ராஜாமகள்
ராஜாமகள் | |
---|---|
![]() | |
வகை | |
இயக்குனர் | விஜய பாஸ்கர் (2019-2020) ஷிவா (2020-தற்போது) |
நடிப்பு |
|
இசை | சேகர் சாயி பரத் |
நாடு | இந்தியா |
மொழிகள் | தமிழ் |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | ஆர்.கே மனோகர் |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
தயாரிப்பு நிறுவனங்கள் | ராஜம்மாள் படைப்புகள் |
ஒளிபரப்பு | |
சேனல் | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 28 அக்டோபர் 2019 ஒளிபரப்பில் | –
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | ரக்த சம்பந்தம் |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
ராஜாமகள் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 28 அக்டோபர் 2019 முதல் பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இரு குடும்ப வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் குடும்பம் மற்றும் பாச பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடரில் ஐரா மற்றும் ரியாஸ் நடிக்கிறார்கள். [1]
இது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரக்த சம்பந்தம் என்ற தெலுங்கு மொழி தொடரின் மறு தயாரிப்பாகும்.[2]
கதைச்சுருக்கம்[தொகு]
அண்ணன் தங்கையான சிவகாமிக்கு ஆண் குழந்தையும் அண்ணன் ராஜனின் மனைவிக்கு பெண் குழந்தையும். பிறக்கின்றது. பெண்குழந்தையை வெறுக்கும் அண்ணி இதனால் தனது குழந்தையை யாருக்கும் தெரியாமல் மாத்தி வைக்கின்றார் சிவகாமி. குழந்தைகள் வளந்து பெரியவர்கள் ஆனதும் அவர்களின் குடும்பத்தில் ஏற்படும் முரண் காரணமாக உருவாகும் பிரச்னைகளை மையமாக வைத்து காதல், பொறாமை, தியாகம் என இந்தத் தொடர் நகர்கிறது.
நடிகர்கள்[தொகு]
முதன்மை கதாபாத்திரம்[தொகு]
- ரியாஸ் - விஷ்வா (தத்தி), (அமைதியான பையன்)
- ஐரா அகர்வால் - துளசி, (குறும்பு மற்றும் துணிச்சலான பெண்)
- சத்திய சாயி - கனகா, (விஷ்வாவின் வருங்கால மனைவி)
துணை கதாபாத்திரம்[தொகு]
- வனஜா - பைரவி, (விஷ்வாவின் வளர்ப்பு தாய் மற்றும் துளசியின் உண்மையான தாய்)
- காயத்ரி பிரியா - சிவகாமி, (துளசியின் வளர்ப்பு தாய் மற்றும் விஷ்வாவின் உண்மையான தாய்)
- பரத் கல்யாண் - ராஜ ராஜன் (ராஜா), (பைரவியின் கணவர் மற்றும் சிவகாமியின் சகோதரர்)
- பரதன் சிவா (2019-2020) → யுவன்ராஜ் நேத்ரன் (2020-தற்போது) - பார்த்திபன், (சிவகாமியின் கணவர்)
- சாந்தி வில்லியம்ஸ் (2019-2020) → பாலாம்பிகா (2020-தற்போது) - காஞ்சனா, (கனகா லட்சுமியின் பாட்டி)
- மீனாட்சி (2019-2020) → விசாலாட்சி மணிகண்டன் (2020) → மீண்டும் மீனாட்சி (2020-தற்போது) - சத்தியவதி, (பைரவியின் வீட்டு வேலைக்காரி)
- ஸ்ரிதிக் ஸ்ரீராம் - ஸ்ரீராம், (விஷ்வாவின் நண்பர்)
- ரேகா நாயர் - ரேணுகா தேவி, (மாவட்ட அமைச்சர்)
சிறப்புத் தோற்றம்[தொகு]
நடிகர்களின் தேர்வு[தொகு]
இந்த தொடரில் துளசியாக ஐரா நடிக்கின்றார்[3] இவர் கண்மணி, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் ரியாஸ் நடிக்கிறார். வனஜா, பரத் கல்யாண், காயத்ரி பிரியா, யுவன்ராஜ் நேத்ரன் ஆகியோரும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சர்வதேச ஒளிபரப்பு[தொகு]
- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் ((ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மதிப்பீடுகள்[தொகு]
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2019 | 2.6% | 3.3% |
2020 | 1.9% | 2.6% |
0.0% | 0.0% |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "மாஜி, ‘மிஸ் தமிழ்நாடு’... இப்போ, ‘ராஜா மகள்’". tamil.indianexpress.com.
- ↑ "Zee Tamil strengthens afternoon band with new fiction show – Raja Magal". zeenews.india.com.
- ↑ "Iraa Agarwal all excited about her new show Raja Magal; read post". timesofindia.indiatimes.com.
வெளி இணைப்புகள்[தொகு]
ஜீ தமிழ் : திங்கள் - வெள்ளி 2:30 PM மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | ராஜாமகள் (ஒளிபரப்பில்) |
அடுத்த நிகழ்ச்சி |
செம்பருத்தி மறுஒலிபரப்பு |
- |
- ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடரை அடிப்படையாகக் கொண்ட தமிழ் மொழித் தொலைக்காட்சி தொடர்கள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்