதிபர், சட்டவறிஞர்
இணையம் இணையதளம்

ராஜா கிருஷ்ணமூர்த்தி (Raja Krishnamoorthi, பிறப்பு: சூலை 19, 1973) இந்திய அமெரிக்கத் தொழிலதிபரும், அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தின் 8வது மாவட்டத்துக்கான அமெரிக்கக் கீழவை உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

கிருஷ்ணமூர்த்தி இந்தியாவில் தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர். புது தில்லியில் 1973 இல் பிறந்தவர்.[1] பிறந்த மூன்று மாதத்தில் இவரது குடும்பம் தந்தையின் மேற்படிப்புக்காக நியூயார்க், பஃபலோ நகருக்குக் குடிபெயர்ந்தது.[2] 1980இல் இலினொய் மாநிலத்திற்குக் குடிபெயர்ந்தது.[2] அவரது தந்தைக்கு அங்குள்ள பிராட்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி கிடைத்தது.[3]

கிருஷ்ணமூர்த்தி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று இயந்திரப் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் ஆர்வார்டு சட்டப் பள்ளியில் படித்து சட்டவறிஞரானார்.

அரசியலில்[தொகு]

2010 இல் கிருஷ்ணமூர்த்தி இலினொய் மாநிலத்தின் மக்களாட்சிக் கட்சி அதிகாரிகளுக்கான வேட்பாளராகப் போட்டியிட்டு 1% வாக்குகளால் தோற்றார்.[4][5] 2012 ஆம் ஆண்டில் இலினொய் மாநிலத்தின் 8-வது மாவட்டக் கீழவை உறுப்பினராகப் போட்டியிட்டு டம்மி டக்வர்த் என்பவரிடம் தோற்றார்.[3] 2016 மார்ச்சில் நடந்த முதல்நிலைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4] 2016 நவம்பர் இறுதித் தேர்தலில் கிருஷ்ணமூர்த்தி 58.1% வீத வாக்குகளைப் பெற்று குடியரசுக் கட்சி வேட்பாளர் பீட் டிச்சியானி என்பவரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இலினொய் மாநில நடுத்தரக் குடும்பத்தினருக்குத் தரமான வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து இவர் போட்டியிட்டார்.[6][7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sharma, Sheenu (November 9, 2016). "Raja Krishnamoorthi becomes first Indian-American to enter US Congress".
  2. 2.0 2.1 Bhattacharyya, Anirudh (August 29, 2016). "Raja Krishnamoorthi: First-ever Hindu of Indian origin may make it to the US House of Representatives". firstpost.com. பார்த்த நாள் November 7, 2016.
  3. 3.0 3.1 Gonzales, Nathan L. (31 மார்ச் 2016). "Faces of the 115th Congress: Raja Krishnamoorthi". Roll Call. பார்த்த நாள் 7-11-2016.
  4. 4.0 4.1 "Raja Krishnamoorthi Registers Big Win in Congressional Primary". Chicago Tribune (17 மார்ச் 2016). பார்த்த நாள் 7-112016.
  5. Mack, Kristen (3-02-2010). "Democratic comptroller race settled". Chicago Tribune (Chicago: Tribune Co.). http://www.chicagotribune.com/news/elections/ct-met-democratic-comptroller-race-20100203,0,4654246.story. பார்த்த நாள்: 7-11-2016. 
  6. "New Member: Democrat Raja Krishnamoorthi Elected in Illinois’ 8th District" (9-11-2016).
  7. "Illinois U.S. House 8th District Results: Raja Krishnamoorthi Wins".
  8. "Krishnamoorthi Vows to Fight for Middle Class in Congress" (in en). NBC Chicago. http://www.nbcchicago.com/news/local/Krishnamoorthi-Vows-to-Fight-for-the-Middle-Class-in-Congress-398489461.html. 

வெளி இணைப்புகள்[தொகு]